Advertisment

'1957-62 தேர்தலில் காங்கிரஸ் மீது திமுக வைத்த குற்றச்சாட்டு'-அனுபவம் பகிரும் ஐநா கண்ணன்

7

'The accusations levelled by DMK against Congress in the 1957-62 elections' - U.N. Kannan shares his experience Photograph: (election)

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேமுதிக திமுக கூட்டணிக்குள் சென்றுள்ளது. தொடர்ந்து திமுக- காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

Advertisment
இந்நிலையில் ஐ நா அதிகாரி கண்ணன் தமிழக அரசியல் களத்தில் தனக்கு நேர்ந்த அனுபவங்களை நக்கீரன் டிவியில் பகிர்ந்துகொண்டார்.

Advertisment
தமிழக அரசியல் குறித்த உங்கள் பார்வை என்ன?  இதற்கு முன்னால் நடந்த தேர்தல்களில் நீங்கள் கண்ட சுவாரசியமான அனுபவங்கள், சந்தித்த சில நிகழ்வுகளை பகிர முடியுமா?
5
'The accusations levelled by DMK against Congress in the 1957-62 elections' - U.N. Kannan shares his experience Photograph: (election)
என்னுடைய அனுபவம் என்பது ஒரு வாக்காளராதான். பெரிதாக எனக்கு அனுபவம் இல்லைன்னு தான் சொல்ல வேண்டும். ஆனால் ஒவ்வொரு தேர்தலும் திருவிழா மாதிரி நடக்கும். நான் வடசென்னையில் பிறந்தேன். நான் என்னுடைய பள்ளிப்பருவத்தில் இருந்தே பேரணிகளும், ஊர்வலங்களும், ரசிகர் மன்றங்களும், சைக்கிள் பேரணி நடக்கும். ஊர்வலத்தில் கோஷங்கள் எல்லாம் ரொம்ப வேடிக்கையான கோஷங்கள் எல்லாம் வரும். 'அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சு?'  மாண்டவர்கள் போதாதா? நீ ஆண்டது போதாதா? இப்படி எல்லாம் ரொம்ப அழகான வாசகங்கள். அதை எப்படி அவர்கள் உருவாக்குறாங்க என்று நாமெல்லாம் யோசிப்போம்.  பின்னர் பொதுக்கூட்டங்கள் நடக்கும். பொதுக்கூட்டங்களில் வேட்பாளருக்கு ஆதரவாக பேசுபவர்கள்.  நாங்க போய் கேட்போம். ரொம்ப அழகா எந்த காரணத்துக்காக அவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை பற்றியெல்லாம் சொல்லுவார்கள். அந்த வேட்பாளரும் பக்கத்துல நிப்பார். நமக்கு வேண்டிய ஒருவர் இந்த மாதிரி இந்த தேர்தலில் நிற்கிறார்.  உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் கண்டிப்பாக நமக்கு தெரிஞ்சவர் தான் நிற்பார். அதெல்லாம் ஒரு திருவிழா மாதிரி நடந்த காலம் முடிந்து போய்விட்டது.
இன்று சமூக ஊடகங்கள் வந்த பிறகு இன்னைக்கு தேர்தல் முடிவுகளில் சமூக ஊடகங்களின் பங்கு ஒரு பெரும்பங்காக இருப்பதை நாம் பார்க்கிறோம். ஆனால் முதன் முதலாக இந்தியாவில் நடந்த பொதுத்தேர்தல் ஒரு தேர்தல் திருவிழாதான். அது மாதிரி உலகத்தில் வேறு எங்குமே நடந்திருக்காது. கிட்டத்தட்ட ஒரு 75 கோடி மக்கள் போய் வாக்களிப்பது என்பது இந்தியாவில் மட்டுமே நடக்கக்கூடிய ஒரு உலக அதிசயம். 1951- 52ல் தான் இந்தியாவின்  முதல் பொதுத்தேர்தல் நடந்தது. முதல் பொதுத் தேர்தல் 1951 அக்டோபர் 25 தொடங்கி 1952- பிப்ரவரி 21 முடிந்தது. பல கட்டங்களாக நடந்த இந்த தேர்தல். ஏறக்குறைய நான்கு மாதங்கள். இதுதான் நம்ம இதுவரைக்கும் நடந்த தேர்தல்களில் அதிகம் நாள் எடுத்துக்கொண்டு நடந்த தேர்தல். கழுதை மூலமாக வாக்குச்சாவடி பெட்டிகள் எல்லாம் போனதெல்லாம் கூட நாம் பார்த்தோம்.
உட்புறமாக இருக்கக்கூடிய ஊர்கள், கிராமங்கள் அங்கெல்லாம் மின்விளக்கு இல்லை. ஓலை குடிசை எல்லாம் வாக்குச்சாவடியாக இருந்தது. ஆனால் இப்போது  2024 பொதுத்தேர்தல் ஏழு கட்டமாக ஏழு வாரங்களில் முடிந்தது. அதற்கு கிட்டத்தட்ட 20 லட்சம் பாதுகாவலர்கள், அரசு பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். அதாவது ஆயிரக்கணக்கான திருமணங்களை ஒரே நேரத்தில் இந்த நாட்டினுடைய பல்வேறு பகுதிகளில் பல குடும்பத்தார் சேர்ந்து நடத்துகிறார்கள் என்றால் எப்படி இருக்குமோ அந்த மாதிரி நடந்தது. பெரிய அசம்பாவிதம் வன்முறை எதுவும் நடக்காத வகையில் நடந்தது. முன்பெல்லாம் வாக்குச்சாவடிகள் உள்ளே புகுந்து மொத்த பெட்டியையும்  களவாடிக் கொண்டு சென்றதெல்லாம் ஒரு காலத்தில் நடந்தது உண்டு.
பீகார் மாதிரி இடங்களில் நடந்துள்ளது. நம்ம தமிழகத்தில் இந்த மாதிரி எதுவும் நடந்தது கிடையாது எனக்கு தெரிஞ்சு. பல முறைகேடுகள் குறைந்து போயிடுச்சு. 20, 25 ஆண்டுகளாக கர்நாடகத்தில் தொடங்கிய அந்த பழக்கம் இப்போது நம்மிடம் ஒன்றிப் போய் இருக்கு. அது என்னவென்றால் வாக்குக்கு பணம் தருவது. அது முன்னாடியே இருந்தது 1952க்கு பிறகு வந்த தேர்தல்களில் 57 தேர்தலில் 62 தேர்தல்களில் திராவிட முன்னேற்ற கழகத்தினர் காங்கிரஸார் பணம் தருவதாக சொன்னார்கள். பணம் தந்து ஒரு சாமி படத்தின் முன்பாக உங்களை சத்தியம் செய்ய சொல்வார்கள். 1962 தேர்தலில் காஞ்சிபுரத்தில் அண்ணா தோற்று போனார். அப்போதெல்லாம் ஒரு வாக்குக்கு வந்து அதிகபட்ச விலை ஐ ரூபாய். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் முறை அன்றே இருந்தது. ஆனால் பரவலாக இல்லை. இன்னைக்கு கிட்டத்தட்ட ஐந்து வாக்குகளில் ஒரு வாக்கு விலைக்கு வாங்கப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். குறைஞ்சபட்சம் ஐந்து வாக்குகள் விழுகிறது என்றால் அதில் நான்கு தன்னிச்சையாக ஒருவேளை விழலாம். காசு கூட வாங்கி இருக்கலாம் சில பேர். ஆனால் அவர்களே முடிவு செய்து காசு வாங்கிய பிறகும் யாருக்கு போட வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் ஒரு வாக்காவது விலைக்கு வாங்கப்படும் வாக்காக மாறி இருக்கும் ஒரு நிலையை நாம் இங்கே தமிழகத்தில் பார்க்கிறோம். 
Election congress dmk annadurai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe