'Sudden tariff cuts on India' - What is the reason for America's concern? Photograph: (world)
ஆட்சிக்கு வந்த ஓராண்டாகவே அதிரி புதிரியான நடவடிக்கைகளை டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்காவில் 25% வரி விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். ஆனால் இறுதியில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு இந்தியப் பொருட்கள் மீது மேலும் 25% வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் கொடுத்த அறிவிப்பு அதிர்ச்சியை கொடுத்திருந்தது. இதன் மூலம் இந்தியப் பொருட்கள் மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால் இந்தியாவில் இருந்து ஆடை, அணிகலன்கள், இறால் போன்றவை ஏற்றுமதி கடும் பாதிப்பை கண்டது.
இந்தியா மீதான வரி விதிப்பிற்கு காரணம் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்வது தான் என குறிப்பிட்டிருந்த டிரம்ப், இந்தியா ஒரு நல்ல வர்த்தக நண்பனாக இல்லை என்ற கருத்தையும் வெளிப்படையாக தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆசிய நாடுகளிலேயே இந்தியாவுக்குத் தான் அதிக வரியை அமெரிக்கா விதித்திருந்தது. அந்த பட்டியல் படி சீனாவுக்கு 30 சதவீதமும், பாகிஸ்தானுக்கு 19% சதவீதமும் வரி விதிக்கப்பட்டது.
'இந்தியாவுக்கு மேலும் 25% வரிவித்தது அறிவிப்பு துரதிருஷ்டவசமானது. மேலும் நியாயமற்றது. இந்த வரி விதிப்பு அறிவிப்பு மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக கருத்தும் தெரிவித்திருந்தது.
தற்போது கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில். ஐரோப்பிய நாடுகளுக்கு கூடுதல் வரிகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் அமெரிக்க பொருட்கள் மீது கூடுதல் வரிகளை விதிக்க ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமல்லாது ரஷ்யா சீனாவுக்கும் இடையேவும், அமெரிக்காவுக்கும் பதற்றம் அதிகரித்து வருகிறது.
இதனால் இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட வரிகளை 25% என்ற அளவிற்கு குறைக்கப்பட வாய்ப்பிருப்பதாக என அமெரிக்க நிதிச் செயலர் ஸ்காட் பெசன் கூறியுள்ளார். ரஷ்யாவிடமிருந்து பெறப்படும் கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைத்துக் கொண்டால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்காட் பெசன் கூறியுள்ளார். ஆனால் பூடகமாக வந்த செய்தி, ஏராளமான சர்வதேச சிக்கல்களில் அமெரிக்கா சிக்கியுள்ள நிலையில் இந்தியாவுடனான பொருளாதார பதற்றத்தைத் தொடர்வது அவ்வளவு நல்லதாக இருக்காது என நினைத்தே அமெரிக்கா இந்த முடிவை எடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
Follow Us