Skip to main content

உங்கள் நகரம் இந்த லிஸ்டில் உள்ளதா...?

இன்று உலக சுற்றுசூழல் தினம், உலக அளவில் காற்று  மாசடைந்த 20 நகரங்களின் பட்டியலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அந்த இருபது நகரங்களில் 14 நகரங்கள் நம் இந்திய நகரங்கள் ஆகும் கேட்கும் போதே எப்படி இருக்கின்றது. ஆம் உண்மைதான் லக்னோ, பத்ரிநாத், வாரணாசி, கயா, டெல்லி,ஆக்ரா, ஜோத்பூர், பாட்னா, முசாபர்பூர்,பைசாபாத், ஜெய்ப்பூர், ஸ்ரீநகர், குர்கான், பாட்டியாலா என 14 நகரங்கள் காற்று மாசினால் பதிப்பட்டுள்ள நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மனித வளம் அதிகரிக்க அதிகரிக்க மனிதனின் தேவைகளை அதுவும் நவீன தேவைகளை பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்ட அனைத்து தேவைகளிலும் இன்று சொல்லப்போனால் மாசுக்கலே நிறைந்திருக்கின்றது.

 

weather

 

இங்கு ஒரு மனிதனுக்கு ஒரு வாகனம் என்ற கணக்கு விகிதம் சரிப்படுத்த முயற்சிக்கபடுவதில் இருக்கும் ஆர்வத்தைவிட ஒரு மனிதனுக்கு ஒரு மரம் என்ற சராசரியை  ஈடுக்கட்ட எடுக்கப்படும் முயற்சிகள் குறைவே. இப்படி இருக்கும் சூழலில் அழிக்கவே முடியாத பிளாஸ்டிக் பயன்பாடு, வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சு புகை, பெரிய பெரிய தொழிற்சாலைகளில் இருந்துவெளியேறும் நச்சுகள், காற்றில் மட்டுமல்ல நதி, நீர் நிலை என சேரும் ரசாயன கழிவுகள், நகரம் முழுவதும் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் என இதுநாள் வரை ஒன்று சேர்ந்த அனைத்தும் இறுதியில் அழிக்க நினைப்பதும், அழிக்கப்படுவதும் மனித வளத்தைதான். அதுவும் நம்மை போன்ற நடுத்தர அல்லது உயர்ந்து வரும் நாடுகளில் 90 சதவிகிதம் காற்று மாசினாலேயே உயிரிழப்புகள் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கையளித்துள்ளது.  இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் எடுத்துக்கொண்டால் ஒரு வருடத்திற்கு 7 கோடி பேர் மாசுநிறைந்த காற்றை சுவாசிப்பதால் இறந்துபோகின்றனர் எனவும் தெரிவித்துள்ளது. நம்மில் 10 க்கு 9 பேர் மாசு நிறைந்த காற்றை சுவாசிக்கின்றோம் எனவும் கூறியுள்ளது.
 

weather

 

 

 

பிளாஸ்டிக்கை பயன்படுத்தாமல் இருக்க முடியுமா? வாகனங்களை பயன்படுத்தாமல் இருக்க முடியுமா? நியாமான கேள்விதான் ஆனால் அதற்கு இணையான மரங்கள் நடுதல் போன்ற தீர்வுகாரணிகளை மறந்துவிடுகின்றோம் என்பதே பல சூழியல் ஆர்வலர்களின் கருத்து. பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிப்பதென்பது ஒருநாளில் நடக்கப்போவதில்லை, பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்படுவதென்பதும் நடக்காத காரியம்தான் ஆனால் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதென்பது சாத்தியமான ஒன்றே. அடுத்து மரங்கள்,  இன்றுமட்டுமல்ல எல்லா காலகட்டங்களிலும் காற்று மாசு, புவி வெப்பமைடைதல் போன்ற காரணிகளை பற்றி அலசும் பொழுது சுற்றுசூழல் ஆலோசகர்களால் சொல்லப்படும் ஒரே தீர்வு மரங்கள் நடுதல். ஒரு மரம் தனது வாழ்நாளில் வெளியேற்றும் ஆக்சிஜனின் அளவை பணமதிப்பில் கணக்கிட்டால் 15 லட்சம் அப்படியென்றால் ஒவ்வொரு மரமும் தனக்கான வினைப்பயனின்றி ஆக்சிஜனை நமக்கு கொடுத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் அப்படிப்பட்ட மரங்கள்தான் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டு காடுகள் பாலைவனம்மாக்கப்படுகின்றது.

 

 

 

 

நவீன தொழில்நுட்பம் இருக்க வேண்டிய ஒன்றுதான் ஆனால் அதன் நடைமுறை சிக்கல்கள் பற்றி ஸ்டிபன் வில்லியம் ஹாக்கிங் போன்ற விஞ்ஞானிகள்  கூட விளக்கியள்ளனர். அவர் கூற்றுப்படி பார்த்தால் அதீத அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் மனித ஆக்கிரமிப்பு போன்றவைகூட மனித குலத்தை பின்னாளில் அழிக்க வல்லவை என்பதுதான். சூரியினில் இருந்து மூன்றாவது கோளாக உள்ள நம்பூமியில் மட்டும்தான் மனிதன் வாழக்கூடிய சூழல் இருக்கின்றது அதில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம் இனி இன்னொரு உலகத்தை தேடுவது சாத்தியமாகலாம் ஆனால் குடியேறுவது என்பதெல்லாம் காலம்மட்டும் கணிக்கக்கூடிய ஒன்று அப்படியிருக்க எஞ்சியிருக்கும் பூமியையாவது வரப்போகும் தலைமுறைக்கு பாதுகாத்து வைப்பது நம் தலைமுறையின் கடமை.

 

weather

 

 

 

இந்த 14 நகரங்களின் பட்டியலில் வருங்காலத்தில் இன்னொரு நகரம் சேர்க்கப்படக்கூடாதென்பதில் நமது முதல் பார்வை இருக்கவேண்டும். இந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்ட உலக சுகாதார நிறுவனம் இந்தியாவிற்கு கொடுக்கும் தீர்வு ''இந்தியா போன்ற நாடுகள் காற்று மாசை குறைக்க வழிவகை செய்வதை தவிர வேறு வழியில்லை'' என்பதுதான். இன்று உலக சுற்றுசூழல் தினம் இன்றைய நாளில் இந்த 14 நகரங்களின் சுகாதார நிலையை மேம்படுத்த வழிதேடும் நாளாகவும் இனி இந்த பட்டியல் அதிகரிக்க கூடாது என்ற நோக்கில் ஒவ்வொரு மனிதனும் செயல்படக்கூடிய நாளாகவும் இருக்க வேண்டும் என்பதே பல சுற்றுசூழல் ஆர்வலர்களின் கருத்து. மரம் வளர்ப்போம் சுற்றுசூழலை காப்போம் நட்புக்களே...  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்