திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (11-3-2019) காலை 10.00 மணி அளவில், சென்னை, கலைஞர் அரங்கில், தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் - சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

Advertisment

இதில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் - சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் பெரும்பாலானோர் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள். கூட்டத்திற்கு வந்தவர்கள், ''என்னங்க சீட் கிடைச்சிருமா'' என கேட்க, ''உங்க ஆசி இருந்தா கிடைச்சிடும்''முன்னு விளையாட்டாக ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.

District Secretaries Meeting

இந்த கூட்டத்தில் கட்சிக்கு புதுவரவான செந்தில் பாலாஜியும் கலந்து கொண்டார். அவரை பார்ப்பவர்கள், ''அரவக்குறிச்சிக்கு இடைத்தேர்தல் நடத்தனுமுன்னு நம்ம தலைவர் தீர்மானம் போட்டு தேர்தல் ஆணையத்த வலியுறுத்தியிருக்கிறார். இல்லைன்னா கோர்ட்டுக்கு போவோமுன்னு சொல்லியிருக்கிறார். இடைத்தேர்தல் நடந்தால் அரவக்குறிச்சி வேட்பாளர் நீங்கதான், அப்படி இடைத்தேர்தல் நடத்தலைன்னாலும் எம்.பி. தேர்தல்ல நீங்க வேட்பாளர்தாங்க'' என செந்தில்பாலாஜிக்கு கங்ராஜிலேஷன்ஸ் என கைக்குலுக்கினார்கள்.