நேற்று ஒரே நாளில் ரூ. 120 கோடி பட்டப்பகலில் பணப்பட்டுவாடா: தங்க தமிழ்ச்செல்வன் பகீர்
நேற்று (சனிக்கிழமை) ஒரு நாள் மட்டும் அதிமுகவினரால் ஆர்.கே.நகரில் 120 கோடி பணப்பட்டுவாடா நடந்துள்ளது என்று டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.
நக்கீரன் இணையதளத்திடம் பேசிய அவர்,
நேற்று (சனிக்கிழமை) ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடந்தது உண்மை. அப்பட்டமாக பகலில் கொடுத்தார்கள். வெளி மாவட்டங்களில் இருந்து 50 ஆயிரம் பேரை தொகுதிக்குள் இறக்கினார்கள். ஒவ்வொரு பூத்திலும் காலை 11 மணிக்கு பணப்பட்டுவாடாவை தொடங்கியவர்கள், இரவு வரை கொடுத்தார்கள். போலீசாருக்கு போன் பண்ணினாலும் வரவில்லை. போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் போட்டாலும் எடுக்கவில்லை. கமிஷனருக்கு போன் போட்டாலும் வரவில்லை. தேர்தல் கமிசனுக்கு போன் போட்டாலும் வரவில்லை. அனைத்தும் சுட்ச்ஆப். ஆர்.கே.நகரின் நிலைமை அப்படித்தான் இருக்கிறது.
நேற்று (சனிக்கிழமை) ஒரு நாள் மட்டும் அதிமுகவினரால் ஆர்.கே.நகரில் 120 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா நடந்துள்ளது. ஏனென்றால் அதிமுக 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுவிட்டது. தோல்வி பயத்தின் காரணமாக பணப்பட்டுவாடா செய்துள்ளனர். தேர்தலை நிற்பாட்ட வேண்டும் இல்லையென்றால் ஜெயிக்கணும் என்ற முடிவில் அவர்கள் உள்ளனர்.
ஏற்கனவே தேர்தலை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்தலை நிறுத்துவது சரியா? பொதுமக்கள் கோவப்படமாட்டார்களா?
அதனை அவர்கள் (அதிமுக) நினைக்க வேண்டும். நாங்கள் தேர்தலுக்கு தயார். தேர்தலை நடத்துங்கள் என்றுதான் நாங்கள் சொல்லுகிறோம்.
/nakkheeran/media/post_attachments/UltimateEditorInclude/UserFiles/Newsphoto-2017/DECEMBER/17/thangatamilselvan.jpg)
கொருக்குப்பேட்டை மணலி நெடுஞ்சாலையில் நடந்த முற்றுகை
போராட்டத்தின்போது, அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக பணம்
மற்றும் விவரங்களைதங்க தமிழ்ச்செல்வன் காண்பித்த காட்சி.
அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக கூறி புகார் அளித்தீர்களே நடவடிக்கை எடுத்தார்களா?
வெளிமாவட்டத்தில் இருந்து வந்திருந்த 50 ஆயிரம் பேர் உதவியுடன் ஒரு தெருவுக்கு 50 பேர் நின்று கொண்டு பட்டப்பகலிலேயே பணம் கொடுத்துள்ளனர். நாங்கள் 15 இடங்களில் பணம் கொடுத்தவர்களை பிடித்து கொடுத்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை.
ஆர்.கே.நகரில் இன்று ரூபாய் 20 லட்சம் டிடிவி தினகரன் ஆதரவாளர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானதே?
அது உண்மை இல்லை. அது பொய். செய்தியை மட்டும் சொன்னால் எப்படி. ரூபாய் 20 லட்சம் பிடித்தோம் என்றால் அந்த நபர்களை காட்டி வழக்கு பதிவு செய்யுங்கள். ஏன் செய்யவில்லை.
-வே.ராஜவேல்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)