Skip to main content

மீண்டும் வானைத் தொட்ட துபாய்!   

Published on 13/02/2018 | Edited on 14/02/2018

உலகின் மிக உயரமான கட்டிடங்களை தன்னகத்தே கொண்டுள்ள இடம்தான் துபாய். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட ஒரு ஹோட்டல் உலகிலேயே மிக உயரமான ஹோட்டல் என்ற பெருமையை பெற்றுள்ளது.

world tallest hotel

இந்த ஹோட்டல் பெயர் "ஜீவோரா". இப்படிப்பட்ட உயரமான கட்டிடங்கள் மூலம் 2020க்குள் இரண்டு கோடி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க  திட்டமிட்டுள்ளது. கிட்டத்தட்ட கடந்த பத்து வருடங்களாக இந்தப் பெருமையை வேறு யாருக்கும் விட்டுக்கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
     
75 மாடிகள், 528 அறைகள் கொண்ட இந்த ஹோட்டலின் உயரம் 356அடி. இது  2008ஆம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்டிடம் பத்து ஆண்டுகளுக்குப் பின் கடந்த 12ஆம்(12.02.2018) தேதி திறக்கப்பட்டது. இந்த கட்டிடம் தங்க நிற கோபுரத்துடன் கவர்ச்சிகரமாகவும் உள்ளது. இதற்குமுன் உலகிலேயே மிக உயரமான ஹோட்டல் என பெயர் பெற்ற "மேரியாட் மார்க்குயிஸை"விட இது ஒரு அடி உயரமானதாகும்.

இதற்குமுன் இருந்த உலகின் உயரமான ஹோட்டல்களும் துபாயில்தான் உள்ளன. 

world tallest hotel

மேரியாட் மார்க்குயிஸ் -355 மீட்டர் உயரம் 
ரோஸ் ரேஹன் -333 மீட்டர் உயரம் 
புர்ஜ் அல் அரப் -321 மீட்டர் உயரம்  
ஜூமைரா எமிரேட்ஸ் டவர் -309 மீட்டர் உயரம்
தி அட்ரஸ் டவுன் டவுன் துபாய் -306 மீட்டர்
மில்லினியம் பிளாசா -294 மீட்டர்

இதுதவிர உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற பெருமை வாய்ந்த "புர்ஜ் கலிஃபா"வும் துபாயில்தான் உள்ளது.