ADVERTISEMENT

உலகிலேயே மிக அதிகம் படித்தவர் இந்த சிங்!

03:57 PM Oct 12, 2017 | Anonymous (not verified)

உலகிலேயே மிக அதிகம் படித்தவர் இந்த சிங்!

பஞ்சாபில் உள்ள லூதியானா மாவட்டத்தில் இருக்கும் ஜக்ரான் என்ற குட்டி நகரத்தைச் சேர்ந்தவர் டாக்டர் ஹர்டியால் சிங் சைன்பை. இவர்தான் உலகிலேயே மிக அதிகம் படித்தவர். லூதியானா மாவட்டத்தில் உள்ள அகாரா என்ற கிராமத்தில் 1942 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி பிறந்தவர். இதுவரை 21 முதுகலைப் பட்டங்கள் உட்பட மொத்தம் 35 பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.

1.எம்.ஏ., ஆங்கிலம், 2.எம்.ஏ., பஞ்சாபி, 3.எம்.ஏ., பொருளாதாரம், 4.எம்.ஏ., பொது நிர்வாகம், 5.எம்.ஏ., தத்துவம், 6.எம்.ஏ., காந்திய மற்றும் அமைதி ஆய்வுகள், 7.எம்.ஏ.,அரசியல் விஞ்ஞானம், 8.எம்.ஏ.,வரலாறு, 9.எம்.ஏ.,பாதுகாப்பு தந்திரங்கள், 10.எம்.ஏ.,புராதன வரலாறு, கலாச்சாரம், தொல்லியல், 11.எம்.ஏ.,சமூகவியல், 12.எம்.ஏ.,சீக்கியர் ஆய்வுகள், 13.எம்.ஏ.,மத ஆய்வுகள், 14.எம்.ஏ.,மகளிர் ஆய்வுகள், 15.எம்.ஏ.,ஹிந்தி, 16.எம்.ஏ.,இதழியல் மற்றும் மக்கள் தொடர்பு, 17.பிஜிடி., காந்திய ஆய்வுகள், 18.பிஜிடி., அடி கிரந்த் ஆசார்யா, 19.பிஜிடி., மக்கள்தொகை கல்வி, 20.பிஜிடி., மக்கள் தொடர்பு, 21.பிஜிடி., மனித உரிமைகள் மற்றும் கடமைகள், 22.எல்எல்பி., 23.டிப்ளமோ இன் குரு கிரந்த் ஆய்வுகள், 24.டிப்ளமோ ஆஃப் ஆபிஸ் ஆர்கனைசேஷன் அண்ட் பிராசெடியூர், 25.டிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங், 26.ஏஎம்ஐஇ., 27.ஏஎம்ஐஎஸ்இ., 28.சிக்‌ஷா விஷாரத் (பி.எட்.,க்கு சமமானது), 29.டிப்ளமோ இன் மெடிசின் அண்ட் ஹோமியோபதி (தங்கப்பதக்கம்), 30.ஆர்எம்பி (ஹோமியோபதி), 31.ஆர்எம்பி (ஆயுர்வேதம்), 32.ஆயுர்வேத ரத்தன் (பிஏஎம்எஸ்க்கு சமமானது), 33.கியானி., 34.வித்வான்., 35.ஜூனியர் மேனேஜ்மெண்ட் கோர்ஸ்.

21 முதுகலைப் பட்டங்கள் மட்டுமல்ல, 14 இளங்கலை பட்டங்களையும் இவர் பெற்றிருக்கிறார். ஒருவர் ஐ.ஏ.எஸ்., அல்லது ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்றால் ஒரு பட்டம் பெற்றிருந்தால் போதும். ஒரு பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் நிபுணராகவோ பேராசிரியராகவோ ஆக வேண்டுமானால் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தால் போதும்.

இப்படிப்பட்ட நிலையில் படிக்காத பெற்றோருக்கு பிறந்த ஒருவர் இத்தனை பட்டங்களை பெற்றிருப்பது விளையாட்டல்ல. இந்த பட்டங்களுடன் அவர் முடித்த குறுகிய கால படிப்புகள், அல்லது பிற பட்டங்கள் மற்றும் சான்றிதழ்கள், அவருக்கு கிடைத்த விருதுகள், ராணுவ பொறியியல் சேவையில் அவருக்கு கிடைத்த பட்டம் எதுவும் மேற்படி பட்டியலில் சேரவில்லை என்பது முக்கியமான விஷயம் ஆகும்.

முதலில் தனது மாவட்டத்தில் தன்னைக்காட்டிலும் படித்தவர்கள் இல்லை என்ற சாதனையை நிகழ்த்திய சிங், பிறகு மாநிலத்திலேயே தன்னை விட படித்தவர்கள் இல்லை என்ற சாதனையையும், பிறகு இந்தியா, பிறகு உலகம் என்று இவருடைய சாதனை இலக்கு அதிகரித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

படிப்பில் வெற்றி பெற்றதுடன் வாழ்க்கையிலும் உயர்ந்த நிலையை எட்டியிருக்கிறார். இப்போது தனது குழந்தைகள், பேரக்குழந்தைகளுடன் நிம்மதியான ஓய்வை அனுபவித்து வருகிறார். பிள்ளைகளும் மருத்துவர்களாக, வழக்கறிஞர்களாக பணிபுரிகிறார்கள்.

முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதற்கு உதாரணமாக இந்த சாதனையாளர் திகழ்கிறார்.

- ஆதனூர் சோழன்

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT