vijay Photograph: (tvk)
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் மதவெறி அரசியலைத் தூண்டி கலவரத்தை உருவாக்க முயல்வதாக பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகளைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேடையில் பேசிய திருமாவளவன், ''தம்பி விஜய்யும், தம்பி சீமானும் இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளைகள் என்பது அம்பலமாகிவிட்டது, பா.ஜ.கவின் பிள்ளைகள் என்பது அம்பலமாகிவிட்டது. பிராமண கடப்பாரையை கொண்டு திராவிட கோட்டையை இடிப்பேன் என்று சீமான் சொல்கிறார். அந்த தம்பிக்கு நான் சொல்கிறேன். நீங்கள் வெளிப்படையாக வந்துவிட்டீர்கள், பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. நீங்கள் தமிழ் தேசியம் தான் பேசுகிறீர்கள் என்று இவ்வளவு காலம் நாங்கள் நம்பி கொண்டிருந்தோம். இப்போது தான் தெரிகிறது, நீங்கள் இந்து தேசியம் பேசுகிறீர்கள் என்று. நீங்கள் இந்து தேசியம் கூட பேசவில்லை, பிராமண தேசியம் பேசுகிறீர்கள். எவ்வளவு பெரிய ஏமாற்று நடவடிக்கை. பெரியாரை இழிவுப்படுத்துவதும், பெரியாரின் அரசியலை தகர்ப்பதுமா தமிழ் தேசியம்? இரண்டு பேர் தங்களை தாங்களே அடையாளப்படுத்திக் கொண்டார்கள்'' எனப் பேசியிருந்தார்.
இந்நிலையில் நக்கீரனின் சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்ட விசிகவின் சங்கத்தமிழன் இது குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசுகையில்,''கொள்கை ரீதியாக பாஜகவை எதிர்க்கிறேன் என விஜய் சொல்கிறார். திருப்பரங்குன்றத்தை நாங்கள் அயோத்தியை போல் ஆக்குவோம் என சனாதன கும்பல் சொல்லும்போது நீ வாயை மூடிட்டு இருக்கிறாய் என்றால் நீ யார்? அவர் கட்சியில் இருக்கும் நிர்மல் யார் தெரியுமா? நிர்மல் வரலாறு தெரியுமா உங்களுக்கு? நிர்மல் முழுக்க முழுக்க ஒரு சங்கி. அங்கு இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிக்கு இணையான ஐஆர்எஸ் ஒருவர் இருக்கிறார். அவர் யாரென்று தெரியுமா? அவர் முழுமையான சங்கி. பாதி சங்கி தெரியுமா? என்னுடைய நண்பர் ஆதவ் அர்ஜுன். இந்த கும்பல்களை வைத்துக்கொண்டு நான் கொள்கை ரீதியாக பாஜகவை எதிர்க்கிறேன் என்று சொன்னால் கொள்கை ரீதியாக விஜய் வாயைத் திறந்து பேசினாரா? திருப்பரங்குன்றத்தையும் முருகனையும் ஒரு கலவரப் பொருளாக எடுத்து கலவரம் செய்வதற்கு அவர்கள் ரெடியாக இருக்கும் பொழுது நீ தட்டிக் கேட்க வேண்டுமா இல்லையா?
பேசாமல் அமைதியாக இருக்கலாம். எவன் அடிச்சிட்டு செத்தாலும் பிரச்சனை இல்லை என விஜய் நினைக்கிறார். அண்மையில் கிறிஸ்துமஸ் நிகழ்வு ஒன்று நடத்தினார்கள். கிறிஸ்துமஸ் நிகழ்வில் விஜய் ஒரு கதை சொல்கிறார் கவனிச்சீங்களா? கரூர் கூட்டத்தில் 'தண்ணி தண்ணின்னு' கேட்டாங்க ஒரு பாட்டில் தண்ணீரை எறிஞ்சு விட்டுட்டு போயிட்டீங்க. கரூரில் இறந்தவர்களைப் பற்றி கவனிக்கவில்லை. இயேசுநாதர் சாதாரண தண்ணீரை கூட ஒயினாக மாற்றிக் கொடுக்கிறார். எல்லோருக்கும் உணவு அளிக்கிறார். எல்லாருக்காகவும் போராடுகிறார். ஒரு பெண்மகளை விலைமாது என கல்லை விட்டு எறியும் பொழுது இயேசு ஒரு கருத்து சொல்கிறார். உங்களுக்கு இச்சை மனம் இல்லை என்றால் நீங்கள் கல்லை எறியுங்கள் எனச் சொல்லவும் யாரும் எறியவில்லை. ஆனால் தவெக கிறிஸ்துமஸ் நிகழ்வில் பாதிரியார் உட்பட, விஜய் உட்பட எல்லோரும் அந்த இயேசுநாதர் மேலேயே கல்லை விட்டு எறிகிறார்கள்.
எங்கள் பார்வையில் இயேசுநாதர் எவ்வளவு பெரிய போராளி. உலகை ரட்சிப்பவர், பாதுகாவலர் என இயேசு பற்றி பல கருத்துக்கள் சொல்லுவார்கள். விஜய்யை இயேசுநாதர் ரேஞ்சுக்கு கொண்டு போகிறார்கள். விஜய் மீட்பரா? எதை மீட்பார். 43 பேர் கரூரில் இறந்தார்களே மீட்டாரா? 43 பேர் இறந்ததற்கு ஒரு விளக்கு பற்றவைத்தாரா? நாங்கள் விளக்கு பற்ற வைத்து வீரவணக்கம் செலுத்தினோம். மனிதனாக இருந்தால் இறந்தவர்கள் இடத்திற்கு நீங்கள் செல்லவேண்டும். அவர்கள் உங்கள் இடத்திற்கு வரமாட்டார்கள். இதிலிருந்தே தெரிகிறதா அவர் எவ்வளவு பெரிய மீட்பர் என்று. சினிமாவை போல அரசியலுக்கும் பணம் ஒதுக்கி, அதை நோக்கி தான் விஜய் சென்று கொண்டிருக்கிறார்.
Follow Us