தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் பரப்புரை வியூகங்களை தாண்டி தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நோக்கி நகர்ந்து வருகின்றன. தற்போது தமிழ்நாடு காங்கிரசில் ஏற்பட்டுள்ள சில சிக்கல்கள் பேசு பொருளாகி உள்ளது. குறிப்பாக பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்துக்களும், பதிவுகளும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

Advertisment

இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கட்சிகளின்  தேர்தல்  நகர்வுகள் குறித்த அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.

Advertisment

'காங்கிரஸில் ஒரு பிரிவினர் விஜய்யை எதிர்பார்க்கிறார்கள். இன்னொரு தரப்பினர் திமுக கூட்டணி தான் சரி வரும் என நினைக்கிறார்கள். என்னதான் நினைக்கிறது காங்கிரஸ்?'

021
'Will Congress enter the river trusting in vijay? Do they know history of tmc?' - warns Pudumadam Haleem Photograph: (politics)
Advertisment

விஜய் உள்ளே வரும்போது நாங்கள் கூட்டணி ஆட்சிக்கு ரெடி என்று சொல்லி ஒரு ஆசை வலையை விரிச்சிருக்காரு. யாருமே அதில் சிக்கவில்லை. விசிக வந்து விடும், பல்வேறு கட்சிகள் வந்து விடுவார்கள் என தவெக நினைத்தது. ஆட்சியில் பங்கு கொடுக்கிறோம் என்பது ஒரு பெரிய மீன் பிடிப்பதற்கு உண்டான வலைதானே தவிர அதில் யாருமே சிக்கவில்லை. ஆனால் சிக்காது என எதிர்பார்த்த காங்கிரஸுக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.  

காங்கிரஸுக்கு இருக்கிற பிரச்சனை விஜய் என்கிற ஒரு பெரிய மீன் வந்து முட்டி முட்டி மோதிக்கொண்டு இருக்கிறது. விஜய்யோடு சேர்ந்துடலாம், அதிமுக-பாஜக கூட்டணிக்கு போக முடியாது. விஜய்க்கு ஆதரவு இருக்கிறது நிறைய இடங்களல் வெற்றிபெற்று கூட்டணி ஆட்சி அமைத்து விடலாம் என்று விஜய்யை ஆதரிக்கும் காங்கிரசினர் கற்பனையில் உள்ளார்கள். விஜய் இங்கே எத்தனை சதவிகிதம் ஓட்டு வாங்குவார் என்று தெரியாது. மகாராஷ்டிராவில் நாங்கதான் ஆட்சி அமைப்போம் என்று சொன்னவர்கள் தானே இந்த காங்கிரஸ் கட்சியினர். என்ன ஆச்சு நிலைமை?

இந்திய அளவில் காங்கிரஸுக்கு மரியாதை கொடுக்கக்கூடிய இடம் தமிழ்நாடு. 'வட இந்திய தலைவர்களுடைய நிர்பந்தம் இருக்கிறது. நாங்கள்  திமுகவை ஆதரித்து பேசக்கூட எங்களுக்கு  தொந்தரவு கொடுக்கிறார்கள்' என காங்கிரஸில் இருக்கின்ற ஒரு தலைவரே பேசினார். இது எதன் அடிப்படையிலான பேச்சு.

அண்மையில் ப.சிதம்பரம் ஸ்டாலினை பார்க்கிறார். உடனே காங்கிரஸை உடைக்க சிதம்பரம் முயற்சி செய்கிறார். திமுகவில் காங்கிரஸ் சேரவில்லை என்றால் தமாகாவை உடைத்தது போல சிதம்பரம் உடைத்து விடுவார் என்று பேசுகிறார்கள். தமிழ் மாநிலக் காங்கிரஸ் எப்படி உண்டானது என்கிற வரலாறு எல்லாருக்கும் தெரியாதா? 1996-ல் மூப்பனார் ஜெயலலிதாவை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான் தமிழ் மாநிலக் காங்கிரஸ். மதிக்காத ஜெயலலிதாவோடுதான் கூட்டணி வைப்பேன் என நரசிம்மராவ் சொன்னதால் கோபப்பட்டு வெளியே வந்தது தமிழ் மாநிலக் காங்கிரஸ். ரஜினிகாந்த் போன்றவர்கள் ஆதரவு கொடுத்தார்கள். அந்த காலகட்டத்தில் சிதம்பரம் இங்கேதான இருந்தார். ஏன் திருப்பி தமிழ் மாநிலக் காங்கிரஸிலிருந்து வெளியே வந்தார்.

இன்னும் சொல்லப்போனால் திமுகாவோடுதான் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார்கள். பாராளுமன்றத்தில் வாஜ்பாய்க்கு திமுக ஆதரவு கொடுத்ததனால் வெளியே வந்தார். இதுதான் வரலாறு. அதன் பிறகு தமிழ் மாநிலக் காங்கிரஸை கொண்டு போய் மொத்தமாக காங்கிரஸோடு மூப்பனார் சேர்த்துவிட்டார். பின்னர் 2014-ல்  வாசன் மறுபடியும் தமிழ் மாநிலக்காங்கிரஸை புதுப்பித்து கொண்டார்.

ஆனால் அடிப்படையில் என்னவென்றால் திமுகவை பலவீனப்படுத்துவதற்கு காங்கிரஸை இப்பொழுது பயன்படுத்துகிறார்கள். இதுவரைக்கும் விடுதலை சிறுத்தை கட்சியை பயன்படுத்த பார்த்தார்கள். திருமாவளவன் தெளிவாக சொல்லிவிட்டார். 'நான் மட்டும் பாஜகவோடு சேர்ந்திருந்தால் என்னை மத்திய அமைச்சர் ஆக்கி இருக்க மாட்டார்களா?' என திருமா கேட்டுள்ளார்.

'பாஜகவுக்கு ஆதரவு; என்டிஏ  கூட்டணிக்கு ஆதரவு' என திருமாவளவன் ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டால் அவர் இன்னைக்கு கேபினட் மினிஸ்டர். ஆனால் எங்களுக்கு கொள்கை முக்கியம், பதவி முக்கியம் இல்லை என திருமா இருக்கிறார். அவரிடம் முயற்சிசெய்து தோற்று விட்டார்கள். இன்னைக்கு காங்கிரஸை பயன்படுத்துகிறார்கள். காங்கிரஸ் ஒரு நெல்லிக்காய் மூட்டை மாதிரிதான். அங்கு இருக்கின்றவர்கள் பல்வேறு சிந்தனைகளிலும் சித்தாந்தத்திலும் இருக்கிறார்கள். கடந்தமுறை போட்டியிட்ட இடங்களில் எத்தனை இடத்தில் காங்கிரஸ் ஜெயிச்சாங்க. நீங்கள் விஜய்யை நம்பி ஆற்றில் இறங்கப் பார்த்தால் இருப்பதும் அழிந்து போய்விடும்.