''Why didn't the CBI ask for that...''- TTV, Sengottaiyan pressuring Edappadi Photograph: (admk)
நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் அவரின் மறைவிற்கு பிறகு கடந்த 2017 ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக தற்போது வரை முடிவு பொறாமல் விசாரணை நடைபெறுகிறது. இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கையிலெடுத்து விசாரித்து வருகின்றனர்.
தற்போதுவரை விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் முடிவு கிடைக்காத சூழலே தொடர்ந்து வருகிறது. இந்த வழக்கில் யார் குற்றவாளி என கண்டறிந்து தக்க தண்டனை கொடுக்கப்படும் என திமுக தெரிவித்திருந்தது.
முடிவுபெறாத இந்த கொடுநாடு சம்பவம் குறித்து டி.டி.வி.தினகரன் பல்வேறு பரபரப்பு தகவல்களை நேற்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். ''கொடநாட்டில் ஒன்னும் பணம், காசு இருக்காதுன்னு எல்லாருக்கும் தெரியும். அங்க போய் பைல்களை தேடுனாங்க. தேடியது யாரு? எம்எல்ஏக்களை பற்றி, கட்சியில உள்ள மாவட்டச் செயலாளர்கள், மந்திரிகள் பற்றி ஜெயலலிதா கேட்டிருக்க ரிப்போர்ட் எல்லாம் போயஸ் கார்டனில் இருக்கும். நான் நிறைய கிழிச்சு போட்டுருக்கேன். நானும் டாக்டர் வெங்கடேஷும் ஜெயலலிதா ரூம்ல இருந்ததெல்லாம் கிழிச்சு போட்டோம்.
நாங்க பிளாக் மெயலர் கிடையாது. எங்க சித்தி (சசிகலா) சொன்னதன் பேர்ல அதெல்லாம் உட்கார்ந்து படிச்சு பார்த்து சிரிச்சிட்டு நானும் டாக்டர் வெங்கடேஷும் எல்லாத்தையும் கொளுத்தி போட்டோம். ஜெயலலிதா வச்சிருந்த பைல் எல்லாம் அக்கா ரூம்ல இருக்குப்பா அதெல்லாம் பாருங்க தேவையில்லாத எல்லாம் நீக்கிடுங்கனு சொன்னாங்க. அதுல நிறைய பேர் அமைச்சர்களாக எல்லாம் இருந்தவங்க. அவங்களுடைய வண்டவாளங்களெல்லாம் அதில் இருந்துச்சு. அதெல்லாம் கிழிச்சு போட்டுருக்கோம். அதுபோல கொடநாட்டிலயும் இருக்குன்னு யாரோ பொய் சொல்லி எடப்பாடியை பயமுறுத்தி இருக்காங்க. அதனால் அங்கு போய் அந்த கூர்காவ கட்டிப்போட்டுட்டு உள்ளே போய் ஜன்னலை உடைச்சிட்டு உள்ளே போயிருக்காங்க. எத்தனை பேர் கொடநாட்டில் இறந்தார்கள். உள்ளே இருந்த ஆபரேட்டர் தற்கொலை செய்துகொண்டார். டிரைவர் கனகராஜ் கொல்லப்பட்டார். கேரளால இருந்து வந்தவர்கள் வண்டியெல்லாம் விபத்தில் சிக்கியது.
இந்த சம்பவத்திற்கு எல்லாம் ஒட்டுமொத்த பெனீபீஷியரி யாரா இருக்க முடியும்? இதெல்லாம் யார் ஆட்சியில் நடக்குது? அந்த சூழ்நிலையை பாருங்க. எங்க சித்தி (சசிகலா) ஜெயில்ல இருக்காங்க. 17ஆம் தேதி என்னையும் கட்சியை விட்டு நீக்கி இருக்காங்க. என்னை கட்சியை விட்டு நீக்கியதுனால அவர்களுக்கு இன்னும் பயம் அதிகமாச்சு. இந்த பைல் எல்லாம் எடுத்து டிடி.வி.தினகரன் வெளியே விட்டரலாம் என்ற பயம் எடப்பாடிக்கு வந்துவிட்டது. ஆனா அந்த முட்டாள்களுக்கு தெரியவில்லை எல்லாம் போயஸ் கார்டன்ல தான் இருந்துச்சு. அதெல்லாம் நாங்க அதுக்கு முன்னாடியே கிழிச்சு போட்டோம். எங்களுக்கு அதையெல்லாம் வைத்து யாரையும் பயமுத்தணும்ங்கிற கேவலமான புத்தி எல்லாம் எங்களுக்கு கிடையாது. அதில் நான் படிச்சேன் எல்லோரைப் பற்றியும் இருந்துச்சு. எல்லோருடைய லீலா வினோதங்கள் எல்லாமே இருந்துச்சு'' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையனும் கொடநாடு சம்பவங்கள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளார். இன்று செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''அதிமுக மீண்டும் வெற்றி பெற வேண்டும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்க்கப்பட வேண்டும். அப்படி வருகிறபோது தான் எம்.ஜிஆர், ஜெயலலிதாவுடைய கனவை மீண்டும் தமிழகத்திலே உருவாக்குவதற்கு அது ஏதுவாக இருக்கும் என்று கருத்துக்களை நான் வெளியிட்டேன். அதற்குப் பிறகு கழக பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டேன்.
ஆனால் ஜெயலலிதா காலத்தில் 2009 இன்றைய பொதுச்செயலாளரையே (எடப்பாடியையே) கழகத்தில் அனைத்து பணிகளிலும் இருந்து விலக்கினார்கள். அதேபோல் 2012 ல் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது என்னையும் கழகப் பணியிலிருந்து விளக்கினார்கள். ஆனால் அதற்குப் பிறகு ஜெயலலிதா நம்மை சுற்றி இருக்கின்ற யாரையும் விலக்கவில்லை. அரவணித்து சென்ற வரலாறுகள் இருக்கிறது. இன்றைக்கு அந்த நிலை இல்லை. யார் நம்மிடத்தில் பேசினாலும் கூட உடனடியாக நடவடிக்கை எடுக்கும் நிலை உள்ளது. இது இயக்கத்தை பலவீனப்படுத்துவது மட்டுமல்ல தன்னை சுற்றி இருக்கிறவர்களை பலவீனப்படுத்துகிற போது அது யார் செய்கிறார்களோ அவரும் பலவீனம் அடைகிறார்கள். இதுதான் வரலாறு. கருநாகர் என்ற சட்டமன்ற உறுப்பினர் பல்லாவரத்தை சார்ந்தவர், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர். அவருடைய மருமகள் வீட்டில் பணியாற்றிய பெண்ணுக்கு நடத்திய கொடுமையை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தை நாம் நடத்தினோம்.
அதற்குப் சிபிஐ விசாரணை தேவை என்று வலியுறுத்தினோம். எதற்கெல்லாம் சிபிஐ விசாரணை வேண்டும் என்று நாம் வலியுறுத்திக் கொண்டிருக்கிறபோது கொடநாட்டிலே நடைபெற்ற கொலைகளை பற்றி இருவரையிலும் குரல் கொடுக்கப்பட்டிருக்கிறதா? எதற்கெடுத்தாலும் சிபிஐ எதற்கெடுத்தாலும் சிபிஐ. ஆனால் நம்மை வாழவைத்த, கொடநாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த ஜெயலலிதாவுடைய கொடநாட்டில் ஏற்பட்டிருக்கிற கொலை, கொள்ளைக்கு ஒரு நாளாவது சிபிஐ விசாரணை வேண்டும் என்று குரல் கொடுக்கப்பட்டிருக்கிறதா? என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். பி டீம் என்று என்னை பற்றி சொன்னார்கள். கொடநாடு விஷயத்தில் யார் பி டீமாக இருக்கிறார் என்பது இதன் மூலமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல மூன்று முறை ஜெயலலிதா இருக்கின்ற போதும் மறைவுக்கு பிறகும் ஓபிஎஸ்-ஐ மட்டும்தான் முதலமைச்சராக அமர்த்தினார் ஏன் உங்களை (எடப்பாடியை) முதலமைச்சராக அமர்த்தவில்லை என்ற கேள்வியை நான் இங்கே கேட்க விரும்புகிறேன்.
எடப்பாடி முதலமைச்சர் ஆனதற்கு பிறகுதான் எனக்கு அமைச்சராகவே இடம் தந்தோம் என்று சொன்னார்கள். எங்களைப் போன்றவர் முன்மொழியவில்லை சொன்னால் முதலமைச்சரே ஆகி இருக்க முடியாது எடப்பாடி. ஜெயலலிதா மூலமாக மூன்று முறை முதலமைச்சரானவர் ஓபிஎஸ். ஆனால் எடப்பாடியை பொறுத்தவரை கொல்லைப்புற வழியாக முதலமைச்சரானவர் என்பது நாடறிந்த ஒன்று. இன்று நான்தான் அவருக்கு அமைச்சர் இடம் தந்தேன் என்று சொல்வது வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. கடந்த காலத்தை நான் சொல்ல விரும்பவில்லை. அது சொல்வதும் சரியாக இருக்காது. நான் ஆரம்பிக்க வேண்டும் என்று சொன்னால் 81ல் இருந்து ஆரம்பிக்கலாம். ஆனால் அதை நான் விரும்பவில்லை. ஒரு தகுதியான இடத்திற்கு வந்ததற்கு பிறகு ஒருவரை பற்றி விமர்சனம் செய்வது ஜனநாயகம் மரபாக இருக்காது. இந்த தொகுதியை பொறுத்தவரை 45 ஆண்டு காலம் சிற்றரசை போல வாழ்ந்தாரே தவிர மக்களுக்கு எந்த பணியும் ஆற்றவில்லை என்று சொல்லி இருக்கிறார். உங்கிடத்திலே ஒவ்வொரு அமைப்பை சார்ந்தவர்களும் என்னை எப்படி பாராட்டி இருக்கிறார்கள். எப்படி என்னுடைய பணிகள் அமைந்திருக்கிறது என்பதை பல்வேறு சங்கங்கள், விவசாயிகள் பாராட்டியதும் அதைப்போல இன்றைக்கு சமூக ஈடுபாடுகளில் இருக்கின்ற நம்முடைய ஈரோட்டை சார்ந்திருக்கிற பல்வேறு சமூக அமைப்புகள் பாராட்டி கடிதங்கள் எனக்கு எழுப்பப்பட்டிருக்கிறது. கடுமையான உழைப்பின் காரணமாக இந்த தொகுதியை வளமான தொகுதியாக நீங்கள் மாற்றி இருக்கிறீர்கள் என்று நான் பாராட்டுதலை பெற்றிருக்கிறேன்.
அன்று நான்கு ஆண்டு காலம் ஆட்சி கட்டிலில் அமர வைத்து நம்மை பாதுகாத்த பாரதிய ஜனதா கட்சிக்கு 2024ல் இந்தியாவே என்ன செய்யப்போகிறது என்று தத்தளித்துக் கொண்டிருக்கிற நேரத்திலே நரேந்திர மோடி அவர்களை கொண்டுவர வேண்டும் என்ற நேரத்தில், அன்றைக்கு வாபஸ் பெற்றது மட்டுமல்ல நான் இனிமேல் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை. இன்றும் இல்லை 2026லும் இல்லை, 2931லும் இல்லை என்று சொன்னார். சொல்லி முடித்துவிட்டு இன்றைக்கு தமிழகத்தில் தடை செய்யப்பட்டிருக்கிற அந்த இயக்கத்திற்கு சென்று தொப்பியை போட்டுக்கொண்டு உரையாற்றினார். இதெல்லாம் நாடறிந்த ஒன்று.
நாடாளுமன்ற தேர்தலை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். எந்த காலகட்டத்தில் நமக்காக வழிவகை செய்தார்களோ அவரெல்லாம் மறந்து அவர்களுக்கு நிற்பதற்கு அனுமதி வழங்காமல் புதிதாக வேறு கட்சியில் இருந்தவர்கள் பணம் செய்த செலவு செய்தால் போதும் என்று அவர்களுக்கு நாடாளுமன்ற தொகுதியில் நிற்பதற்கு அனுமதியை வழங்கியவர் யார்? இதையெல்லாம் மக்கள் இன்றைக்கு கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. நான் எதற்காக இதை சொல்கிறேன் என்று சொன்னால் முதலில் இவர் முதலமைச்சர் ஆவதற்கு வழிவகை செய்தவர் அன்றைய பொதுச்செயலாளர் சசிகலா. அவரைப் பற்றி கொச்சையாக பேசினார். நாங்கெல்லாம் அவரிடத்திலே சொன்னோம் அரசியல் நாகரிகம் என்பது நம்மை வளர்த்தவர்களே வளர்த்த கடா மார்பில் பாய்வதைப் போல பேசக்கூடாது என்று சொல்லியிருக்கிறேன். அதுமட்டுமல்ல அடுத்ததாக 18 பேர்கள் நமக்கு தேவைப்பட்டது டி.டி.வி உடைய அந்த 18 சட்டமன்ற உறுப்பினர் நமக்கு உறுதுணையாக இருந்த காரணத்தின் அடிப்படையில் பேரவையின் தலைவர் முன்னால் ஒருமனதாக இவரை கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு அந்த பணிகள் நிறைவேற்றப்பட்டது. அதற்கு பிறகு டிடிவி உடைய 18 பேர்களையும் கழகத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினர் பதில் இருந்து நீக்கப்பட்டார். அதற்குப் பிறகு ஆட்சியை நடத்தவருக்கு தடுமாறிக் கொண்டிருக்கிற போது தர்ம யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிற ஓபிஎஸ் அவர்களை அழைத்து வந்து நீங்கள் 11 பேரும் எங்களுக்கு ஆதரவு தாருங்கள். நீங்கள் ஒரு ஒருங்கிணைப்பாளர் நான் இணை ஒருங்கிணைப்பாளர் நான் முதலமைச்சர் நீங்கள் துணை முதலமைச்சர் என்று சொல்லி அவரையும் அந்த நிலைக்கு கொண்டு சென்று, காலம் நடந்ததற்கு பிறகு அவரையும் வெளியேற்றினார்.
நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரிய கட்சி கொடி பறக்குது பிள்ளையார் சுழி போட்டாகி ஆகிவிட்டது என்று நாம் சொன்னதற்கு பிறகு நேற்றைய முந்தின நிலை என்ன ஏற்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். நம்முடைய பலம் என்ன? நாம் ஒருங்கிணைந்து ஒற்றுமை உணர்வோடு நாம் இணைகிற போது நம்மை நாடி வருவார்கள். நாம் மற்றவரை நாடிச் செல்ல தேவையில்லை இதுதான் வரலாறு. ஒருவர் முன்னேற வேண்டும் என்றால் தன் கால்களில் நடந்து செல்ல வேண்டும். பிறர் முதுகிலே ஏறி சவாரி செய்யக்கூடாது. இந்த இயக்கம் சரியாக இருக்க வேண்டும் என்று எடப்பாடி நினைத்திருந்தால் சட்டமன்றத்திலே 42 நாட்கள் நடைபெறுகிற சட்டமன்றத்தில் அவருக்கு பின்னாலே நான் அமர்ந்து கொண்டிருக்கிறேன். ஒரு வார்த்தை திரும்பி என்ன குறை இருக்கிறது வாருங்கள் என்று அழைக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல இங்கே மேட்டுப்பாளையத்தில் முதல் கூட்டம் நடைபெறுகிற போதே இந்த வழியாக சென்ற எடப்பாடிக்கு வரவேற்பு தந்தார்கள். அன்றைக்கும் அழைக்கப்படவில்லை. இந்த இயக்கம் வலிமையாக இருக்க வேண்டும் என்று கருத்துக்கள் பரிமாறுவது என்பது ஜனநாயக உரிமை. அந்த ஜனநாயக உரிமையை இன்று இவர்களால் இடர்படுவது எவ்வளவு வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது''என்றார்.
'நீங்கள் தொண்டர்கள் உரிமைக் குழுவை மறுபடியும் முன்னெடுக்க போகுறீர்களா? இல்ல தனிக்கட்சி தொடங்குறீங்களா?' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ''பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை கொடநாடு சம்பவத்தில் யார் குற்றவாளி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் இந்த நாடு என்பதுதான். அதற்கு ஏன் குரல் கொடுக்கவில்லை என்பதுதான். சாதாரண ஒரு பெண் வீட்டு வேலை செய்கிற பெண்ணுக்கு சிபிஐ வேண்டும் என்று குரல் கொடுக்கும் எடப்பாடி நம்மை காப்பாற்றிய, நம்மளை அடையாளம் காட்டி இவ்வளவு வளர்ச்சி உருவாக்கிய ஜெயலலிதா வளர்ந்த இந்த இடத்தில் இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்கிறதே இதற்காக ஏன் சிபிஐ வேண்டும் என்று கேட்கவில்லை என்பதுதான் என்னுடைய கேள்வி'' என்றார்.
Follow Us