Advertisment

குழந்தைகளுக்கும், கர்ப்பணிப் பெண்களுக்கும் டெங்கு எளிதாக பரவும்!!!

தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் மூலமாக அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. அனைத்து மாவட்டத்திலும் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் நாள்தோறும் நூற்று கணக்கானோர் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் சில உயிரிழப்புகளும் நடந்துக்கொண்டு இருகிறது. சில நாட்களுக்குமுன் சென்னையில் இரண்டு குழந்தைகள் இறந்தனர். இன்று திருவள்ளுர் மாவட்டத்தில் இரண்டு குழந்தைகள் உயிர் இழந்துள்ளனர். இந்த நிலையில் அதை எப்படி தடுப்பது, அதற்கான அறிகுரிகள் என்ன, டெங்குவில் இருந்து எப்படி காப்பறிக்கொள்வது போன்ற சில எளிய வழிமுறைகளை நம்முடன் பகிர்ந்துகொண்டார் மருத்துவர் இந்திரா நெடுமாறன்.

Advertisment

dd

டெங்கு அதிகம் வரக்கூடியது மழைக் காலங்களில்தான். காரணம் அந்த நேரத்தில் நம் வீட்டை சுற்றி இருக்கும் பிளாஸ்டிக் மற்றும் தேவையற்ற பொருள்களில் தேங்கி நிற்கும் மழை தண்ணீர்களில் டெங்கு கொசுக்கள் (ஏடிஸ் கொசு) அதிக அளவில் உற்பத்தியாகும். இதை அரசாங்கம் கட்டுப்படுத்தாது நாம்தான் அதை கவனித்து நம் வீட்டை சுற்றியுள்ள தேவையற்ற பொருள்களை நீக்கி, சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி இருந்தாலே டெங்கு பாதிப்பில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளலாம். இதில் அரசாங்கத்தின் வேலை என்பது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் மக்களை கண்காணிப்பதும்தான். அதே சமயம் டெங்கு வந்தபிறகு அரசாங்கம் வீடுவீடாக போய் பேசக்கூடாது. இந்தக் குறிப்பிட்ட மாதத்தில் டெங்கு பாதிப்பு அதிகம் இருக்கும் என்று தெரிகிறது என்றால் அந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே அரசு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.

Advertisment

டெங்கு, அனைவருக்கும் ஒரே மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தாது. ஆனால், கட்டுகடுங்காத காய்ச்சல். (103-க்கு மேல் காய்ச்சல் இருக்கும்) கண் வலி, எலும்பு மஞ்சைகளில் வலி போன்றவை எல்லாம் டெங்குவிற்கான பொது அறிகுறிகள். நம் உடலில் இரத்தம் உற்பத்தியாகக்கூடிய இடங்களையே மஞ்சை என்று குறிப்பிடுவோம். இது நம் முதுகுத்தண்டு, இடுப்பு எலும்பு, இதயத்தின் மேல் இருக்கும் இதயக்கூடு எலும்பு போன்ற இடங்களில் இருக்கும். இங்கெல்லாம் வலி உயிரே போகக்கூடிய அளவிற்கு இருக்கும். இதைத்தவிர்த்து நுரையீரல், இதயம், கணையம், பித்தப்பை போன்ற இடங்களிலும் நீர் சூழ்ந்து இருக்கும். அதனால் அந்த இடங்களில் வலி இருக்கும். சிலருக்கு வயிறு வலியும், வாந்தியும் இருக்கும்.

cx

டெங்குவின் மூலமாக மரணங்கள் அதிகம் நிகழ்வதற்கு காரணம் நீர்சத்துக் குறைபாடுதான். முக்கியமாக டெங்கு இருப்பவர்களுக்கு சிறுநீரகம் பிரச்சனை வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. டெங்கு மூலமாக பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து லிட்டர் திரவ உணவை எடுத்துக்கொண்டால், டெங்குவால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். இளநீர், எலுமிச்சை சாறு மற்றும் குறிப்பாக சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் இவைகளை பருக வேண்டும். டெங்கு இருப்பவர்களுக்கு முக்கியமாக இரத்த தட்டணுக்கள் விரைவாக குறையும். இது மரணம் வரை கொண்டுபோகும். அதனால் ஒருவருக்கு, இரண்டு நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். நிலவேம்பு மட்டும் டெங்குவை கட்டுப்படுத்தாது. உதாரணத்திற்கு ஒருவருக்கு டெங்கு காய்ச்சலால் வாந்தி, நீர் சத்து குறைபாடு போன்றவை இருந்தால் வெறும் நிலவேம்பு நீரை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டிலே இருக்கக்கூடாது. நிச்சயம் மருத்துவரை அணுக வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கும், கர்ப்பணிப் பெண்களுக்கும் டெங்கு எளிதாக வரக்கூடும். காரணம் குழந்தைகள் சரியான அளவில் நீர்சத்துக்களை உட்கொள்ள மாட்டார்கள். கர்ப்பணிப் பெண்களுக்கு பேறுகாலத்தில் இரத்த ஓட்டம் எப்போதும் இருப்பதைவிட சற்று வேறுபட்டு இருக்கும். அதனால் இவர்கள் இருவருக்கும் எளிதில் இரத்த தட்டணுக்கள் குறைந்து டெங்குவால் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.

indhira nedumaran Tamilnadu Swine flu Dengue
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe