/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/T.jpg)
ஒருவர் கவனத்தை திசைதிருப்பி நம்பக்கம் இழுத்துக்கொள்ளவும், ஓவர் நைட்டில் உலக ஃபேமஸ் ஆவதற்கும் சிறந்த தளமாக இருப்பது சமூக வலைத்தளம்தான். பேஸ்புக், இன்ஸ்ட்ராகாம், வாட்சப், ட்விட்டர் என்று பரவி கிடக்கும் சமூகவலைதளங்களின்வழியாகபலர் ஒருவருடன் ஒருவர் இணைந்தும், பிரபலமாகியும் உள்ளனர். அப்படி நம் கவனத்தை திருப்பியவர்கள்தான் ஷெரில், ஓவியா மற்றும் ப்ரியா பிரகாஷ்வாரியர் போன்றோர். சரி பெண்கள்தான் கவனத்தை திசை திரும்புவார்களாஎன்றால் அதுதான் இல்லை. பல ஆண்களும் இதன்மூலம் பிரபலமாகியுள்ளனர். இதற்கு உதாரணம் சமீபத்தில்ஒருவரைஸ்பூஃப்செய்தார்கள். இன்று அவரைத்தூக்கி வைத்து கொண்டாட கொண்டாடுகிறார்கள் அவர்தான்பிஜிலி ரமேஷ்.இவர்களைப்போல தற்போது அழகிய சிரிப்புடன், கூந்தல் சிறகடிக்க ஒரு தைவானிய முகம் பலரைகவர்ந்து வருகிறது. ப்ரியா கண் அடித்ததற்கே கலங்கியவர்களெல்லாம், சூயி (tzuju)வீடியோவை பார்க்கும்போது “என்னா பொண்ணுடா” என்று புலம்புகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/8_8.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஒரு வீடியோ பிரபலமாகி வருகிறது. அதில்அம்பை வில்லில் வைத்து குறி பார்த்து, இழுத்து வெளியிட தவறுதலாக அவரின் கூந்தலை சீண்டி செல்கிறது. இதுதான் அந்த வீடியோவின் விஷயமே. இது எப்படியோ ஒரு மீம் கிரியேட்டர் கண்ணில்பட, அது மளமளவென காட்டுத்தீயாக அந்த கூந்தலின் அழகு பரவச்செய்தது. மீம்ஸ் ஒரு பக்கம் பரவ. நம்மூர் எடிட்டர்கள் அதில் கண், காதல் போன்றவற்றைவர்ணிக்கும்தமிழ்பாடல்களை கோர்த்து மேலும் அழகு கூட்டினர். அதுவும் வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ்களாக பரவ ஆரம்பித்தது.இன்றும் பரவிக்கொண்டுதான் இருக்கிறது. மீம் கிரியேட்டர்கள், அந்த கொரிய பெண்ணை திருமணம் முடிக்க போவது போல மீம்கள் போட்டுத்தள்ளுகின்றனர். அந்த பெண்ணுக்கு தமிழ் மட்டும் தெரிந்தால் கண்டிப்பாக இவர்களின் மீம்களை பார்த்து, "ஏன் இப்படி அசடு வழிகிறார்கள்" என்றே கேட்டுவிடுவார் அந்தளவிற்கு மீம்ஸ்கள் போடுகிறார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/10_2.jpg)
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தமிழக இளைஞர்களை கவர்ந்த இந்த சூயியார்? கொரியாவில் வளரும் இந்த பெண், பிறந்தது தைவானில் உள்ள தைனான் என்னும் பகுதியில். பிறப்பால்இவர் ஒரு தைவானியர் என்றாலும்வளர்ந்தது, பிரபலம் ஆகியது எல்லாம்கொரியாவில். இவர் ஜூன் மாதம் 14 ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு பிறந்தவர். 2012 ஆம் ஆண்டில் தைனானில் உள்ள ஒரு டேலண்ட் ஸ்கவுட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு அதே ஆண்டில் நவம்பர் 15 ஆம் தேதி பயிற்சிக்காக கொரியா சென்றவர், இரண்டு வருட பயிற்சி பெற்ற பின்னர் 2015 ஆம் ஆண்டில் “சிக்ஸ்டீன்” என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டார். இதிலிருந்த9 பெண்கள் சேர்ந்து“ட்வைஸ்” என்ற பெயரில்ஒரு இசைக்குழு உருவாக்கினர். அதில் பிரபலமானவராக இருந்தார் சூயி. அக்டோபர் மாதம் 2015 ஆம் ஆண்டில் அரங்கேறினார்கள். சவுத் கொரியாவின் 2016 ஆம் ஆண்டின் பிரபலமான இளைஞர்கள் பட்டியலில் மூன்றாவது இடம் பெற்றிருந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/11_4.jpg)
ட்வைஸ் குழுவில் சூயிதைவானிய கொடி ஏந்தி வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சீனர்கள் எல்லாம் கடுமையாக விமர்சிக்க, சோ டூசு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இதற்கு தைவானியர்கள் சார்பில் விமர்சனும், கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. எது என்னவோ சூயிதன்னுடைய வெகுளிதனத்தாலும், அசட்டு சிரிப்பாலும் பிரபலமாகிக் கொண்டே இருந்தார். நம் ஊரில் சூயிஒரு வில் வித்தை வீரர் என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதுதான் இல்லை அவர் 2016 ஆம் ஆண்டில் ஐடோல் ஸ்டார் அதிலட் சாம்பியன்ஷிப் என்ற டிவி போட்டியில் கலந்து கொண்டார். தற்போது நம்மிடம் பேமஸாக ஓடிக்கொண்டிருக்கும் வீடியோ. அது2016 ஆம் ஆண்டு வந்தது.அப்போது அந்த அம்புகூட மிஸ் ஆகிவிட்டதாம்...
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)