ரஜினியின் ப்ராண்டிங் வல்லுனர் யார்? வியூகம் வகுப்பாளர்கள் உலகில் பரபரப்பு! 

அரசியல் கட்சிகளின் தேர்தல் கால செயல்பாடுகளையும் அவர்கள் எடுக்க வேண்டிய முடிவுகளையும் அந்தந்த கட்சிகளின் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களே தீர்மானித்து வந்தன. அவைகளெல்லாம் வெறும் சம்பிரதாயமாக மாறிப் போன நிலையில், அரசியல் வியூக நிபுனர்களே தற்போது தீமானிக்கும் சக்திகளாக உருவெடுத்துள்ளனர். உலகம் முழுவதும் தொழில் நுட்பம் அசூர வளர்ச்சி அடைந்துள்ள சூழலில், மக்களிடம் தங்களது கட்சியின் செயல்பாடுகளை நிலை நிறுத்த தேசிய கட்சிகள் தொடங்கி மாநில கட்சிகள் வரை ஒரு ப்ராண்டிங் வல்லுநர் தேவைப்படுகிறார்.

rajini

அந்த வகையில் அரசியல் வியூகம் வகுப்பாளர்களை ஒவ்வொரு கட்சியும் தேடுகிறது. தேசிய அளவிலும் மாநில அளவிலும் தேர்தல் களத்தில் பல்வேறு கட்சிகளின் வெற்றி-தோல்விகளுக்கு காரணமாக இருந்தவர் அரசியல் வியூக நிபுனர்களில் ஒருவரான ஐ பேக் நிறுவனத்தின் தலைவர் பிரசாந்த் கிஷோர். இவரின் சில வியூகங்கள் வெற்றி பெற்றதால் பிரபலமானவர். ஆனால், சமீப காலமாக இவரது யோசனைகளும் திட்டங்களும் செல்லுபடியாகவில்லை. அதனால் பிரதான தேசிய கட்சிகள் இவரை கைவிட்ட நிலையில், மாநில கட்சிகள் மீது இவரது பார்வை விழுந்தது.

அந்த வகையில், எடப்பாடியையும் ரஜினியையும் ஒரு கட்டத்தில் சந்தித்தார் பிரசாந்த் கிஷோர். இந்த சந்திப்பு கூட அண்மையில் நடந்தது அல்ல. பிரசாந்த் கிஷோரின் செயல் திட்டங்கள் குறித்து எடப்பாடியும், ரஜினியும் தனித்தனியாக தங்களது அறிவுஜீவி வட்டாரங்களில் விவாதித்திருக்கிறார்கள். அதில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோரின் வியூகங்கள் வட மாநிலங்களுக்கு ஓ.கே. ஆனால், தமிழகத்துக்கு செட் ஆகாது என சொன்னதன் அடிப்படையில் எடப்பாடியும் ரஜினியும் பிரசாந்த் கிஷோரை தவிர்த்துள்ளனர். அதன் பிறகே கமலை அணுகினார் கிஷோர். ஆனால், கமலுக்காக பிரசாந்த் போட்டுக்கொடுத்த வியூகங்கள் சோபிக்கவில்லை. இதனால், கமலும் அவரை கைக்கழுவினார்.

இப்படிப்பட்ட சூழலில், மகாராஸ்ட்ராவில் சிவசேனாவுக்காக நடந்த முடிந்த தேர்தலில் பணியாற்றிய பிரசாந்த் கிஷோரின் வியூகமும் வொர்க்-அவுட் ஆகாததால் கிஷோர் மீது சிவசேனா தலைமையும், அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளும் அதிர்ப்தி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், மகாராஷ்ட்ரா தேர்தலை உற்று கவனித்த ரஜினிகாந்த், பிரசாந்த்தின் தேர்தல் வியூகம் குறித்து சிவசேனா தரப்பில் கேட்டு அறிந்திருக்கிறார். பிரசாந்த் கிஷோரின் அரசியல் வியூகம் பற்றி பாசிட்டிவ் சிக்னல் அவருக்கு கிடைக்கவில்லை. அதனால் பிரசாந்த் கிஷோர் மீதிருந்த நம்பிக்கை ரஜினிக்கு குறைந்து போனது. இதற்கிடையே, தமிழகத்தின் கள நிலவரங்களை அறிந்த ப்ராண்டிங் வல்லுநர் ஒருவரை பற்றி அவர் விசாரித்திருப்பதாகத் தெரிகிறது. அவர், ஜான் ஆரோக்கியசாமி !

John Arokiasamy  -  prashant kishor

பாமகவின் அன்புமணிக்காக கடந்த 2016 தேர்தலில் ப்ராண்டிங் வல்லுநராக பணி புரிந்த ஜான் ஆரோக்கியசாமி, அந்த தேர்தலில் பலராலும் கவனிக்கப்பட்டவர். தமிழக அரசியல் நுணுக்கங்களையும், தேர்தல் கள நிலவரங்களையும், தமிழகத்திலுள்ள சமூக தாக்கங்களையும் அறிந்துள்ள ஜான் ஆரோக்கியசாமியின் ப்ராண்டிங் வியூகங்கள், பாமகவின் 4 சதவீத வாக்கு வங்கி 6 சதவீதமாக உயர்வதற்கு காரணமாக இருந்தன. இந்த நிலையில்தான், தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் பிராண்டிங் வல்லுநரான ஜான் ஆரோக்கியசாமியை பற்றி தற்போது ரஜினிகாந்த் விசாரித்திருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. 2021 சட்டமன்ற தேர்தலில் அரசியலுக்குள் நுழைய காத்திருக்கும் ரஜினிக்கு, ப்ராண்டிங் வல்லுநராக செயல்படப்போவது யார் ? ரஜினி தேர்ந்தெடுக்கும் அந்த பிராண்டி வல்லுநர் யார் ? என்பதும் அரசியல் வியூகம் வகுப்பாளர்கள் உலகத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது!

john arokiasamy Makers Prashant Kishor rajini strategy
இதையும் படியுங்கள்
Subscribe