Advertisment

கரோனாவின் காதலி யார்? மொத்தம் 10 கேள்வி: தவறாக பதில் அளித்தால்... (படங்கள்)

Who is Corona's girlfriend?Who is Corona's girlfriend?

கேள்விக்கான பதிலை எழுதுகிறார்கள்...

கரோனாவை தடுக்க நாடு முமுவதும் ஊரடங்கு பிரப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்வதாக கூறி மக்கள் இருசக்கர வாகனங்களில் உறவினா்கள் மற்றும் நண்பா்கள் வீடுகளுக்கு சுற்றி திரிகிறார்கள். இதை பாதுகாப்புக்கு நிற்கும் போலிசார் கண்டித்தும் அதை பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும் டூவீலரில் ரவுண்ட் அடிக்கிறார்கள்.

Advertisment

Who is Corona's girlfriend?

பதிலை திருத்தும் போலீஸ்

இதனால் இதை நூதன முறையில் கட்டுப்படுத்த குமரி மாவட்டம் தக்கலை சரக டிஎஸ்பி ராமசந்திரன் மார்த்தாண்டத்தில் டூவிலரில் அதுவும் அத்தியாவசிய காரணமின்றி செல்பவா்களை பிடித்து உட்கார வைத்து கரோனா சம்மந்தமான கேள்வி தாள்களை கொடுத்து தோ்வு எழுதுவது போல் எழுத வைத்தார்.

Advertisment

Who is Corona's girlfriend?

Who is Corona's girlfriend?

திருத்தப்பட்ட வினாத்தாளும், மதிப்பெண்ணும்...

அந்த கேள்வி தாளில் கரோனாவின் காதலி யார்? கரோனா வைரஸ் முதலில் உருவான நாடு எது? அதை தடுக்க நாம் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா முதலில் உடலில் உள்ள எந்த உறுப்பை தாக்கும் என 10 கேள்விகள் உள்ளன.

Who is Corona's girlfriend?

தவறான பதில் அளித்தஒவ்வொன்றுக்கும் 10 தோப்புக்கரணங்கள்

தவறான விடையளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 10 தோப்புகரணங்கள் போட வைத்ததோடு கரோனாவை ஒழிப்பது சம்மந்தமான உறுதிமொழி மற்றும் ஊரடங்கு உத்தரவை கடை பிடிப்பது சம்மந்தமான உறுதி மொழியையும் எடுக்க வைத்த பின்பு டிஎஸ்பி ராமசந்திரன் அன்போடு எச்சரித்து அவா்களை அனுப்பி வைத்தார்.

Who is Corona's girlfriend?

இப்படி நேற்று மார்த்தாண்டத்தில் மட்டும் 100 பேரை தோ்வு எழுத வைத்து நூதன முறையில் தண்டனையும் கொடுத்த டிஎஸ்பி யின் நடவடிக்கையை பலா் பாராட்டுகின்றனா்.

corona virus girlfriend Kanyakumari police Question
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe