Advertisment

ரூபாய் 20 கோடி எங்கே? வேலுமணியை லெஃப்ட் & ரைட் வாங்கிய ஜெயலலிதா!!!

ddd

Advertisment

சுகுணாபுரம் பழனிச்சாமி வேலுமணி, ‘அமைதிப்படை' படத்தில் இயக்குநர் மணிவண்ணன் படைத்த ‘நாகராஜசோழன்' என்கிற அரசியல்வாதி கேரக்டரின் அசல் வடிவம். மிகமிக சாதாரணமான குடும்பத்தில் பிறந்த வேலுமணி, இன்று சசிகலாவைவிட அதிகசொத்து மட்டுமல்ல... அதிகாரமும் படைத்த நபர். இவரை எதிர்த்துப் பேச எடப்பாடி பழனிசாமியும் ஓ.பி.எஸ்.ஸும் கூட பயந்து நடுங்குவார்கள்.

அரசியலில் ஆரம்ப கட்டத்தில் தன்னை வளர்த்துவிட்ட கே.டி.ராஜு என்கிற எம்.எல்.ஏ., கிணத்துக்கடவு தாமோதரன் என்கிற அமைச்சர் ஆகியோரை சரி செய்து கீழே தள்ளிவிட்டு எம்.எல்.ஏ.வான வேலுமணி, சசிகலாவின் உறவினர் ராவணன் தயவில் அமைச்சரானார்.

ddd

Advertisment

ஹுண்டாய் கம்பெனியில் ஜெ.வுக்குத் தெரியாமல் 20 கோடி ரூபாய் வாங்கினார் என ஜெ.வின் செயலாளரான ஷீலா பிரியா கண்டுபிடித்தார். அதனால் அவரை பதவியிலிருந்து நீக்கிய ஜெ.விடம், "அந்த 20 கோடியை சசியின் உறவினர் டாக்டர் வெங்கடேஷிடம் கொடுத்தேன்' என அப்படியே போட்டுக்கொடுத்தார் வேலுமணி. பின்னர் சசிகலாவின் காலில் விழுந்து சமாளித்து, மறுபடியும் அமைச்சரான வேலுமணியையும் அவரது மேனரிசத்தையும் அடிக்கடி கிண்டலடித்து ஜெ. சிரிப்பாராம்.

கடைசியாக சசியின் குடும்பத்தைச் சேர்ந்த டி.டி.வி. தினகரனிடம் மோதினார் வேலுமணி. ஒட்டுமொத்த அதிமுகவினரை எடப்பாடி பழனிசாமி தலைமையில் சசிகலாவுக்கு எதிராக பாஜகவுக்கு ஆதரவாக கொண்டுபோய் நிறுத்தி, தனது தொகுதியில் ஆசிரமம் வைத்துள்ள சாமியார் ஜக்கி வாசுதேவ் ஆதரவுடன் பவர்ஃபுல்லாக வலம்வந்த வேலுமணிக்கு ரெய்டு செக் வைத்தது திமுகஅரசு.

ஆரம்பத்தில் குனியமுத்தூர் நகராட்சித் தலைவராக அரசியல் வாழ்வைத் துவக்கிய வேலுமணி, குடிநீர் கனெக்ஷனுக்கு கட்டிங் கேட்டுதான் தனது ஊழல் கணக்கைத் துவக்கினார். இன்று சென்னையில் மிக விலையுயர்ந்த அபார்ட்மெண்ட்டான பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி. நகரி ஈஊஊ இதஞந ஞசஊ 74 என்கிற குடியிருப்பில் ஆறு பிளாட்டுகளை வைத்துள்ளார். "ஒரு பிளாட்டின் விலை 35 கோடி ரூபாய் என 210 கோடி ரூபாய்க்கு ஒரே இடத்தில் சொத்து வாங்கியுள்ளார்' என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.

ddd

"ஜெ.'வையே பதம் பார்த்தது சொத்துக் குவிப்பு வழக்கு என்பதால் வேலுமணி இதற்குத்தான் அதிகம் பயந்தார். வேலுமணிக்கு எதிராக திமுகவின் ஆர்.எஸ். பாரதியும், அறப்போர் இயக்கமும் போராடினார்கள். திமுக, கவர்னரிடமும் வேலுமணியின் ஊழல் பட்டியலை அளித்தது. அறப்போர் இயக்கத்துடன் சேர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் போட்டது.

வேலுமணியோ அறப்போர் இயக்கத்தின் மீதும், ஊழல்களை வெளியிட்ட பத்திரிகைகளின் மீதும் வழக்குபோட்டே சரிக்கட்டலாம் என நினைத்தார். அறப்போர் இயக்கத்தின் மேல் 32 வழக்குகளைப் போட்ட வேலுமணி, பத்திரிகையாளர்கள் மேல் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளைத் தொடர்ந்தார். தமிழ்நாடுலஞ்ச ஒழிப்புத் துறையைத் தனது கைப்பாவையாகவே மாற்றினார். டி.ஐ.ஜி.யான ராதிகா, எஸ்.பி.யாக இருக்கும் சண்முகம், பொன்னி ஆகியோரை வைத்தே விளையாடினார். தினமும் வேலுமணியிடம் தொலைபேசியில் பேசும் ராதிகா, வேலுமணி மீது விசாரணை நடந்துங்கள் என உயர் நீதிமன்றம் கொடுத்த உத்தரவுக்குப் பதிலாக அவர்மீது எந்தத் தவறும் இல்லை என சான்றிதழ் கொடுத்தார்.

திமுகஆட்சிக்கு வந்ததும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தலைவராக, அமித்ஷாவையே கைது செய்த தமிழக அதிகாரியான கந்தசாமி பொறுப்பேற்றார். அவர் "ராதிகாவை மாற்றுங்கள்”என டி.ஜி.பி.யாக இருந்த திரிபாதியிடம் கேட்டார். அவர் "முடியாது' என மறுத்தார். இது காவல்துறைக்குள் சர்ச்சையானது.

ddd

ராதிகா தற்போது திருச்சி பகுதி சட்டம் - ஒழுங்கு அதிகாரியாக உள்ளார். எஸ்.பி. சண்முகத்தை இதுவரை மாற்றவில்லை. "ராதிகா, திருச்சியில் இருந்தவாறே சண்முகத்தின் துணையுடன் எஸ்.பி. வேலுமணிக்கு ஆதரவான வேலைகளில் ஈடுபட்டுவருகிறார்' என நடப்பவற்றைச் சொல்கிறார்கள் வேலுமணிக்கு நெருக்கமானவர்கள்.

மத்திய பாஜக. அரசில் அமைச்சராக உள்ள பியூஸ் கோயல் உதவியுடன் வேலுமணியின் மகன் படித்து ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, வடக்கு ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் தமிழ்நாட்டில் சேர்த்த பணத்தை முதலீடாக செய்தார் என்பதை, அவரது ஆடம்பர வாழ்வுடன் அட்டைப்படமாக வெளியிட்டது நக்கீரன். அந்த முதலீடுகள் தொடர்பான ஆவணங்களை ஒரு இடத்தில் வைக்காமல் கண்டெய்னர் லாரிகளில் வைத்து நிரந்தரமாக தமிழ்நாட்டையே சுற்றிவர வைத்திருக்கிறார் வேலுமணி.

இந்நிலையில், கந்தசாமி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை, "திமுகவும் அறப்போர் இயக்கமும் வேலுமணிக்கு எதிராக கொடுத்த புகாரில் உண்மை இருக்கிறது. மத்திய ஆடிட்டர் ஜெனரல் கொடுத்த அறிக்கைப்படி முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிவித்தது. ஹோட்டல், நகைக்கடை, கட்டுமான நிறுவனங்கள், என்ஜினியரிங் கம்பெனிகள் என 17 நிறுவனங்கள் மூலம் வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன், சந்திரபிரகாஷ், சந்திரசேகர் உள்ளிட்ட ஏழு பேர் வேலுமணி ஆதரவுடன் உள்ளாட்சித் துறையில் ஊழல் செய்து சுமார் 810 கோடி ரூபாய் முறைகேடு செய்திருக்கிறார்கள்'' என முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.

லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த நடவடிக்கைகளில் சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் நடந்த ஒப்பற்ற முறைகேடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த முறைகேடுகளை செய்த காலகட்டத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருந்த கார்த்திகேயன், பிரகாஷ், பாஸ்கரன் போன்ற அதிகாரிகள் சேர்க்கப்படவில்லை. அவர்கள் சாட்சிகளாக வருவார்கள். "வேலுமணி சொன்னார்... செய்தோம்' என சொல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்... திமுகஅரசு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. அதில் உள்ளாட்சித்துறை முறைகேடுகளும் இடம்பெற்றன. அடுத்து ரெய்டுதான் என ராதிகா மூலம் முன்கூட்டியே அறிந்த வேலுமணி, தனதுஅபார்ட்மெண்ட்டிலிருந்து எம்.எல்.ஏ. விடுதிக்கு வந்து தங்கினார். காலை எம்.எல்.ஏ. விடுதிக்கு வந்த லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் "என்ன இவ்வளவு லேட்டா வர்றீங்க?' என ஜோக்கடித்து சிரித்திருக்கிறார் வேலுமணி.

ஜெ. வீட்டிற்கு சோதனை செய்ய போலீசார் போனபோதுகூட கூடாத கட்சிக்காரர்களை வேலுமணியை போலீசார் ரெய்டு செய்தபோது வேலுமணி திரட்டியிருக்கிறார். எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் அமைச்சர்கள், வழக்கறிஞர்கள், கட்சித் தொண்டர்கள் என ஏதோ ஒரு மாநாட்டிற்கு கூட்டிய கூட்டம் சேர்த்தார். 65 இடங்களில் நடந்த ரெய்டில் வெறும் 13 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் சொத்துக்கள் குறித்த ஆவணங்களுடன் திரும்பியது லஞ்ச ஒழிப்புத்துறை. "வேலுமணி மீது போட்ட வழக்கு மிகவும் நேர்த்தியானது. அதற்கு பெரிய புதிய ஆதாரம் எதுவும் தேவையில்லை. ஏற்கனவே கொடுத்த புகார் தொடர்பான கூடுதல் ஆதாரங்களை, இன்றைய திமுகஅரசு அளித்த ஆதாரங்களை எளிதாக அரசு திரட்டிவிடும்'' என்கிறார் அறப்போர் இயக்கம் ஜெயராமன். ஆனால் "பல ஆயிரம் கோடிகளை வைத்துள்ள வேலுமணியின் வீடுகளில் வெறும் 13 லட்சமா கிடைத்தது?' என திமுகவினர் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கேள்வி எழுப்புகிறார்கள்.

வேலுமணி, "திமுகஅரசின் இந்த நடவடிக்கை தோல்வி, நான் மிஸ்டர் க்ளீன்' என டி.வி.க்களில் பேசுகிறார். அதிமுகவின் ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொண்டு இயல்பாக இருப்பதுபோல வெளிப்படுத்துகிறார்.

லஞ்ச ஒழிப்புத்துறை கந்தசாமியிடம் ஸ்டாலினும் காட்டமாகப் பேசியிருக்கிறார். வேலுமணியுடனான ஆடு-புலி ஆட்டத்தில் திமுகஒரு முக்கியமான காயை, ரெய்டுகள் மூலம் எழுப்பியிருக்கிறது. "இது ஆரம்பம்தான். லஞ்ச ஒழிப்புத்துறையில் உள்ள வேலுமணிக்கு விசுவாசமான கறுப்பு ஆடுகளைக் களைந்துவிட்டு முழு முதல் தாக்குதலை லஞ்ச ஒழிப்புத்துறை கந்தசாமி தலைமையில் மேற்கொள்ளும்'' என நம்பிக்கை தெரிவிக்கின்றன காவல்துறை வட்டாரங்கள்.

படங்கள்: ஸ்டாலின், குமரேஷ்

raid admk Jayalalithaa s.p.velumani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe