Advertisment

“கொலை செஞ்சிட்டு சமாதானமா போனா சட்டம் ஏத்துக்குமா? ; அக்கா தம்பி பேச்சு அப்படிதான் இருக்கு...” - புதுமடம் ஹலீம் தடாலடி

ரதக

பாஜகவிலிருந்த திருச்சி சூர்யா சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த டெய்சி என்பவரோடு பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த விவகாரத்தில் திருச்சி சூர்யாவைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்த அக்கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம்-ஐ கட்சியிலிருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீக்கினார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதுதொடர்பாக புதுமடம் ஹலீம் அவர்களிடம்கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில் வருமாறு,

Advertisment

"டெய்சி அவர்கள் சூர்யா பேசிய ஆடியோ பாஜகவில் உள்ள தலைவர்களிடம் கொடுத்து விட்டேன் என்கிறார். ஆனால் அவர் ரகசியமாகக் கொடுத்த ஆடியோ வெளிவருகிறது என்றால் பாஜகவில் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது. அப்படி என்றால் வேண்டுமென்றே அவர்கள் ஆடியோவை வெளியே லீக் செய்துள்ளார்கள் என்றுதானே நினைக்கத் தோன்றும். இதைச் சாதாரணமாகக் கடந்து போக முடியாது. இப்ப வேண்டுமானால் அவர்கள் நாங்கள் அக்கா தம்பி என்று பேசலாம், மறந்துவிட்டோம் என்று கூறலாம். ஆனால் இதை எளிதாக எப்படிக் கடந்துவிட முடியும்.நாளை வேறு ஒருவருக்கும் இந்த பாதிப்பு நிச்சயம் ஏற்படலாம். அப்போது யார் அவருக்கு உதவி செய்வார்கள். பொது வெளியில் வார்த்தைகளில் சொல்லக் கூச்சப்படும் அளவுக்கு ஆபாச வார்த்தைகளை இவர் பேசியுள்ளார். மெரினாவில் கையை வீசுவேன் தலையை வீசுவேன் என்று கொலை மிரட்டலை விடுத்துள்ளார். இதை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டுமா? இதைஅனுமதிக்கலாமா, சட்டப்படி இது எவ்வளவு பெரிய குற்றம்.

Advertisment

ஆனால் நாங்கள் எங்களுக்குள்ளான சண்டை சரி செய்துவிட்டோம் என்கிறார்கள். இது என்ன கட்சியா இல்லை கட்ட பஞ்சாயத்து இடமா என்று தெரியவில்லை. அவரை கட்சியை விட்டு முழுமையாக நீக்கிவிட்டு இப்படிப்பட்ட நபர் பாஜகவுக்கு தேவையில்லை என்றுதானே சொல்லி இருக்க வேண்டும். அதைச் செய்யாமல் சமாதானம் பேசவே இவர்கள் விரும்புகிறார்கள். இதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சில மாதங்களுக்கு முன்பு ஒரு மூத்த தலைவர் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என்ற அளவில் ஒரு ட்வீட் போடுகிறார். அவரின் அந்த கருத்துக்கு தற்போது வலு சேர்ந்துள்ளதாகவே பார்க்க வேண்டியுள்ளது. அப்போது கமலாலயத்தில் இந்த விவகாரம் தொடர்ந்து நடக்கிறது என்று அவர்கள் சொல்ல வருகிறார்களா என்று தெரியவில்லை.

இதுடெய்சிக்கு மட்டும் நடந்ததாகக் கருத முடியாது. போன மாதம் பாஜகவின் மாநில தலைவர் சசிகலா புஷ்பாவுக்கு என்ன நடந்தது. மாலை அணிவிக்கும் போது அவருக்கு நடந்த அநீதியை அனைவரும் பார்த்தோம். குஷ்பு தனக்கு நடந்தபோது பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்தார்கள்;போராட்டத்திற்கு அழைத்தார்கள். இப்போது அவர்கள் கண் எதிரே இத்தனை பெரிய விஷயம் நடந்துள்ளது ஆனால் மிக அமைதியாக இருக்கிறார்கள். தனக்கு வந்தால் பிரச்சனை அடுத்தவர்களுக்கு வந்தால் நீண்ட மவுனமா என்ற கேள்வி வருகிறது அல்லவா?இதற்கு கண்டிப்பாக குஷ்பு பதில் சொல்லியே ஆக வேண்டும். கொலை செஞ்சிட்டு சமாதானமா போனாசட்டம் ஏத்துக்குமா? அவர்கள் கடுமையான தண்டனைக்கு உரியவர்கள்" என்றார்.

Annamalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe