Skip to main content

வாட்ஸ்-அப் வதந்திகள்… விசாரித்த உண்மைகள்!

Published on 02/08/2018 | Edited on 02/08/2018

 

 

வாட்ஸ்-அப் குரூப்களை ஓப்பன் செய்தாலே ‘ப்ளீஸ் ப்ளீஸ் ஓர் உயிரை காக்க ஷேர் பண்ணுங்க. தமிழனா இருந்தா ஷேர் பண்ணுங்க. மனுஷனா இருந்தா ஷேர் பண்ணுங்க என்ற மெசேஜ்கள் தினந்தோறும் ஃபார்வேர்டாகி வந்துகொண்டே இருக்கின்றன. இதெல்லாம், பொய்யானது என்று சொன்னாலும் திரும்ப திரும்ப வந்துகொண்டேதான் இருக்கின்றன. அப்படி, சில தொடர்ந்து உலாவிக்கொண்டிருக்கும் வாட்ஸ்-அப் வதந்திகள் குறித்து விசாரித்தோம்…

Watts-Up Rumors

வாட்ஸ்- அப் வதந்தி-1:

விஜயா மருத்துவமனையில்,
vadapalani,chennai . வரும் 28ஆம் தேதியில் இருந்து, டிசம்பர் 5ம் தேதி வரை, குழந்தைகளுக்கு இலவச இருதய ஆபரேஷன்? Pls Share maximum
For Further information
contact  9380901361
9710507105
9629288403  நம்மால் முடிந்தவரை பகிர்வோம் 

எங்காவது ஓர் மூளையில் இருக்கும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தந்தைக்கோ. தாயிற்க்கோ. உற்றார் உறவினருக்கோ இச் செய்தி எட்டும் வரை....

 

விசாரித்த உண்மை:

கடந்த 5 வருடங்களுக்குமேலாக உலாவிக்கொண்டிருக்கும் வாட்ஸ்-அப் மெசேஜ் இது. பொதுவாக, தனியார் மருத்துவமனைகள் இலவச ஆரம்பக்கட்ட பரிசோதனைகளை செய்வார்கள் தவிர, இதய அறுவை சிகிச்சைகள் எல்லாம் செய்ய வாய்ப்பில்லை. இதைவிடக் கொடுமை, இந்த வாட்ஸ்-அப் மெசேஜில் தேதி குறிப்பிடப்படவில்லை. (அதுவும், எங்காவது ஒரு மூலையில் இருக்கும் என்பதற்கு பதில் மூளையில் என்று தமிழுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள்) மேலும், இதில் கொடுக்கப்பட்டுள்ள மூன்று செல்பேசி எண்களுக்கும் தொடர்புகொண்டோம். முதலிலுள்ள  9380901361 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டபோது ’ராங் நம்பர்’ என்றது பெண்ணின் கம்ப்யூட்டர் வாய்ஸ். அடுத்த, 9710507105  நம்பருக்கு தொடர்புகொண்டபோது  ‘பீப்’ சப்தம் மட்டும்தான் வந்தது. மூன்றாவதாக உள்ள 9629288403 என்ற எண்ணுக்கு பலமுறை தொடர்புகொண்டபோது ரிங் போய்க்கொண்டே இருக்கிறதே தவிர யாரும் அட்டெண்ட் செய்யவில்லை. எஸ்.எம்.எஸ். அனுப்பியபோதும் ரெஸ்பான்ஸ் இல்லை.  அதோடில்லாமல், சென்னை வடபழனியிலுள்ள  விஜயா மருத்துவமனைக்கு தொடர்புகொண்டு இப்படியொரு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறதா என்று கேட்டபோது, ‘இல்லை சார்… இது தவறான மெசேஜ். அந்த மெசேஜில் கொடுக்கப்பட்டுள்ள செல்ஃபோன் நம்பர்களும் எங்கள் மருத்துவமனையின் நம்பர் இல்லை’ என்றார் ஃபோனை அட்டெண்ட் செய்த ரிசப்ஷனிஸ்ட் பெண்மணி. ஆனால், இதைக்கூட பரிசோதிக்காமல் தொடர்ந்து இந்த மெசேஜை அனைத்து குரூப்புகளும் ஃபார்வேர்டு செய்து சேவையை ஆற்றிக்கொண்டிருக்கிறார்கள் பலரும்.

 

Watts-Up Rumors

வாட்ஸ்-அப் வதந்தி 2:

 *very very urgent plsssssssssssssss*
Pls study just a one min
தயவு செய்து ஷேர் பன்னுங்க
〰〰〰〰〰〰〰〰

ரஜினி, அஜித், விஜய், விஷால்,தணுஸ்,நடிகர்கள்  பட டீசர் பல லட்சம் தமிழர்களால் பார்க்கப்பட்டது.
ஆனால் இன்று இலங்கை இன படு கொலைக்கு 1500000 வாக்குகள் அளித்தால் தண்டனை வழங்க தயார் என்று ஐநா சபை கேட்கிறது

*இன்னும் ஒரே நாள்* *மட்டுமே மீதம் உள்ளது*
*200000 வாக்குகள் தேவை*
பல லட்சம் பெண்களை துடிதுடிக்க கற்பழித்த அந்த நாய்களை கூண்டில் ஏற்ற இரண்டு நிமிடம் ஒதுக்கி உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்

உங்கள் காலில் விழுகிறோம்...

pls share pannunga unga groups ku
http://www.tgte-icc.org

ஒரு சில Step மட்டுமே. Pls pls pls

♻♻♻♻♻♻♻♻♻pls vote it?

WTO

விசாரித்த உண்மை:
 

இதுகுறித்து, நம்மிடம் பேசும் உலக தமிழ் அமைப்பின்( டபுள்யூ. டி.ஓ.) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செழியனோ, “ஈழப்படுகொலை குறித்து உலகத்தமிழர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி போராட வேண்டும் என்ற நோக்கத்தில் சில இணையதளங்கள் வாக்கெடுப்பை நடத்தின. தவிர, இத்தனை லட்சம் வாக்குகளை  அளித்தால் தண்டனை தருவேன் என்றெல்லாம் ஐ.நா. சபை எந்த அறிவிப்பையும் கொடுக்கவில்லை. இது பொய்யான தகவல் என்றார். இதே, மெசேஜை நீ ஒரு தமிழனா இருந்தா ஷேர் பண்ணு என்றும் இப்போதும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
 

Watts-Up Rumors

வாட்ஸ் அப் வதந்தி 3:

pls edha parunga 9842701499 என் பெயர் செல்வி  சென்னையில் உள்ள கல்லுரியில். 

நான் LAW படிக்கிறேன். ஒரு விபத்தில் என் பார்வை 

 பறிபோனது. அறுவை  சிகிச்சை செய்ய ரூ. 8 லட்சம் வரை செலவாகும் என 

 மருத்துவர்கள் தெரிவித்தனர். நீங்கள் எனக்காக 

 பணம் அனுப்பவேண்டாம். நீங்கள் செய்ய வேண்டியது ஒரே ஒரு share மட்டும் தான். நீங்கள் செய்யும்  ஒவ்வொரு ஷேர்க்கும் 10 பைசா  எனக்கு கிடைக்கிறது. தயவு  செய்து இந்த மெசேஜ்-ஐ  ஜோக் என்று நினைத்தால் மேலே இருக்கும் என் 

 பெற்றோரின் மொபைல் எண்ணுக்கு தொடர்புகொள்ளவும். தயவுசெய்து ? உதவி செய்யுங்கள்.

please share

 

 

விசாரித்த உண்மை:

 

கண்ணாடியை திருப்புனா எப்புடி ஜீவா? ஆட்டோ ஓடும் என்று அஜீத் படத்தில் கருணாஸ் கேட்பதுபோல… வாட்ஸ அப்புல ஒரு மெசேஜை ஷேர் பண்ணினா உனக்கு எப்படிம்மா? 10 பைசா கிடைக்கும்? உன்னோட கண் ஆபரேஷனுக்கு 8 லட்ச ரூபாய்க்கு எத்தனை பேரு வாட்ஸ் அப்புல இந்த மெசேஜை எத்தனை பேருக்கு அனுப்புறது? என்ற கேள்வி எழும்பியது. மேலும், இது ஜோக் என்று நினைத்தால் மேலே இருக்கும் எனது பெற்றோரின் நம்பருக்கு தொடர்புகொள்ளவும்’ என அந்த மெசேஜில் இருந்ததால் நிச்சயமாக இது ஜோக் தான் என்பதால் அந்த எண்ணுக்கு தொடர்புகொண்டோம். அந்த, நீங்கள் தொடர்புகொள்ளும் நம்பர் தவறானது என்ற கம்ப்யூட்டர் வாய்ஸ் காரி துப்பாத குறையாய் சொன்னது. இதேபோல், பேருந்தில் ரயிலில் ஏ.டி.எம். கார்டு, ரேஷன் கார்டு, பள்ளிக்கல்லூரி சான்றிதழ் தொலைந்துவிட்டது என்றும் கண்டெடுக்கப்பட்டது என்றும் பெரும்பாலான மெசேஜ்கள் பரப்பப்படுகிறது. அம்மா… அம்மா என்று 100 முறை டைப் செய்யப்பட்ட மெசேஜை ’உங்க அம்மா மேல உண்மையான அன்பு வெச்சிருந்தா 100 பேருக்கு ஷேர் பண்ணுங்க’ என்றும்  ஜெய் ஆஞ்சனேயே மெசேஜை 200 பேருக்கு அனுப்பினால்  நல்ல சேதி வீடு தேடி வரும் என்றும் பல்வேறு மெசேஜ்கள்  வந்து குவிகின்றன. இதையெல்லாம் ஷேர் செய்வதன் மூலம் செல்ஃபோன் மற்றும் சிம்கார்டு கம்பெனிக்காரர்கள் நன்றாக வாழ்வார்களே தவிர ஃபார்வேர்டு செய்கிறவர்களுக்கு எந்த புண்ணியமுமில்லை. மேலும், இதில் கொடுக்கப்படும் தொடர்பு எண்கள் பெண்களையோ அல்லது எதிரிகளையோ பழிவாங்குவதற்காகவும் பரப்பரப்படும். அதனால், அப்படிப்பட்ட வாட்ஸ் அப் வதந்திகளை நாமும் பரப்பி தவறுகளுக்கு துணை நிற்கவேண்டாமே! ப்ளீஸ் ஷேர் ஹி ஹி!

சார்ந்த செய்திகள்