Advertisment

தலைவன் பண்பு பற்றி விவேகானந்தர்

vivekanandar

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

ஜெனரல் ஸ்ட்ராவ் என்கிற என் ஆங்கிலேய நண்பர் ஒருவர் சிப்பாய்க் கலகத்தின்போது இந்தியாவில் இருந்தார். அவர் சிப்பாய்க் கலகம் பற்றிய பல கதைகளை என்னிடம் கூறுவார். ஒரு நாள் அவருடன் நான் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது இடையில் நான் அவரிடம் கேட்டேன், "சிப்பாய்கள் போதுமான அளவுக்குத் தேர்ச்சி பெற்ற வீரர்களாய் இருக்கிறார்கள். மேலும் அதோடு அவர்களிடம் தேவையான அளவு துப்பாக்கிகளும் வெடிமருந்துகளும் உணவுப் பொருள்களும் இருந்திருக்கின்றன. அப்படி இருந்தும் அவர்கள் ஏன் படுதோல்வி அடைந்தார்கள்?'' என்று கேட்டேன்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

அதற்கு அவர் சொன்னார்: "சிப்பாய் கலகத்தின் படைத்தலைவர்கள் போரில் தங்கள் முன்னணியில் ஈடுபடுவதற்குப் பதிலாக படைக்குப் பின்னால் பாதுகாப்பான ஒரு பகுதியில் இருந்து கொண்டு, "வீரர்களே சண்டையிடுங்கள்' என்று கத்திக் கொண்டிருந்தார்கள். தலைமை ஏற்பவர்கள் தாங்கள் முதலில் மரணத்தை நோக்க முன்வந்தால் அல்லாமல் எஞ்சிய படைவீரர்கள் முழுமனதுடன் போரில் ஈடுபட முன்வர மாட்டார்கள்'' என்று பதில் கூறினார்.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

"தலைவன் என்பவன் தன் தலையைப் பலி கொடுக்கக் கூடியவனாய் இருக்க வேண்டும். ஓர் லட்சியத்துக்காக நீ உன் உயிரையும் அர்ப்பணிக்கக் கூடியவனாக இருந்தால்தான் நீ ஒரு தலைவனாக இருக்கமுடியும். ஆனால் நாம் அனைவரும் தேவையான தியாகம் எதையும் செய்யாமலேயே தலைவர்களாகிவிட விரும்புகிறோம். அதன் விளைவு வெறும் பூஜ்ஜியமாய் விடுகின்றது. நாம் சொல்வதை எவரும் கேட்பதில்லை'' என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

leaders Leadership vivekananda
இதையும் படியுங்கள்
Subscribe