Advertisment

விநாயகர் சிலை வைப்பவர்களா நீங்கள், இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க.

vinayagar sathurti

நாளை விநாயகர் சதுர்த்தி, ஊரின் பெரும்பாலான இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க திட்டமிடப்பட்டுள்ளன. விநாயகர் சிலைகளை வைக்க அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் இவை. இவற்றை பின்பற்றியே விநாயகர் சிலைகள் அமைக்கப்படவேண்டுமென அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisment
  • சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மற்றும் ரசாயன கலவைகளால் செய்த சிலைகளைத் தவிர்க்க வேண்டும். சிலை உயரம் பீடத்துடன் சேர்த்து 10 அடிகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும்.
  • நகராட்சி, காவல், தீயணைப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் முன்னதாகவே அனுமதி பெறவேண்டும்.
  • தனியார் இடமாக இருந்தால் அந்த இடத்தின் உரிமையாளரிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெறவேண்டும். பொது இடமாக இருந்தால் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்திடமிருந்து அனுமதி கடிதம் பெற்று, அதை காவல் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
  • பிற மத வழிபாட்டு தலங்களுக்கு அருகிலோ, போக்குவரத்திற்கு இடையூறாகவோ, மருத்துவமனை, கல்வி நிலையம் ஆகியவற்றின் அருகில் சிலைகளை வைக்கக் கூடாது.
  • பிற மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கோஷங்கள், பாடல்கள் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது.
  • அனுமதியின்றி மின்சாரம் எடுக்கக்கூடாது. அப்படி செய்தால் அது சட்டவிரோத செயலாகும்.
  • style="display:block"

    data-ad-client="ca-pub-7711075860389618"

    data-ad-slot="6972022440"

    data-ad-format="auto"

    data-full-width-responsive="true">

  • தற்காலிக பந்தல் அமைக்க பயன்படும் பொருட்கள், எளிதில் தீ பற்றக்கூடியவையாக இருத்தல் கூடாது. அப்படி பந்தல்களில் மின் உபகரணங்கள் இருப்பின் அவை தீயணைப்பு அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு ஒப்புதல் பெறவேண்டும்.
  • எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை சிலை வைக்கும் இடத்திற்கு அருகிலோ, உள்ளேயோ வைக்கக்கூடாது. தீ விபத்து பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக பின்பற்றவேண்டும்.
  • ஒலிப்பெருக்கி ஒலியின் அளவை எக்காரணம்கொண்டும் வரையறுக்கப்பட்ட அளவை மீறக்கூடாது. இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணிவரை ஒலி பெருக்கிகளையோ, வெடிகளையோ பயன்படுத்தக்கூடாது.
  • style="display:block"

    data-ad-client="ca-pub-7711075860389618"

    data-ad-slot="6677891863"

    data-ad-format="auto"

    data-full-width-responsive="true">

  • காவல்துறையால் வகுக்கப்பட்ட பாதையில் மட்டுமே சிலை கரைப்பு ஊர்வலங்கள் நடத்தப்படவேண்டும், அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்கவேண்டும்.
  • சிலை அமைப்பவர்களின் சார்பில் எப்போதும் சுழற்சி முறையில் ஐந்து பாதுகாவலர்கள் நியமிக்கபட வேண்டும்.
  • சமூக உணர்வுகளையும், அமைதியையும் பேணிக்காப்பது நமது கடமை, அவற்றிற்கு எந்த இடையூறும் ஏற்படாதவாறு நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
Advertisment

விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடுகள் கட்டுப்பாடுகள் விநாயகர் சதுர்த்தி vinayagar chaturthi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe