ADVERTISEMENT

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி இருந்தால் இந்த ஊரடங்கே தேவையில்லாமல் போய் இருக்கும் - விக்ரமராஜா பேச்சு!

11:35 AM Apr 17, 2020 | suthakar@nakkh…


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 21 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 400-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 13,000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கத்தலைவர் விக்ரமராஜா அவர்களிடம் பல்வேறு கேள்விகளை நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

ADVERTISEMENT



மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உலகமே முடங்கிக் கிடக்கிறது. இந்தியவே முடங்கிக் கிடக்கிறது. இந்த நிலையில் அத்தியாவசியக் கடைகள் திறந்திருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் நாடு முழுவதும் திறந்திருக்கின்றது. பழக்கடைகளும் திறந்திருக்கின்றன. இந்தச் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?

குறிப்பாக இந்த கரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி போது நாமெல்லாம் வேடிக்கை பார்த்தாகத்தான் நான் நினைக்கிறேன். இந்த அளவுக்கு உலகம் முழுவதும் பரவும் என்று கூட நாம் நினைக்கவில்லை. அது நம் நாட்டிற்குள் நுழைந்து இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா எனும் எண்ணத்தைக் கூட எங்கள் மனதில் ஏற்படுத்தியிருந்தது. இன்றைக்கு இந்தியா முழுவதும் இதுவரை கண்டிராத ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் கடுமையான ஒரு நிலையைச் சந்தித்துள்ளது. என்ன செய்வது என்று தெரியாதபடி சூழ்நிலைகள் நெருக்கடியான காலக் கட்டத்தில் இருக்கின்றது. இன்றைக்கு நாம் ஊரடங்கை போட்டுள்ளோம். ஆனால் கடந்த ஜனவரி மாதமே வெளிநாடுகளில் வருபவர்களை ஒரு விமான நிலையத்தில் வருவது போல செய்து அங்கேயே மருத்துவமனை அமைத்து சிகிச்சை அளித்திருந்தால், இன்றைக்கு நாம் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

ADVERTISEMENT


அதை எல்லாம் முறையான காலத்திலேயே செய்யாமல் விட்டுவிட்டார்கள். இன்றைக்கு மளிகைக் கடைகாரர்கள், காய்கறி கடைக்காரர் எல்லாம் எவ்வித கஷ்டமும் இல்லாமல் வியாபாரம் செய்வது போல நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் அவர்களுக்கும் கடுமையான கஷ்டங்கள் இருக்கிறது. நாங்கள் முதல் போட்டு கடை நடத்தி வருகிறோம், ஆட்களுக்குச் சம்பளம் கொடுத்து வருகிறோம். ஆனால் பொருட்களை அரசாங்கம் சொல்கிற நேரத்தில்தான் விற்க வேண்டி உள்ளது. ஆறு துறை அதிகாரிகளுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டி வருகிறது. காவல்துறை அதிகாரிகள், ஊராட்சி அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் என பல்வேறு அதிகாரிகள் கடைக்கு வருகிறார்கள். இதில் ஒரு துறை அதிகாரிகள் நன்றாக விதிமுறைகளைக் கடைபிடிப்பதாக கூறிவிட்டு சென்றால், மற்றொரு அதிகாரி வந்து கடைக்கு சீல் வைத்துவிடுவேன் என்று கூறுகிறார். நாளைக்கு என்ன சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டி வருமோ என்ற நிலையில்தான் நாங்கள் தொழில் செய்து வருகிறோம்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT