Vijayadharani

Advertisment

2009-ல் இலங்கையில் நடந்த இனப்படுகொலை, மனித உரிமை மீறல்களுக்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளே காரணம் என குற்றம்சாட்டி தமிழகம் முழுவதும் ஆளும் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இதுகுறித்து நக்கீரன் இணையதளத்திடம் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயதாரணி,

ஆளும் அ.தி.மு.க.வின் விநோதமான ஆர்ப்பாட்டம். மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக நடத்தப்படும் நாடகம். உணர்ச்சிகளை தூண்டிவிட்டு ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். அதுதான் உண்மை. இந்த ஆர்ப்பாட்டத்தால் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் வராது என்றார்.