தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதேபோல் அதிமுக-பா.ஜ.க அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன.

Advertisment

சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. அதேபோல் விஜய்யின் தவெகவும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 234 தொகுதிகளிலும் விருப்ப மனுக்களை பெற தவெக திட்டமிட்டு இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அண்மையில் வெளியிட்டிருந்தார். அதன்படி நேற்று 06/02/2026) முதல் பிப்ரவரி 14ம் தேதி வரை விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட இருக்கிறது. 

Advertisment

அதிமுகவினர் விஜய்யை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விஜய்யை விமர்சித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த தவெக மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் சிலர் என அதிமுகவை சைலன்ட் கில்லிங் செய்ததால் அதிமுக நேரடியாக விஜய்யை விமர்சிக்கும் நிலைக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. அதோடு அதிமுக வைக்கும் விமர்சனத்திற்கு அதிமுகவில் இருந்து வந்த செங்கோட்டையனை வைத்தே தவெக பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் அண்மையில் நக்கீரன் டிவியில் வெளியாகி வரும் 'சூடா ஸ்ட்ராங்கா' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அதிமுக அமைச்சர் செம்மலை இதுபோன்ற விமர்சனங்கள் வருவதற்கு முன்பே விஜய்யின் தவெக கட்சியை குறித்து பகிர்ந்து கொண்ட பதில் வைரலாகி வருகிறது.

Advertisment
145
admk Photograph: (politics)

அதில்,  ''இன்னைக்கு பொறுத்தவரையில் தவெக கொட்டிக்கிடக்கும் செங்கல். நாங்கள் (அதிமுக) கட்டி முடிக்கப்பட்ட கோபுரம். 2026 சட்டமன்ற தேர்தல் வரப்போகிறது. அதாவது நடக்கிற தேர்தல் கும்பாபிஷேகம் மாதிரி வரப்போகிறது. கட்டி முடிக்கப்பட்ட கோபுர கலசத்திற்கு தான் கும்பாபிஷேகம் நடக்கும். கொட்டிக்கிடக்கும் செங்கற்களுக்கு எல்லாம் நடக்காது. விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார் வளரட்டும், வாழட்டும் அதைப்பற்றி எங்களுக்கு ஒன்னும் இல்லை. ஆனால் நான் ஒன்னே ஒன்னு சொல்றேன்.

பழமொழி ஒன்று இருக்கிறது. 'பேராசை பெருநஷ்டம்' அதனால் பெரு நஷ்டம் வரும் அளவுக்கு பேராசை படக்கூடாது என்பதுதான் அதனுடைய அர்த்தம். இப்போது நான் சொல்றேன் எம்ஜிஆரோடு விஜய்யை ஒப்பிடுகிறார்கள் என்று சொல்கிறீர்கள். இதே விஜய் இரண்டு பொதுக்கூட்டத்தில் என்ன சொல்றாரு '1967ல் அண்ணா அரசியலில் செய்த ஒரு புரட்சி மாற்றத்தை நான் 2026-ல் உருவாக்குவேன்' என்கிறார். அடுத்து 1977 பொதுத்தேர்தலில் எம்ஜிஆர் செய்த அரசியல் மாற்றத்தை நான் உருவாக்குவேன் என்று விஜய் சொல்கிறார்.

நான் ஒன்றே ஒன்று உங்களுக்கு சொல்றேன். அண்ணா என்ன 1967- வந்து ஆட்சியை பிடித்தார் என்றால் ஸ்ட்ரைட்டா போய் கோட்டையில் உட்கார்ந்தாரா? பல சந்தர்ப்பங்களில் நிரூபித்து காட்டினார்.1957-ல் திமுகவின் முதல் தேர்தலில் 15 எம்எல்ஏக்களை உருவாக்கினார்.அடுத்து 1962-ல் 50 எம்எல்ஏக்கள். இப்படியாக மூன்றாவது தேர்தலில் தான் ஆட்சியை பிடிக்க முடிஞ்சது. இதுதான் அண்ணாவின் வரலாறு.