தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் பரப்புரை வியூகங்களை தாண்டி தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நோக்கி நகர்ந்து வருகின்றன. தற்போது தமிழ்நாடு காங்கிரசில் ஏற்பட்டுள்ள சில சிக்கல்கள் பேசு பொருளாகி உள்ளது. குறிப்பாக பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்துக்களும், பதிவுகளும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
Advertisment
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கட்சிகளின்  தேர்தல்  நகர்வுகள் குறித்த அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.
Advertisment
'காங்கிரஸில் ஒரு பிரிவினர் விஜய்யை எதிர்பார்க்கிறார்கள். இன்னொரு தரப்பினர் திமுக கூட்டணி தான் சரி வரும் என நினைக்கிறார்கள். என்னதான் நினைக்கிறது காங்கிரஸ்?'

 

088
political Photograph: (tn)
இந்திய அளவில் ஒரு பலமான எதிர்க்கட்சி அல்லது பாஜகவுக்கு எதிராக இருக்கும் ஒரு பலமான கூட்டணி என்பது தமிழ்நாடுதான். அதை யாரும் மறுக்க மாட்டார்கள். இன்றைய சூழலில் என்டிஏ கூட்டணிக்கு எதிராக ஒரு வலிமையான ஒரு கூட்டணி எந்த மாநிலத்தில் இருக்கிறது என்றால் அது தமிழ்நாட்டில் தான். இது பாஜகவிற்கு தொடர்ச்சியாக ஒரு எரிச்சலையும், தமிழ்நாட்டில் கால் வைக்கவே முடியவில்லை என்ற ஒரு கடுப்பையும் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. ஏற்கனவே ராகுல்காந்தி கூட பாராளுமன்றத்தில் 'தமிழ்நாட்டில் ஜெயிச்சிருவீங்களா? தமிழ்நாட்டில் நீங்க ஆட்சியை பிடிச்சிருவீங்களா?' என பாஜகவை நோக்கி பேசினார்.
Advertisment
இதற்கு என்ன அர்த்தம்? தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை சரியாக புரிந்திருக்கிறார்கள் என்கிற இந்த செய்தியை ராகுல் காந்தியை போன்ற வடஇந்திய தலைவர்களும் பேசுகிறார்கள். காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா காஷ்மீரி மொழியில் பேசும்போது உருதில் பேசுங்க என்று பத்திரிகையாளர் சொல்லும்போது ''இந்த வார்த்தையை நீங்கள் ஸ்டாலின் கிட்ட போய் சொல்லிருவீங்களா? ஸ்டாலின் தமிழில் பேசும்போது இந்தியில் பேசுங்கள் என கேட்பீர்களா?'' என்றார்.
இப்போது எதற்கு தமிழ்நாட்டில் ஏன் வட இந்திய தலைவர்களை முன்னாடி காட்டுகிறார்கள். ஏனென்றால் இங்கு தமிழ்நாடு ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கிறது. குறிப்பாக பாஜக எதிர்ப்பில் தமிழ்நாடு ஸ்ட்ராங்கா இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கிற 'இந்தியா' கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதை தொடர்ச்சியாக முயற்சி செய்றாங்க. அதனுடைய ஒரு பகுதிதான் விஜய்யோட என்ட்ரி. இப்போ விஜய் உள்ளே வரும்போது நாங்கள் கூட்டணி ஆட்சிக்கு ரெடி என்று சொல்லி ஒரு ஆசை வலையை விரிச்சிருக்காரு விஜய். யாருமே அதில் சிக்கவில்லை.
விசிக வந்து விடும், பல்வேறு கட்சிகள் வந்து விடுவார்கள் என தவெக நினைத்தது. ஆட்சியில் பங்கு கொடுக்கிறோம் என்பது ஒரு பெரிய மீன் பிடிப்பதற்கு உண்டான வலைதானே தவிர அதில் யாருமே சிக்கவில்லை. ஆனால் சிக்காது என எதிர்பார்த்த காங்கிரஸுக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய அளவில் பார்த்தால் தமிழ்நாட்டில் தான் காங்கிரஸ் இவ்வளவு எண்ணிக்கையில் வெற்றி பெறுகிறார்கள். இது தலைவர்களுக்கே தெரியும்.
ராகுல்காந்தி ஒவ்வொரு முறையும் 'எனக்கு ஸ்டாலின் சகோதரரைப் போன்றவர்' எனச் சொல்வதற்கு காரணம் இதுதான். அதே நேரத்தில் இங்கு இருக்கின்ற திமுக கூட்டணிகள் காங்கிரஸை மதிக்கின்றன. ஆனால் காங்கிரஸ் கட்சியை அழிப்பதற்கு வெளியே இருந்து ஆள் வரத்தேவையில்லை நாங்களே பார்த்துக் கொள்வோம் என சிலர் கிளம்பி உள்ளார்கள். பிரவீன் சக்கரவர்த்தி என்கிற ஒருவர் தேவையில்லாத ஒரு விமர்சனத்தை முன்வைத்து கூட்டணியை கலகலத்து போக வைக்கலாம் என நினைப்பதை பார்க்கிறோம்.