ADVERTISEMENT

ம.நீ.ம. வேலூர் தேர்தலை புறக்கணித்ததில் உள்நோக்கம் இருக்கிறதா? 

02:38 PM Jul 19, 2019 | rajavel

ADVERTISEMENT

மக்கள் நீதி மய்யம் வேலூர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில், போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளது. இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்தில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் முரளி அப்பாஸ்.

ADVERTISEMENT

வேலூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டுக்கொண்டிருந்தோம். அப்போது எங்கள் தலைவர், நாம் எந்த தேர்தல் வந்தாலும் போட்டியிடலாம். ஆனால் வேலூர் தேர்தலில் நிற்க காரணம் என்ன? நாடாளுமன்றத் தேர்தலை முழுமையாக சந்தித்தோம். இடைத்தேர்தல்களையும் சந்தித்தோம். அரவக்குறிச்சி, தஞ்சாவூர், ஆர்.கே.நகர் போன்ற தொகுதிகளில் பணப்பட்டுவடா புகாரில் தேர்தலை ரத்து செய்தார்கள். மீண்டும் தேர்தல் அறிவித்து, அதே நபர்கள் வேட்பாளர்களாக போட்டியிடுவதும் நடக்கிறது. இப்படித்தான் தேர்தல் நடக்கும் என்றால், ஏன் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். ரத்து செய்யாமலேயே தேர்தலை நடத்தி, விசாரணை நடத்தி அதற்கான தண்டனை வழங்கியிருக்கலாம். தேர்தலை ரத்து செய்தார்கள் என்றால் அதற்கான விசாரணை நடத்தி முடித்துவிட்டு, அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டாவது நடத்தலாம். ஒன்றுமில்லாம் மீண்டும் தேர்தலை நடத்துவதுதால் நேர்மையாக தேர்தலை சந்திப்பவர்கள் எவ்வளவு நஷ்டத்தை சந்திக்கிறார்கள். தேர்தல் ஆணையத்திற்கு கண்டனத்தை தெரிவிக்கும் விதத்தில் இந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று அவர் சொன்னதால் இப்படிப்பட்ட முடிவு எடுக்கப்பட்டது.


கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டதில் உள்நோக்கம் இருப்பதாக சிலர் கூறுகிறார்களே?

ஏன் புறக்கணிக்க வேண்டும் என்று விவாதிக்கப்பட்டதால் காலதாமம் ஆனது. மேலும் 18ஆம் தேதி மதியம் 3 மணி வரை காலஅவகாசம் இருக்கும்போது அறிவிக்க என்ன அவசரம்.

உள்நோக்கம் இருப்பதாக கூறுகிறார்களே?

எந்தவித உள்நோக்கமும் கிடையாது. இந்த தேர்தலில் யாரும் யாருக்கும் விட்டுக்கொடுக்க வேண்டாம். நிற்கக்கூடிய பெரிய கட்சிகள் மக்களை நம்பி நிற்கவில்லை. பணபலத்தை நம்பிதான் நிற்கிறது. அந்த விளையாட்டைத்தான் அவர்கள் விளையாடப்போகிறார்கள். இப்போதும் பணப்பட்டுவாடா குறைந்த மாதிரி தெரியவில்லை.


போட்டியிடாதது மக்கள் நீதி மய்யம் தொண்டர்களுக்கு ஏமாற்றமாக இருக்காதா?

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடந்தபோது, அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தி தொண்டர்களை உற்சாகப்படுத்தினோம். ஒரே ஒரு பாராளுமன்றத் தொகுதிக்கு தேர்தல் நடக்கிறது. இதனை ஏன் புறக்கணிக்கிறோம் என்று தெளிவுப்படுத்தியிருக்கிறோம். தேர்தல் ஆணையத்தை கண்டிப்பதற்காக புறக்கணித்திருக்கிறோம்.




பிக்பாஸ் பாதிக்கப்படும் என்பதால்தான் தேர்தலை புறக்கணித்தாக சொல்லுகிறார்களே?

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. 1972ல் கட்சி தொடங்கிய எம்.ஜி.ஆர். 77ல் முதலமைச்சரானார். இந்த இடைப்பட்ட காலத்தில் 16 திரைப்படங்கள் நடித்திருக்கிறார். படங்களில் நடித்தற்காக அரசியல் பங்கெளிப்பை குறைத்துக்கொண்டு எதுவும் அவர் செய்யவில்லை. எங்கோ வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு இங்கே ஏதாவது நடந்தால் அரைமணி நேரத்தில் அறிக்கை விடும் தலைவர்களெல்லாம் இருக்கிறார்கள். அப்படி அரசியல் செய்பவர்கள் யாரும் இவர்கள் கண்ணுக்குப்படவில்லை. இங்கேயே இருந்து கொண்டு ஒரு நாள் தொழில் ரீதியில் போவது மட்டும் சிலருக்கு கண்ணை உருத்துகிறது.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT