Skip to main content

மரணம் வரை நீங்காத காதலும், எளிமையும் திமுக எம்.எல்.ஏ.வின் கதை!

Published on 28/02/2020 | Edited on 28/02/2020

முருகப்பெருமானின் அவதாரங்களில் ஒன்றாக கருதப்படும் காத்தவராயன். காமாட்சி அம்மன் கோயில்களில் காத்தவராயன் சிலை இருக்கும், அதனை வணங்கியபின்பே காமாட்சியம்மனை வணங்குவார்கள் ஆன்மீகம் அறிந்தவர்கள். தமிழகத்தின் மைய மாவட்டங்களில் எல்லை தெய்வமாக வணங்கப்படுகிறார் காத்தவராயன். அதற்கு காரணம் இலக்கிய காத்தவராயனுக்கும் காதல் இருந்தது. அந்த காதல் கைகூடாமல் அவன் மரணத்தை தழுவினான். 7 ஜென்மத்திலும் அப்படி வாழ்ந்தான், 7வது ஜென்மத்தில் காத்தவராயனாக பிறந்து எல்லை காவல் வீராக இருந்து காதல் கைகூடாமலே கழுமரம் ஏற்றப்பட்டு மரணத்தை தழுவியதால் ஒரு சாரார் காத்தவராயனை இன்றும் கடவுளாகவே வணங்குகின்றனர். அந்த காத்தவராயன் வரிசையில் இந்த காத்தவராயனும் காதல் கைகூடாமல் காற்றில் கரைந்துள்ளார்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் தனி தொகுதி. 2016ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவை சேர்ந்த ஜெயந்தி பத்மநாபன் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பூசலில் தினகரன் அணியில் இணைந்தார் ஜெயந்தி. இதனால் இவரோடு சேர்த்து 18 எம்.எல்.ஏக்கள் பதவிகள் பறிக்கப்பட்டது. 18 தொகுதிகளில் காலி தொகுதியாக அறிவிக்கப்பட்டது. அந்த 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 2019 மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலோடு நடைபெற்றது.

VELLORE DISTRICT gudiyattam DMK MLA INCIDENT


இந்த இடைத்தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்ட திமுகவை சேர்ந்த காத்தவராயன் வெற்றி பெற்றார். திமுகவில் கிளை செயலாளர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், மத்திய மாவட்ட துணை செயலாளர் என படிப்படியாக கட்சியில் வளர்ந்தார். கட்சியின் பல்வேறு போராட்டத்தில் கலந்துக்கொண்டு சிறைக்கு சென்றவர். சேர்மன், எம்.எல்.ஏ என பதவிக்கு வருவதற்கு முன்பே ஊர் மக்களின் பிரச்சனையென்றால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து பேசுவார்.


சலவை தொழிலாளியாக இருந்த இவருக்கு வாலிப வயதில் ஒரு காதல் இருந்தது. உயர் படிப்பு படித்த அந்த பெண்ணும் இவரை காதலித்தார். அந்த காதல் காற்றில் கரைந்துவிட்டது. காதல் நினைவுகள் இதயத்தில் இருந்ததால், வேறு ஒரு பெண் இணையாக வேண்டாம் என திருமணம் செய்துக்கொள்ளாமல் தனது சகோதரின் குடும்பத்தாருடன் பேரணாம்பட்டில் வசித்து வந்தார்.

VELLORE DISTRICT gudiyattam DMK MLA INCIDENT

பேரணாம்பட்டு நகரத்தில் பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள், தலித் மக்கள், கிருஸ்த்துவர்கள் வசிக்கின்றனர். அந்த நகராட்சியில் 2011 முதல் 2016 வரை நகரமன்ற தலைவராக வெற்றி பெற்று பதவியில் இருந்தார். 2016ல் குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ சீட் கேட்டபோது கிடைக்கவில்லை. 2019 இடைத்தேர்தலின்போது சீட் கேட்டார். ஆனால் இவருக்கு உட்கட்சியிலேயே சிலர் எதிர்ப்பு கிளப்பினார்கள். அந்த நேரத்தில், நகராட்சி தலைவராக இருந்து சிறுபான்மை மக்களின் நல்மதிப்பை பெற்றுயிருந்ததால், இஸ்லாமிய பிரமுகர்களே காத்தவராயனுக்கு எம்.எல்.ஏ சீட் தாருங்கள் என திமுக தலைமையிடம் சிபாரிசு செய்ததாக கூறப்படுகிறது.


குடியாத்தம் தொகுதி அதிமுகவினரே தங்களது வேட்பாளர் கஸ்பா.மூர்த்தியை புறக்கணித்து காத்தவராயனை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு செல்வாக்கு பெற்றுயிருந்தார். எம்.எல்.ஏ தேர்தலில் வெற்றி பெற்றார். எம்.எல்.ஏவான பின்பும் எந்த பந்தாவும் இருந்ததில்லை. இப்போதும், இவரது வீடு ஓலை வீடு தான். சரியாக 9 மாதம் மட்டும்மே எல்.எல்.ஏவாக இருந்தார்.


சில வருடங்களாக அவருக்கு இருதய நோய் இருந்துவந்தது. அதற்கான சிகிச்சையை சரியான முறையில் எடுத்துக்கொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது. இரண்டு மாதத்துக்கு முன்பு அவருக்கு உடல்நிலை அதிகம் பாதிக்கப்பட அதன் பின்பே அப்போலோ மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துள்ளார். அப்போது, உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியதன் அடிப்படையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. முன்னேற்றப்பாதையில் சென்ற அவரது உடல் பின்னர் பின்னடைவை சந்தித்தது. இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்க்கு தகவல் சொல்லப்பட்டது. அவர் கட்சி முன்னோடிகளுடன் சென்று நலம் விசாரித்துவிட்டு வந்தார். இந்நிலையில் பிப்ரவரி 28ந்தேதி காலை 08.00 மணியளவில் மரணமடைந்தார்.


இதற்கு முன்பு திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 2011ல் திருச்சி தெற்கு தொகுதி எம்.எல்.ஏவாக மரியம்பிச்சை வெற்றி பெற்று அமைச்சரவையில் இடம் தரப்பட்டு பதவியேற்றுக்கொண்டார். மற்ற எம்.எல்.ஏக்கள் பதவியேற்புக்காக திருச்சியில் இருந்து சென்னைக்கு செல்லும்போது, பாடலூரில் வாகன விபத்தில் இறந்துப்போனார். சட்டமன்றம் செல்லாமலேயே மரணத்தை தழுவியவர் மரியம்பிச்சை எம்.எல்.ஏ. 2016ல் மதுரை திருமங்களம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சீனிவேலு, வாக்கு எண்ணிக்கையின் போது மறைந்தார். அதன்பின்னர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அதிமுக போஸ், ஒரு வருடத்துக்குள் இறந்தார். அதற்கடுத்து எம்.எல்.ஏவாகி சில மாதங்களிலேயே இறந்தது காத்தவராயன் தான் என்கிறார்கள்.

VELLORE DISTRICT gudiyattam DMK MLA INCIDENT

தமிழகத்தில் எம்.எல்.ஏக்களாக உள்ளவர்களுக்கு மாத சம்பளம் 1.05 லட்சம் மற்றும் இதர படிகள் உள்ளன. முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கான ஓய்தியம் 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. சம்மந்தப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ இறந்துவிட்டால் அவரது மனைவிக்கு ஓய்வூதியமாக 10 ஆயிரம் ரூபாய் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. 5 ஆண்டுகள் எம்.எல்.ஏவாக இருந்து ஓய்வு பெற்றால் தான் முழு ஓய்வூதியம் பெற ஒரு எம்.எல்.ஏ தகுதி உடையவராக மாறுகிறார். 9 மாதமே எம்.எல்.ஏவாக இருந்த காத்தவராயன் மறைந்துள்ளார். அவருக்கு குடும்பமும் கிடையாது. அவரது சகோதரர் குடும்பத்தை வாரிசாக குறிப்பிட்டுள்ளார் எனக்கூறப்படுகிறது. அந்த குடும்பத்துக்கு ஓய்வூதியம் கிடைக்குமா என கேள்வி எழுந்துள்ளது.


இதுப்பற்றி சட்டமன்ற செயலக வட்டாரத்தில் விசாரித்தபோது, புதுக்கோட்டை தொகுதியின் எம்.எல்.ஏவாக 2011ல் இருந்தவர் முத்துக்குமரன். அப்போது அதிமுக கூட்டணியில் சிபிஐ இருந்தது. சட்டமன்றத்தில் அதிக கேள்விகளை எழுப்பி, ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்த்தவர். அவர் வெற்றி பெற்று ஓராண்டுக்குள் இறந்துவிட்டார். அவரின் குடும்பம் ஏழ்மையான குடும்பம் என்பது ஜெயலலிதாவின் கவனத்துக்கு சென்றது. அப்போது சட்டமன்ற உறுப்பினர்களின், குடும்பத்துக்கான ஓய்வூதியம் வழங்கும் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. அதற்கு முன்பு வரை எம்.எல்.ஏவாக வெற்றி பெறுபவர் 3 ஆண்டுகளை கடந்தால் மட்டும்மே ஓய்வூதியம் வழங்கும் வகையில் விதிகள் இருந்தது. இந்த விதியை திருத்தி அதாவது  ஒரு சட்டமன்ற உறுப்பினர் பதவியேற்று கையெழுத்திட்ட நிமிடத்தில் இருந்து அவர் சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றுக்கு தகுதியானவராக மாறிவிடும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.

2012 முதல் சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் இறந்தால், தகுதி நீக்கம் செய்யப்பட்டால், பதவியை ராஜினாமா செய்தாலும் அவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை கிடைக்கும். இதுப்பற்றி முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரிடம் கேட்டபோது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 உறுப்பினர்களுக்கும் தற்போது மாதாந்திர உதவித்தொகை கிடைத்து வருகிறது என்றார். முன்னால் சட்டமன்ற உறுப்பினர் இறந்துவிட்டால் அவரது வாரிசுக்கு உதவித்தொகை கிடைக்கும். எம்.எல்.ஏ காத்தவராயன் இறந்துவிட்டார், அவருக்கு நேரடி வாரிசுகள் இல்லாத நிலையில் அவரது அண்ணன் குடும்பத்தார்க்கு கிடைக்க வழியுண்டு என்றார்கள்.

 

Next Story

திமுக பிரமுகர் அலுவலகத்தில் வருமான வரித்துறை திடீர் சோதனை

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 Income Tax officials conducted a surprise raid at the office of a DMK official

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நா.அசோகன். வேலூர் மாநகர மாவட்ட திமுக பொருளாளராகவும், இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவராகவும் உள்ளார். இவர் அரசு ஒப்பந்ததாரராகவும், தோட்டப்பாளையம் பகுதியில் பிரிண்டிங் பிரஸ் வைத்தும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் மார்ச் 19 ஆம் தேதி இரவு சுமார் 7 மணி அளவில் வேலூரை சேர்ந்த கூடுதல் கமிஷனர் பூரணசந்திரன் தலைமையிலான நான்கு பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திமுக நிர்வாகி அசோகனுக்கு சொந்தமான தோட்டப்பாளையம் டி.பி.கிருஷ்ணசாமி நகர் பகுதியில் உள்ள பிரிண்டிங் பிரஸ் அலுவலகத்தில் காவல்துறை பாதுகாப்புடன் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது அலுவலக ஊழியர்கள் மற்றும் அசோகனின் மகன் அரவிந்தன் இருந்துள்ளனர். பணம் ஏதேனும் இருக்கிறதா என சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் பணம் எதுவும் இல்லாத நிலையில் வங்கி தொடர்பான ஆவணங்களை கணினி மூலம் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர். இந்த சோதனையின் போது அலுவலகத்தின் ஷட்டர் மூடப்பட்டிருந்தது.  

சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு இரவு சுமார் 9:43 மணிக்கு சோதனை முடிந்து அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர். இதில் பிரிண்டிங் பிரஸ்சின் வங்கி தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி சம்மன் வழங்கியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக திமுக நிர்வாகி அசோகனின் மகன் அரவிந்தன் கூறுகையில், 'முதலில் பணம் ஏதேனும் இருக்கிறதா என்று சோதனையிட்டார்கள் பணம் எதுவும் கிடைக்காத நிலையில் வங்கி ஆவணங்களை மட்டும் சரிபார்த்து சென்றார்கள்' என கூறினார்.

Next Story

திடீரென சரிந்து விழுந்த தேர்; மயானக்கொள்ளை விழாவில் நடந்த சோகம்

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
The chariot that came grand and collapsed miserably; Tragedy at the funeral ceremony

வடமாவட்டங்களில் பிரபலமான மயானக் கொள்ளை திருவிழா வேலூரின் மிக முக்கியமான பாரம்பரிய திருவிழாக்களில் ஒன்றாகவும் உள்ளது. பாலாற்றங்கரையில் மயானக்கொள்ளை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி மார்ச் 9ஆம் தேதி  மயான கொள்ளை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இத்திருவிழாவையொட்டி வேலூர், விருதம்பட்டு, சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், மக்கான், சத்துவாச்சாரி, கழிஞ்சூர் மற்றும் நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், அங்காள பரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோவிலில் இருந்து பிரமாண்ட தேர் மூலம் ஊர்வலமாக பாலாற்றங்கரை சுடுகாட்டிற்கு எடுத்து வந்தனர்.

ஊர்வலத்தின் பின்னேயும் முன்னேயும் பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் காளியம்மன், முருகன், சிவன், விநாயகர், அங்காளபரமேஸ்வரி அம்மன் போன்ற கடவுள் போல வேடமிட்டு சென்றனர். சிலர் கையில் சூலாயுதம் ஏந்தி ஆக்ரோஷமாக சென்றதும் பார்ப்பதற்கு தத்ரூபமாக அமைந்து மெய் சிலிர்க்கச் செய்தது.

ஊர்வலத்தில்  இளைஞர்கள் இளம் பெண்கள், சிறுவர்கள்  டி.ஜே.பாடல்களை ஒலிக்கவிட்டு குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர். சில ஆண்கள் பலர் பெண்கள் போல வேடமிட்டு, சிலர் எலும்பு துண்டுகளை வாயில் கவ்விய படியும், ஆட்டுக் குடலை மாலையாக அணிந்த படியும் ஊர்வலத்தில் சென்றது ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

The chariot that came grand and collapsed miserably; Tragedy at the funeral ceremony

இதில் விருதம்பட்டு, கழிஞ்சூர், மோட்டூர், வெண்மணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 60 அடி உயரம் கொண்ட 3 தேர்களில் அங்காள பரமேஸ்வரி அம்மன் அலங்கரிக்கப்பட்டு வேலூர் பாலாற்றங்கரைக்கு ஊர்வலமாக வந்து சூறையாடல் நடைபெற்றது. சூறையாடல் முடிந்து 3 தேர்களும் திரும்பும் சமயம் மோட்டூர், வெண்மணி பகுதியை சேர்ந்த சுமார் 60 அடி உயரம் கொண்ட தேர் எதிர்பாராதவிதமாக சரிந்து கீழே விழுந்தது. தேர் சரிவதை பார்த்து அங்கிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் தப்பி ஓடி தப்பினர். ஆனாலும் வெண்மணி பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ் (30) என்பவர் சிக்கிக்கொண்டார். அவரின் அலறலை கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். லேசான காயங்களுடன் அவர் சிகிச்சைபெற்று வருகிறார்.

பாலாற்றில் டிராக்டர் மூலமாக தேர் திரும்பும் போது மணல் மற்றும் அங்கு செய்யப்பட்டிருந்த உருவ பொம்மைகளால் தேர் நிலை தடுமாறி கீழே சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. நல்லவேளை பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.