Advertisment

தமிழக அரசு மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது... அமைச்சரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து வரதராஜன் பேச்சு!

kl

சென்னையில் எந்த மருத்துவமனையிலும் படுக்கைகள் இல்லை, என் நண்பருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் சென்னையில் அவரை மருத்துமனையில் அனுமதிக்க ஒரு மருத்துவமனையிலும் பெட் இல்லை என்று நேற்று முன்தினம் பிரபல செய்தி வாசிப்பாளர் வரதராஜன் தெரிவித்திருந்தார்.

Advertisment

இது பெரும் சர்ச்சையான நிலையில், இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச்சந்தித்து அவருக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு வீடியோ பதிவிட்டு இருந்தார். அதில், "நேற்று நான் குறுஞ்செய்தி வீடியோ ஒன்றைபதிவிட்டு இருந்தேன். அதில், என் நண்பர் ஒருவர் உடல்நிலை சரியில்லை மருத்துவமனையில் அனுமதிக்க முயற்சி எடுத்து வருகிறோம் என்று பதிவிட்டு இருந்தேன். தற்போது முதலாவதாக ஒரு மகிழ்ச்சியான செய்தியைக் கூற விருப்பப்படுகின்றன். தற்போது என்னுடைய நண்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நல்ல முறையில் இருக்கின்றார். விரைவில் அவர் நலம் பெற்று திரும்புவார் என்று எதிர்பார்க்கிறேன். உங்களைப் போன்ற அனைவரின் பிரார்த்தனையால் தற்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து அவர் காணப்படுகின்றார். அடுத்ததாக நான் நேற்று போட்ட வீடியோ என்பது என்னுடைய நாடக நண்பர்கள் 25 பேருக்காக நான் போட்டது. அது தற்போது உலக அளவில் வைரலாகி உள்ளது. பல நாட்டில் உள்ள என்னுடைய நண்பர்கள் எல்லாம் என்னை தொடர்பு கொண்டு பேசினார்கள்.

Advertisment

உங்களுக்குத் தேவை இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே போங்கள். அதைத் தாண்டி தேவை இல்லாமல் வெளியே செல்லாதீர்கள். உங்கள் உடல் நலத்தைக் காக்க நாம் செய்யகின்ற முதல் முயற்சி இதுவாகத்தான் இருக்கும். குடும்பத்தோடு இருங்கள். நமக்கு ஒரு பிரச்சனை வந்தால் நமக்கும் பிரச்சனை, குடும்பத்தில் இருக்கும் நபர்களுக்கும் பிரச்சனை. எனவே பாதுகாப்பாக இருப்பது மிக முக்கியமான ஒரு அம்சம் ஆகும். ரொம்ப அவசியம் என்றால் மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை உபயோகித்துச் செல்ல வேண்டும். வேலை முடிந்த உடன் உடனடியாக வீட்டிற்கு வந்துவிட வேண்டும். தேவையில்லாமல் வெளியே சுற்றுவது தவிர்க்கப்பட வேண்டிய ஒரு அம்சம். ரொம்ப நேரம் வெளியே சுற்றிவிட்டு வீட்டிற்கு வரும் போது ஒரு குளியல் போட்டால் கூட தப்பில்லை. மத்திய, மாநில அரசுகள் இதைத் தடுப்பதற்கான பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். தினமும் பலவேறு மீட்டிங்களை நடத்தி மக்கள் பாதுகாப்புக்கு உறுதி செய்கிறார்கள்.

அரசாங்க மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைகள் வரை அனைவரும் முழு வீச்சில் இயங்கி கொண்டிருக்கிறார்கள். மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தொடர்ச்சியாக உழைத்து வருகிறார்கள். அவர்கள் யாருக்காக உழைக்கிறார்கள். நமக்காக, நாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பது நம்முடைய கடமை. பெரிய சவாலைச் சந்தித்துத் தற்போது நாம் வெளியே வந்துகொண்டு இருக்கிறோம். இதில் இருந்து நாம் வெளியே வர வேண்டும் என்று நம்முடைய வீட்டில் சிறிது நேரமாவது பிரார்த்தனை செய்ய வேண்டும். என்னுடைய வீடியோவை பார்த்த நண்பர் ஒருவர் ஒரு லிங்க் அனுப்பி இருந்தார். அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளில் உள்ள பெட்களின் இருப்பு எவ்வளவு இருக்கின்றது என்பதை அதன் மூலம் பார்த்துக்கொள்ளலாம். எத்தனை வெண்டிலேட்டர் இருக்கின்றது என்பதைக் கூட நாம் பார்த்துக்கொள்ளலாம்" என்றார்.

corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe