Skip to main content

காங்கிரஸை திட்டினால் மக்கள் ஓட்டுப் போட்டுவிடுவார்களா? -வானதி சீனிவாசன் 

Published on 22/03/2019 | Edited on 22/03/2019

பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் நக்கீரன் இணையதளத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார். 
 

காங்கிரஸை திட்டுவதை விட்டு கடந்த 5 ஆண்டுகளில் நீங்கள் செய்த சாதனைகளை பட்டியலிடுங்கள் என பிரதமர் மோடியை பிரியங்கா காந்தி கேட்டிருக்கிறாரே? 
 

 

rahul

 

ஒவ்வொரு பொதுக்கூட்ட மேடைகளிலேயும், ஒவ்வொரு மாநிலங்களுக்கு செல்லும்போதும் தன்னுடைய அரசாங்கம் என்ன செய்திருக்கிறது என்பதை மிக விரிவாக மோடி பேசிக்கொண்டிருக்கிறார். பிரியங்கா காந்தி காங்கிரஸ் என்கிற வார்த்தை வரும்போது மட்டும் பிரதமரின் பேச்சை கவனிக்காமல் மற்ற அத்தனைப் பேச்சுக்களையும் உற்று கவனித்தால் பிரதமர் என்ன செய்திருக்கிறார் என்பது புரியும். 
 

காங்கிரஸ் பதவிக்காக அலைகிறது என்று சொல்லும் மோடி, பாஜகவும் பதவிக்காகத்தானே தேர்தலில் போட்டியிடுகிறது என்பதை ஏன் மறந்துவிடுகிறார்?
 

 

பதவி என்பதை பாரதீய ஜனதா கட்சி மக்களுக்கு சேவை செய்கின்ற ஒரு வாய்ப்பாக பார்க்கிறது. கடைக்கோடி மனிதனுக்கும், கடைக்கோடி குடிமகனுக்கும் அவனை முன்னேற்றுவதற்கான வழி என்பதுதான் தங்களுக்கு பிரதான குறிக்கோள் என பாஜக உழைத்துக்கொண்டிருக்கிறது. பாஜக என்பது ஒரு தனிமனிதரின் பின்னாலேயோ, ஒரு தனிக்குடும்பத்தின் பின்னாலேயோ இயங்குகின்ற கட்சி அல்ல. முழுக்க முழுக்க ஜனநாயக ரீதியாக இந்த நாட்டில் இருக்கின்ற, அரசியலில் ஈடுபட துடிக்கின்ற அத்தனைப் பேருக்கும், தகுதியும் திறமையும் இருக்கின்றபோது உயர் பதவிகளுக்கு வர முடியும் என்பதை காட்டிக்கொண்டிருப்பது பாஜக. பதவிக்காக வருவது என்பது மக்களுடைய சேவையை பிரதானமாக வைப்பது என்பதை பாஜக கொள்கையாக வைத்திருக்கிறது. 

 


3 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து படேலுக்கு சிலை வைத்தும், சொந்த மாநிலமான குஜராத் தொகுதி எதிலாவது போட்டியிடாமல் ஏன் வாரணாசியிலேயே மோடி போட்டியிடுகிறார்?
 

அந்த சொந்த மாநிலத்தில்தான் மூன்று முறை முதல் அமைச்சராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றிக்கரமாக ஆட்சி செய்தார். கடந்த முறை வாரணாசியில் அவர் போட்டியிட்டார். இந்த முறையும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். ஒரு தொகுதியில் போட்டியிடுவது என்பது ஏதோ ஒரு மாநிலத்தை புறக்கணிப்பதாக ஆகாது. இந்த நாட்டின் அத்தனைப்பேருக்கும் சொந்தமான தலைவர். எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் அவர் வெற்றி பெறுவது உறுதி. காங்கிரஸ் குடும்பத்தில் இருக்கின்ற ராகுல், சோனியா காந்தி ஆகியோர் திரும்பத் திரும்ப ஏன் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்கள்? அவர்களுக்கு தைரியம் இருந்தால் வேறு தொகுதியில் போட்டியிடலாமே? 
 

கங்கையை சுத்தம் செய்வதாக 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியும் கங்கை பழைய நிலையிலேயே இருக்கிறதே? வாரணாசி மக்கள் மோடிக்கு வாக்களிப்பார்களா?
 

modi

 

கங்கைக்கு ஒதுக்கப்பட்ட நிதி மிகச் சரியாக செலவு செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 120 வருட காலம் கங்கையை அசுத்தப்படுத்திய கால்வாய்களெல்லாம் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது. கங்கை நதியினுடைய தூய்மையைப் பற்றி இந்திய அரசாங்கமல்ல, உலக அமைப்புகளே இன்று சான்றுகள் கொடுக்கக்கூடிய அளவில் கங்கை தூய்மைப்படுத்தப்பட்டிருக்கிறது. கங்கை தூய்மைப்படுத்தப்படவில்லை என்று அவர்கள் சொல்லுவது தவறு. வாரணாசி மக்கள் வெகு நிச்சயமாக மோடியை தேர்ந்தெடுத்து மக்களவைக்கு அனுப்புவார்கள். 

 

ஏழைத்தாயின் மகன், டீக்கடைக்காரர் என்று சொல்லி பிரதமரான மோடி, இப்போது காவலாளி மோடி என்று கூறினாலும் கிண்டல் செய்கிறார்களே? இதை எப்படி பார்க்கிறீர்கள்? உங்கள் கட்சியின் சத்ருசின்கா காவலாளி என்று மோடி அழைப்பதை விமர்சித்திருக்கிறார். (திரும்ப திரும்ப காவலாளி என்று சொன்னால் ரபேல் பற்றி மக்களே கேள்விக் கேட்பாளர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்)

 

சத்ருசின்காவினுடைய விமர்சனத்திற்கு நாங்கள் பதில் அளிக்க விரும்பவில்லை. தொடர்ச்சியாக கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் கட்சிக்கும், மோடிக்கும் எதிராக கருத்து சொல்லிக்கொண்டிருப்பவர். 
 

ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் பாஜக அரசின் சாதனைகளாக எதையுமே பட்டியலிட முடியாதா? காங்கிரஸை திட்டினாலே மக்கள் ஓட்டுப் போட்டுவிடுவார்களா? 

 

ஒவ்வொரு முறையும் இந்த அரசாங்கம் செய்திருப்பதை நாங்கள் மக்களுக்கு சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம். காங்கிரஸை திட்டவது மட்டுமே  பிராதான தொழிலாக வைத்துக்கொள்வது இல்லை. ஆனால் வித்தியாசத்தை மக்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். காங்கிரஸ் தொடர்ச்சியாக இத்தனை ஆண்டுகாலம் செய்ய இயலாத விஷயங்களை இந்த அரசாங்கம் ஐந்து வருடங்களில் செய்திருக்கிறது என்பதை ஒவ்வொரு முறையும் சாதனைகளாக சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம்.
 


புல்வாமா தீவிரவாத தாக்குதலை பாஜக ஓட்டுக்காக தான் திட்டமிட்டு நடத்தியதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் பகிரங்கமாக சொல்லியிருக்கிறாரே?
 

இது மிக கேவலமாக நம்முடைய நாட்டினுடைய மதிப்பை குலைக்கின்ற செயலாக பார்க்கின்ற விமர்சனம். நம்முடைய ராணுவ வீரர்களின் மன உறுதியை குலைப்பதற்காக அரசியலுக்காக இதனை பயன்படுத்துகிறார்கள். இந்த நாட்டில் இதற்கு முன்பாக பல்வேறு முறை நம்முடைய ராணுவ வீரர்கள் மீதும், நம்முடைய மக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கான சரியான பதிலடி என்பது இப்போதுதான் இந்த அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டு வருகிறது. 
 

தமிழ்நாட்டில் பாஜகவில் எந்த அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்?
 

ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களது வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பல்வேறு நடைமுறைகளை வைத்திருப்பார்கள். அதில், அந்த பிராந்தியத்தினுடைய தன்மை, அங்கு இருக்கும் கட்சியின் வளர்ச்சி என பல்வேறு விஷயங்களை பார்த்து ஒவ்வொரு தேர்தலிலேயும் வேட்பாளர் தேர்வு இருக்கும். அதிலும் பாரதீய ஜனதா கட்சியை பொறுத்தவரையில் தனியாக பாராளுமன்ற போர்டு என இருக்கிறது. அந்த பாராளுமன்றக் குழு, ஒவ்வொரு பாராளுமன்றத் தேர்தலுக்கும் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் மிக வெளிப்படையான தன்மையை பின்பற்றுகிறது. மாநில கமிட்டிகளிடமிருந்து பெயர்கள் வரவழைக்கப்பட்டு பரிசீலனை செய்துதான் அறிவிக்கிறார்கள். 

 

vanathi


 

பாஜகவினர் எதிர்பார்த்தார்களோ இல்லையோ, மாற்று கட்சியினர் வானதி சீனிவாசன் போட்டியிடுவார் என்று கூறி வந்தார்கள். வேட்பாளர்கள் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெறவில்லை என்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
 

கட்சி என்ன முடிவு எடுத்தாலும் அதை முழு மனதோடு நிறைவேற்றுகிற இடத்தில் நான் இருக்கிறேன். இதே அரசியல் கட்சித்தான் சட்டமன்றத் தேர்தலில் இரண்டு முறை வாய்ப்பு அளித்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் வாய்ப்பு வழங்கியது, அதற்கு பிறகு கட்சியின் பொதுச்செயலாளர் என்கிற மிகப்பெரிய பொறுப்பை கொடுத்து, சேலத்தில் இருந்து நீலகிரி வரை இருக்கின்ற பகுதிக்கும் என்னை பொறுப்பாளராக அறிவித்தது. என்னை எந்த தேர்தலில் வேட்பாளராக களம் இறக்க வேண்டும் என்பது கட்சிக்கு தெரியும். 87ஆம் வருடம் மாணவப் பருவத்திலேயே இந்த இயக்கத்தில் இணைந்து பணியாற்றிக்கொண்டிருக்கக்கூடிய எனக்கு எந்த நேரத்தில் எந்த பதவி தருவது என்பது கட்சியினுடைய முடிவு. முழுமையாக இந்த கட்சியை நான் நம்புகிறேன். 
 

தேர்தலுக்குப் பின்னர் தமிழக பாஜக தலைமையில் மாற்றம் வருமா?

இதெல்லாம் கட்சி முடிவெடுக்க வேண்டிய விஷயம். 

 

 

 

Next Story

தாமரை வடிவில் அலங்காரம்; புகாரில் சிக்கிய வாக்குச்சாவடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Decoration in the shape of a lotus at the polling station

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.