Advertisment

நக்கீரன் யூ-டியூப் சேனலில் லியோனியின் சிறப்புப் பட்டிமன்றம்... கவிப்பேரரசு வைரமுத்து தொடங்கி வைப்பு!

j

இந்த ஊரடங்கு நேரத்தில் மக்கள் வெளியே வர முடியாத இந்தக் காலகட்டத்தில் அவர்களின் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரு நிகழ்ச்சியாக, திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் சிறப்புப் பட்டிமன்றம் நக்கீரன் யூ-டியூப் பக்கத்தில் இன்று மாலை 5 மணிக்கு ஒளிப்பரப்பு செய்யப்பட இருக்கின்றது. "ஊரடங்கால் உறவுகள் நெருங்கியிருக்கிறதா அல்லது நெருக்கடியாகியிருக்கிறதா" என்ற தலைப்பில் விவாதம் நடக்க உள்ளது. உறவுகள் நெருங்கி இருக்கிறது என்ற தலைப்பில் மூவரும், நெருக்கடியாகியிருக்கிறதுஎன்ற தலைப்பில் மூவரும் உரையாற்ற உள்ளனர்.

Advertisment

hj

பட்டிமன்றத்திற்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையேற்கிறார். இந்த நிகழ்ச்சியை மாலை ஐந்து மணிக்கு கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் துவங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சி தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, " நக்கீரன் யூ ட்யூபில் லியோனி தலைமையில் பயன்மிக்க பட்டிமன்றம். இன்று மாலை 5 மணிக்கு எனது சுட்டுரைப் பக்கத்தில் தொடங்கி வைக்கிறேன். நற்றமிழை... நகைச்சுவைத் தமிழைக் கண்டு கேட்டு மகிழுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Advertisment
Vairamuthu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe