Skip to main content

ஒரே மேடையில் வைகோ, சீமான், திருமுருகன்! - ஒன்று சேர்த்த உலகத் தமிழ் அமைப்பு

Published on 25/04/2018 | Edited on 25/04/2018

கடந்த வாரம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் 'நீட் தேர்வு நிரந்தர விலக்கு மாநாடு' நடத்தப்பட்டது. அமெரிக்காவிலுள்ள 'உலகத் தமிழ் அமைப்பு', தமிழ்நாடு - புதுச்சேரி மாணவர் கூட்டமைப்புடன் இணைந்து ஒருங்கிணைத்த இந்த மாநாட்டு ஏற்பாடுகளில் இயக்குனர் கௌதமன் பங்காற்றியுள்ளார். "நீட் என்பது மருத்துவக் கல்வி குறித்த தமிழக மாணவர்களின் சிக்கல் மட்டுமல்ல. தமிழ்நாட்டின் எதிர்கால நலன், கல்வி நலன் மீதான தாக்குதல். இந்திய கூட்டாட்சி அமைப்பில் 1976 வரை மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, கல்விக் கொள்கைகள், அதிகாரங்கள் அனைத்தையும் ஒன்றிய அரசு அபகரித்துள்ளது." என்று 'நீட்'டை பற்றிய விளக்கத்தை அந்த அழைப்பிதழில் கொடுத்திருந்தனர்.
 

anti neet



இந்த மாநாட்டின் இன்னுமொரு சிறப்பு என்னவென்றால் சமீப காலமாக மேடைகளில் எதிரும் புதிருமாக, முன்னும் பின்னுமாக  இருக்கும், வெளிப்படையாகத் தாக்கிக் கொண்ட தலைவர்கள் உள்பட பல தமிழக அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டதுதான். அதிமுக மற்றும் நீட் ஆதரவு நிலைபாடுள்ள கட்சிகளை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும், சிறிய பெரிய அமைப்புகளும் இதில் பங்குபெற்றனர். வைகோவும், சீமானும் தற்போது எந்த மேடையில் ஏறினாலும் யார் தமிழர்? யார் தமிழீழத்துக்கு அதிக தொண்டாற்றியது என்று எதிரும் புதிருமாக இருக்கின்றனர். ஆனால், இந்த நிகழ்ச்சி நிரலில் இருவரின் பெயரும் இருந்தது. அதேபோல, திருமுருகன் காந்திக்கும் சீமானுக்கும் பெரும்பாலான கொள்கைகள் ஒன்றாக இருந்த போதிலும் சில விரிசல்கள் வந்து, அதன் பின்னர் மேடையில் தாக்கிக்கொண்டனர். அதற்குப் பின்  அவர்கள் இருவரும் ஒரே மேடையில் கலந்துகொள்ளவில்லை. அதுவும் இந்த மேடையில் நடந்தது.

 

vai see thiru



திருமுருகன் காந்தி பேசும் போது அதே மேடையிலிருந்த சீமான் அவர் பேசுவதை கவனித்து கொண்டிருந்தார். திமுகவிலிருந்து திருச்சி சிவா, விடுதலை சிறுத்தைகளிலிருந்து ஆளூர் ஷாநவாஸ், காங்கிரசிலிருந்து செல்வப்பெருந்தகை, திராவிடர் இயக்கதைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்மொழி, பாமக வழக்கறிஞர் பாலு, நடிகர் சத்யராஜ், மஜமக சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி என அரசியல் ஓட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் அனைத்து பெரிய கட்சிகளும் அமைப்புகளும் நீட் அநீதிக்கெதிரான இந்த மாநாட்டில் கலந்துகொண்டது, தமிழக மாநில அரசியலின் நோக்க வலிமையையும் இதை ஏற்பாடு செய்த  உலகத் தமிழ் அமைப்பின் மக்கள் நல ஈடுபாட்டையும் காட்டுகிறது. இந்த மாநாட்டில் தமிழத்தின் நீட் எதிர்ப்புக் குறியீடாக மாணவி அனிதாவின் படம் இருந்தது. 

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் வைகோ, "போராட்டக்களத்தில் உயிர் போகட்டும், தாமாக மாய்த்துக்கொள்ள வேண்டாம்" என்று தற்கொலையை தவிர்க்கும்படி அறிவுறுத்தினார். சென்ற மாதம் மதிமுக தொண்டர் ரவி, சில நாட்களுக்கு முன்பு வைகோவின் நெருங்கிய உறவினர் சரவண சுரேஷ் என நியூட்ரினோவை எதிர்த்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் தீக்குளித்த இரண்டு உயிர்களின் பாதிப்பு அவரிடமிருந்து முற்றிலுமாக அகலவில்லை. 
 

anti neet1



மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி இந்த விழாவில் பேசும்போது, " இந்த நீட் என்பது அதிகார வர்க்கம், சாதாரண மனிதனுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்த பயன்படுத்தும் கருவியாக இருக்கிறது", என்று குறிப்பிட்டார். சீமான்," இது மற்ற மாநிலங்களை போல அல்ல, யோசித்து போராடக் கூடிய கூட்டம் இது", என்றார். தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், "மீண்டும் மெரினா போராட்டம் போன்ற ஒரு புரட்சி வரும்", என்றனர். திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, " சீமான் நல்லதை சொன்னால் திமுக பாராட்டும்", என்றார். கவிஞர் வைரமுத்து, "அனிதா ஒரு நவீன காலத்து தெய்வம் " என்றார். இவ்வாறு மதியம் தொடங்கிய  நிகழ்ச்சி, இரவு பத்து மணிவரை இரு அமர்வுகளாக நடந்தது. இந்த மாநாட்டில் அரசியல்வாதிகள் மட்டும்  பேசவில்லை, மாணவர்களும், மருத்துவர்களும் என பல தரப்பு சமூக ஆர்வலர்கள், செயல்பாட்டாளர்களின் குரல்களும் நீட்டுக்கு எதிராக ஓங்கி ஒலித்தது.  

 

 

தமிழகத்தில் பல வேறுபாடுகள் வெறுப்புகளோடு இருந்தவர்களை தமிழர் நலனுக்காக ஒன்றாக நிற்க வைத்திருப்பது உலகத் தமிழ் அமைப்பு செய்திருக்கும் சாதனைதான். அந்த வகையில் இந்த மாநாடு ஒரு வெற்றிகரமான மாநாடாகத்தான் பார்க்கப்படுகிறது. அதே நேரம் வெளிநாடு வாழ் தமிழர்கள் பலவிதங்களிலும் கட்சிகளுக்கு முக்கியமாக இருப்பதால்தான் இத்தனை கட்சிகள் இங்கு ஒன்று கூடினர் என்றும் மற்றபடி அவர்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவது சாத்தியமில்லையென்றும் சிலர் பேசிக்கொண்டனர். இங்கு நிலை இப்படியிருந்தாலும் ஜல்லிக்கட்டு தொடங்கி, நீட், ஸ்டெர்லைட், காவிரி என தமிழர்களின் பிரச்சனைகளுக்கு உலகத்தமிழர்கள் ஒன்று கூடி குரல் கொடுப்பது மகிழ்ச்சியே.                

 

 

 

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.