Advertisment

"அரண்மனை நாயே அடக்கடா வாயை" -எச். ராஜாவிற்கு வைகோ கண்டனம் 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வாகன பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். கரிசகுளத்தில் வைகோஸ்டெர்லைட்டினால் ஏற்படும் தீமை குறித்தும், பா.ஜ.க தேசியசெயலாளர் எச்.ராஜா குறித்தும் பேசியது.

Advertisment

vaiko angry speech

நான் சுருக்கமாக சொல்கிறேன் ஸ்டெர்லைட் ஆலையினால் நம் பிள்ளைகளுக்கு புற்றுநோய் வரும், நுரையீரல் நோய் வரும். எண்பது, தொண்ணூறு வயதுவரைவாழக்கூடியவர்கள் நாற்பது, ஐம்பது வயதிலேயேஇறந்துவிடுவார்கள். முதலில் இந்த ஆலையை மஹாராஷ்டிராவில் அமைத்தனர் அங்கிருந்த விவசாயிகள் அங்கிருந்த இயந்திரங்களை அடித்து நொறுக்கினர். இந்த நிறுவனம் மிகப்பெரிய பணக்காரனுடையது.பின்பு தமிழ்நாட்டிற்கு வந்தான் இங்கு அப்போது அ.இ.அ.தி.மு.க ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது அவர்கள் அனுமதி அளித்துவிட்டனர். இந்த ஆலைத்திறந்த22 ஆண்டுகளாக நான் போராடிவருகின்றேன். நானும் உண்ணாவிரதம், மறியல் என்று மாறி, மாறி போராட்டங்கள் நடத்தி வந்தேன். இதற்காக பல முறை கைதாகியுள்ளேன்.

Advertisment

ஆனால் ஒருமுறை கூட வன்முறையை கையாண்டதில்லை. நான் அதன் பின் உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தேன், அதில் வெற்றிபெற்றேன். அவன் பணக்கார நிறுவனம் உடனே உச்சநீதிமன்றத்தில்ஸ்டே வாங்கிவிட்டான். அந்த வழக்கு மூன்றாண்டுகள் ஆனது கடைசியில் வெற்றிபெறுவேன் என்று நினைத்தேன் ஆனால் இல்லை. வைகோ பேசிக்கொண்டிருக்கும்பொழுது நடுவில் மது குடித்துவிட்டு ஒருவர் அவரிடம் ஏதோ கேட்க முற்பட்டார். அதற்கு வைகோ நீ குடித்துள்ளாய் அமைதியாக இரு நான் உன்னிடம் பேசமாட்டேன். நீ குடித்தால் உனக்கும் மட்டும் கேடில்லை உன் குடும்பத்திற்கும் தான்கேடுஎன்றார். மீண்டும் தனது பேச்சைத்தொடங்கினார். இங்கு நான் பேசுவதையெல்லாம் ஊடகத்தில் போடமாட்டார்கள் ஒருவர் மது குடித்துவிட்டு வைகோ கூட்டத்தில் தகராறு செய்தார் என்றுதான் போடுவார்கள்.

எங்கள் அம்மா மாரியம்மா மதுக்கடைகளை மூடுவதற்கு போரடியதால்தான் இறந்துபோனார்கள், இல்லையேல் இன்னும் இரண்டாண்டுகள் உயிரோடு இருந்திருப்பார். நான் மதுக்கடைகளை மூடுவதற்காக போராடினேன் கண்ணீர்ப்புகை அடித்தார்கள், சுடுவேன் என்று சொன்னார்கள் சுடு என்றேன்.டி.ஐ.ஜி முருகன் என்னை அன்று காப்பாற்றவில்லை என்றால் என்னை சுட்டிருப்பார்கள். அன்று நான் ஏன் மதுக்கடைகளை உடைத்தேன் பெண்கள் கண்ணீர் விடுகிறார்கள், வீட்டில் பெண்குழந்தைகள் இருக்க முடியவில்லை. அப்பனே பிள்ளைக்கு ஊற்றிக்கொடுக்கிறான், அவன் அத குடிச்சிட்டு பள்ளிக்கு செல்கிறான் அவனை பார்த்து வாத்தியார் பயப்புடுகிறார். நாடு கெட்டுவிட்டது நான் அரசியல் பிரச்சாரத்திற்கு பேச வரவில்லை. இந்த நாடு நன்றாக இருக்கவேண்டும், நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகதான் பேசுகிறேன்.

vaiko angry speech

இந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பல ஆண்டுகளாக போராடி வருகிறேன். நான் சொல்லும்போது அந்த மக்களுக்கு அதன் பாதிப்பு தெரியவில்லை. ஒருமுறை விஷவாயு தாக்கி அனைவரும் மயங்கி விழுந்தனர். அப்போதுதான் அவர்களுக்கு புரிந்தது வைகோ சொன்னது உண்மைதான், இது ஆபத்தானது என்று உணர்ந்தனர். இப்பொது முடியுள்ளார்கள் என்று மட்டும் நினைக்காதீர்கள். இந்த சர்க்கார் அவனுகளுக்கு ஆதரவு கொடுக்கும். இந்த ஒன்றரை மாதம் அல்லது ஒரு மாதம் போராட்டம் தணிந்த பின் இந்த அரசே அவர்களை நீதிமன்றத்தில் வழக்குப்போட வைத்து பின் அதற்கான வழிகளை மேற்கொண்டு மீண்டும் ஆலை திறக்கப்படுகிறதா இல்லையா என்று மட்டும் பாருங்கள். அதற்கு என்ன செய்யவேண்டும் ஐம்பதாயிரம் மக்கள் அந்த ஆலையை அடித்து நொறுக்க வேண்டும். அதற்காகதான் மக்கள் கூட்டத்தை சேர்க்க வந்தேன்.

அதனால் 28ஆம் தேதி தூத்துக்குடியில் நடக்கும் கூட்டத்தில் கரிசக்குளத்திலிருந்து சிலர் கலந்துகொள்ளவேண்டும். ஸ்டெர்லைட்டை நாம் மூடவில்லை என்றால் சுற்றுவட்டாரம் 40 கி.மீட்டருக்குவிவசாயமே இருக்காது. தூத்துக்குடியில் கடந்தசில ஆண்டுகளில் மட்டும் புற்றுநோய் உள்ளவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது. நேற்று இதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும்பொழுது, அனைத்து ஊடகமும் ஆளுநரை பற்றி செய்திபோடத் தொடங்கிவிட்டார்கள். ஒரு பெண் பத்திரிகையாளர் கன்னத்தை பேத்திபோல் எண்ணி தட்டிக்கொடுத்தாராம். நான்தான், தமிழ்நாட்டிற்கு ஆளுநர் வந்தவுடனே கேட்டேன் நீ புரோகித்தா இல்லை ப்ரோக்கரா என்று. இந்த ஆளுநர் எப்போது இந்த தமிழ்நாட்டை விட்டு செல்கிறாரோ அன்றுதான் தமிழகம் உருப்படும். இதற்கு நடுவில் எச்.ராஜா என்று ஒருவன் வைகோ பேசிவிட்டு மேடையிலிருந்து இறங்க முடியாது என்று கூறினான். எங்கள் ஆட்கள் அவன் வீட்டை சுற்றிவிடுவார்களோ என்று எனக்கு பயம்.

நான் சொன்னேன் அவன் ஏதோ தெரியாமல் பேசிவிட்டான் விட்டுவிடுங்கள் என்று கூறினேன். இவன் கலைஞர் குடும்பத்தை பற்றி தவறாக பேசியுள்ளான் என் இரத்தம் கொதிக்கிறது தி.மு.க தொண்டர்கள் அந்த கொடும்பாவியின் உருவ பொம்மையைகொளுத்தினார்கள். கலைஞரை முப்பது ஆண்டுகள் கண்களை காக்கும் இமைபோல் காத்தேன். ராஜாவின் பெயரை சொல்ல எனக்கு நாக்கு கூசுகிறது. இப்படித்தான் உங்கள் கட்சியில் அரசியல் தலைவர்களை இழிவாக பேசம்படி சொல்லியிருக்கிறார்களா. "அரண்மனை நாயே அடக்கடா வாயை" நாய் என்றால்மோடியின்அரண்மனையில் உள்ள நாய், அதனால்தான் அங்கிருந்து குறைக்கிறது. நீ பெரியார் சிலையை இரவில் ஏன் உடைக்கிறாய் நேரம் சொல்லிவிட்டு வந்து உடை பார்ப்போம். நீ படையை கொண்டு வா அப்படி வந்தால் நான் வெட்டுவேன்.

sterlite protest Banwarilal purihit vaiko
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe