Advertisment

கட்டடம் எல்லாம் இருக்கணும், மனுஷ மக்கள் யாரும் இல்லனா எப்படி! - வடிவேலு வருத்தம்

இப்போ,போர் நடக்குற மாதிரிதான் இருக்கு, கட்டடம் எல்லாம் இருக்கணும், மனுஷமக்கள் யாரும் இல்லனா எப்படி, எவன் பார்த்த வேலையோ இது. உலக நாடுகளிடம் இருக்கிற அணுக்குண்டை எல்லாம் புதைச்சிடணும். அது எதுவுமே தற்போது தேவையில்லை. மனித நேயம் ஒன்று சேரணும். மருத்துவ உலகம் தலை நிமிர்ந்து நிற்கணும். மருத்துவ உலகமே திணறுது. அவங்க சொல்வதை மட்டும் கேட்டா போதும். டாக்டர் எல்லாம் நமக்கு கடவுள் மாதிரி. இப்ப என்னன்னா, இந்த வீட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க. அது கோடு, இது வீடு. இந்த ரோட்டைத் தாண்டியும் வரக் கூடாது அப்படினு சொல்லிட்டாங்க. ரோட்டத்தாண்டியும் வரக்கூடாது, வீட்டத்தாண்டியும் வரக்கூடாது, கோட்டத்தாண்டியும் வரக்கூடாதுனு சொல்லிட்டாங்க, போச்சா...போச்சா!

Advertisment

gh

என்னா சேட்டை, நம்ம சொல்றதைக் கேட்க மாட்டேங்கிறதே இந்த மக்கள். ஆனால் இந்தக் காலம் நமக்குச் சொல்லிக்கொடுக்கிற பாடம் ரொம்ப அதிகம். நம்ம பிள்ளைகளிடம் நாம் சொல்லிக்கொடுக்க வேண்டும், தேவையில்லாமல் கைக்கொடுக்க கூடாது, முத்தம் கொடுக்கக் கூடாது, கைகளைக் கழுவ வேண்டும் என அனைத்தையும் கற்றுத்தர வேண்டும். குழந்தைகள் எத்தனைபெரிய அதிகாரியா வந்தாலும் இந்த நேரம் என்பது அவர்களுக்குப் பெரிய பாடம் தானே. இந்தப் பாடத்தைப்பசங்களுக்கு நடத்திட்டம்னா இதைவிட வேறு என்ன இருக்கு. சரியான சந்தர்ப்பத்தைக் கடவுள் கொடுத்திருக்கான், இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி புள்ளைங்கள வளர்த்திட வேண்டும். அவ்வளவுதான்!

Advertisment
vadivelu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe