கடந்த பிப்ரவரி 28 முதல் அமெரிக்காவும் இஸ்ரேலும் "ஆபரேஷன் எபிக் ஃப்யூரி" என்ற பெயரில் ஈரானிய ராணுவம், அணுசக்தி மற்றும் தலைமைத்துவ தளங்களை குறிவைத்து மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடந்த உயர்மட்டத் தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் பல உயர் இராணுவ மற்றும் அரசியல் பிரமுகர்களின் இறந்துள்ளது பரபரப்பான சூழலை மத்திய கிழக்கில் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நட்பு நாடுகளான துபாய் பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரால், சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் ஈரான் இஸ்ரேல் போர் சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/06/51-2026-03-06-16-28-01.jpg)
ஈரானுடைய நீர்மூழ்கி கப்பல் இந்தியா அருகில் அமெரிக்காவால் தாக்கப்பட்டுள்ளது. எப்படி பார்க்கிறீர்கள்?
ஈரானுடைய கப்பல் நேற்று பாதிக்கப்பட்டிருக்கு. கன்னியாகுமரியில் இருந்து 22 நாட்டிக்கல் தூரத்தில் இலங்கை கடல் எல்லைப் பகுதியில், ஒரு சர்வதேச எல்லைப் பகுதியில் தான் தாக்கப்பட்டிருகிறது. இந்தியாவிற்கு விருந்தாளிகளாக வந்தவர்கள். அதாவது கடந்த மாதம் பல்வேறு நாடுகளில் இருந்து ஒரு 10 நாட்கள் விசாகப்பட்டினத்தில் கப்பல்படை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தார்கள். அது மாதிரி ஈரானில் இருந்தும் வந்தார்கள்.நம் நாட்டுடைய விருந்தினர்களாக இருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பின்னர் இந்தியாவில் தாஜ்மஹால் உள்ளிட்ட எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்துவிட்டு 150 பேர் கொண்ட அந்த கப்பல் படை மாலுமிகள் சென்றார்கள். அவர்கள் ஒன்னும் போருக்கு போகவில்லை. இந்தியாவில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நம்முடைய விருந்தினர்களாக இருந்துவிட்டு வழியனுப்பி வைத்தோம். சர்வதேச எல்லையில் அவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். அதெல்லாம் கரெக்ட்தான். ஆனால் இந்திய பெருங்கடலும் அரபிக் கடலும் சந்திக்கும் இடத்தில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்கள்.
இப்படி ஒரு நீர்மூழ்கி கப்பல் அங்கு இருந்தது இந்திய அரசுக்கு தெரியுமா தெரியாதா? எத்தனை நீர்மூழ்கி கப்பல்கள் அங்கு இந்திய பெருங்கடலில் இருக்கிறது. இந்தியாவுடைய பாதுகாப்புக்கு இவ்வளவு பெரிய அச்சுறுத்தல் இருக்கிறது. இதற்கு உள்துறை அமைச்சகம் பதில்சொல்ல வேண்டுமா வேண்டாமா? 150 பேர் கொண்ட ஒரு ஈரானிய கப்பல். அது ஈரானிய போர்க்கப்பல் தான். ஆனால் போருக்காக போகவில்லை. பல்வேறு நாடுகளில் இருந்து வந்த கப்பல்கள் நம்ம வழி அனுப்பி வைத்தோம். நம்ம வீட்டுக்கு விருந்தாளியாக வந்தவங்களை வழி அனுப்பி வைத்த பிறகு அடுத்த தெருவில் அவர்கள் போகும்போது விபத்து ஏற்பட்டால் நமக்கு சம்பந்தம் இல்லை என்று விட்டு விடுவோமா? அல்லது நாம் ஓடி போய் பார்ப்போமா?
அவர்களை இலங்கை காப்பாற்றி விட்டார்கள். ஆனால் இந்தியா பண்ணவில்லை. அந்த போர்க்கப்பல் எங்கிருந்து தாக்கப்பட்டது? அமெரிக்காவுடைய நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவுகணை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உடைய ஒப்புதலோடு செலுத்தப்பட்டு இருக்கிறது. இது இந்திய அரசாங்கத்துக்கு தெரியுமா தெரியாதா? வட இந்தியாவில் காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி விட்டார்கள் என்று சொல்லி கொந்தளிச்சோம். தேசபக்தியை பற்றி பேசினோம். ஊடுருவல் நடந்ததற்கே நாம் கோபப்பட்டோம். ஆனால் ஒரு நீர்மூழ்கி கப்பல் நம்ம எல்லைக்குள் விருந்தாளியாக வந்துள்ளது. அவர்களை குறிவைத்து தாக்கி இருக்கிறார்கள். அந்த கப்பல் சின்னாபின்னம் ஆக்கப்பட்டு கிட்டத்தட்ட 87 பேர் கொல்லப்பட்டு இருக்காங்க 61 பேரின் உடல்களை காணும். சர்வதேச எல்லையை தொட்டுக் கொண்டிருக்கூடிய இடத்தில் இது நடந்துள்ளது என்பதை மிக முக்கியமாக பார்க்க வேண்டும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/06/52-2026-03-06-16-31-42.jpg)