Advertisment

"கூட்டத்துக்கு வருவீங்களான்னு கூட கேட்கமாட்டார்; வாங்கன்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பார்..." - அமைச்சரை கலாய்த்த உதயநதி

ுபர

Advertisment

சென்னையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபுவை பாராட்டி பேசினார். அவர் இதுதொடர்பாக பேசியதாவது, "இந்த நிகழ்ச்சியை அண்ணன் சேகர் பாபு அவர்கள் மிகச் சிறப்பாக அமைத்துள்ளார். குறிப்பாக இந்த துறைமுகம் தொகுதிக்குமாதம் ஒருமுறையாவது வர வேண்டிய ஒரு சூழ்நிலையை அவர் ஏற்படுத்திக் கொடுத்து விடுவார். நான் எந்தத்தொகுதி எம்எல்ஏ என்று கூட சந்தேகப்படும் அளவிற்கு அவர் என்னை அடிக்கடி துறைமுகம் தொகுதிக்கு வர வைத்துவிடுவார். அவர் கூட்டம் நடத்துகிறோம் வாருங்கள் என்று கூட அழைக்கமாட்டார். இதான் தேதிங்க வந்துடுங்க என்று கட்டளையிடுவார்.

அவர் என்னை அழைக்கும்போது கூட மழைக் காலமாக இருக்கிறது, உள்ளரங்கு கூட்டமாக நடத்துங்கள் என்று கூறினேன். பிறகு அவரே கூறினார்.மழை பெய்தால் ஒரு இடம், இல்லையென்றால் இப்போது பேசிக்கொண்டிருக்கின்ற இடம் என்று கூறினார். அண்ணன் சேகர் பாபு என்னிடம் கூறியதைப் போல இன்று மழை வரவில்லை. சேகர்பாபு நினைத்தால் மழையைக் கூட தடுத்து நிறுத்துவார். ஏனென்றால் இவர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர். எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் இந்த இடத்தில் அதை கூற விரும்புகிறேன்.

தலைவர் அடிக்கடி சேகர்பாபு அண்ணனைப் பற்றிக் கூறும்போது சொல்லுவார்.சேகர்பாபு அல்ல, செயல்பாபு என்று. அதை நான் மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்த விரும்புகிறேன். அந்த அளவுக்கு செயலில் அதிதீவிர ஆர்வம் காட்டுவார். இந்த நிகழ்ச்சிக்கு நிறைய முக்கியமான நபர்கள் வந்திருக்கிறார்கள். கலைஞரோடு பயணித்தவர்கள் எல்லாம் தங்களின் கருத்துக்களை இங்கே எடுத்து வைக்க இருக்கிறார்கள். என்னைக் கூட கடைசியில் பேசச் சொன்னார்கள். நான்தான் ஒத்துக் கொள்ளவில்லை. கூட்டம் எங்கேயும் போகாது. நான் அனைவரின் பேச்சையும் கேட்டுவிட்டு கடைசியாகத்தான் போவேன் என்றேன். இங்கே அண்ணன் சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த தோழர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் என்னுடைய நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறேன்.

Advertisment

நமக்கு நிதியமைச்சராகஇப்போது இருப்பவர்களைப் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும். ஏங்க அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்புகுறைந்து வருகிறது என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர்கள் சொல்லிய பதில் நம்மையெல்லாம் அதிர்ச்சியில் தான் ஆழ்த்தியது. அமெரிக்க டாலர் மதிப்பு உயர்கிறது என்று பாசிட்டிவாக பார்க்க வேண்டியதுதானே என்று நம்மைப் பார்த்து எதிர்க்கேள்வி கேட்கிறார். இவர் மட்டுமல்ல பாஜகவைச் சேர்ந்த அனைவருமே வாயால் வடை சுடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். அவர்களுக்கு இது ஒரு சாம்பில்தான். எனவே இந்தியாவில் அவர்களை எதிர்க்கக்கூடிய சக்திகள் தேவை . அவர்களை எதிர்க்கின்ற ஒரே சக்தியாக நம்முடைய முதல்வர் இருக்கிறார். அவருடைய கரத்தினை வலுப்படுத்த வேண்டும்" என்றார்.

sekarbabu udhayanidhistalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe