Skip to main content

நீட் தேர்வை எப்படி ரத்து செய்வோம்... ரகசியம் சொன்ன உதயநிதி ஸ்டாலின்!

Published on 19/09/2020 | Edited on 19/09/2020
jk

 

 

சென்னையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழா கூட்டத்தில் கலந்தகொண்ட உதயநிதி ஸ்டாலின் அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது "இன்று நாம் கழகத்தின் முப்பெரும் விழாவினை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்துள்ளோம். அண்ணா மற்றும் பெரியார் பிறந்த தினம், கழகத்தின் பிறந்த தினத்தை உங்களோடு இணைந்து கொண்டாடி மகிழந்தது சிறப்பாக இருந்தது. இங்கே நிறைய மூத்த கழக முன்னோடிகள் இருக்கிறீர்கள். நான் பெரியாரை பார்த்தது கிடையாது, அண்ணாவோடு பேசியது கிடையாது, தலைவர் கலைஞரை பார்த்து வளர்ந்தவன். நீங்கள் எல்லாம் பெரியார் அண்ணாவோடு பழகியவர்கள், பேசியவர்கள். எனவே உங்களை வாழ்த்தி பேச அனுபவமோ, வயதோ இல்லை. எனவே உங்கள் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளையும், பொற்கிழிகளையும் வழங்குவது எனக்கு பெருமையாக இருக்கிறது. இதற்காக அண்ணன் சேகர்பாபு அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்துவிட்டு சென்றுவிடுங்கள் என்றுதான் முதலில் என்னிடம் அவர் கேட்டார். நான்தான் இல்லை, முழு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்தரங்கத்தையும் கேட்டுவிட்டு செல்கிறேன் என்று கூறினேன். 

 

இந்த கரோனா காலமாக இருப்பதால் அவர் என்னை விரைவாக வீட்டிற்கு அனுப்ப பார்க்கிறார். ஆனால் அனைவரும் இருக்குமிடத்தில் கண்டிப்பாக நானும் இருக்க வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் லஞ்சம் கொடுக்க முடியாத காரணத்தால் தன்னுடைய ஆட்டோவை எரித்த சம்பவத்தை கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்த சம்பவத்தின் வீடியோவை நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பி இருந்தார். நான் அந்த வீடியோவை அண்ணன் சேகர் பாபு அவர்களுக்கு அனுப்பி ஆட்டோகாரரை சந்திக்க முடியுமா என்று கேட்டிருந்தேன். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை. ஊரடங்கு இருந்த காலகட்டம் அது. அதனால் திங்கள் கிழமை சந்தித்தாலும் பரவாயில்லை என்று கூறினேன். இருந்தாலும் அடுத்த நாள் காலை அண்ணன் அவர்கள் ஆட்ரோகாரரை அழைத்து என் நேரில் நிறுத்தினார். நான் அவருக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று விரும்பினேன், அண்ணன் சேகர்பாபு அவர்களே நிதியினை என்னிடம் வழங்கி இளைஞரணி சார்பாக கொடுப்பதாக நினைத்துக்கொண்டு கொடுங்கள் என்று என்னிடம் உரிமையாக கூறினார். பிறகு நான் அவருக்கு ஒரு ஆட்டோ வாங்கி கொடுக்க வேண்டும் என்று அவரிடம் கூறினேன். அடுத்த இரண்டு நாட்களில் ஆட்டோ வாங்கி அதனை தலைவர் கையால் கொடுக்க வைத்தவர்தான் அண்ணன் சேகர்பாபு. அத்தகைய செயல் வீரராக அவர் கழகத்திற்கு இருந்து வருகிறார். 

 

என் மனதில் மிகப்பெரிய குறை நீண்ட நாட்களாக இருக்கிறது. தற்போதைய தலைமுறையினரிடம் பெரியார், அண்ணா மற்றும்  நம்முடைய கொள்கைகளை கொண்டு சேர்க்க முடியவில்லையே என்ற ஆதங்கம் உண்டு. அதை அண்ணன் சுப.வீ போன்றவர்கள் நீக்கி வருகிறார்கள். தற்போது அவர் திராவிட பள்ளி போன்ற அமைப்பை ஏற்படுத்தி நிறைய மாணவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்து வருகிறார். அதில் இளைஞர் அணியை சேர்ந்த 60க்கும் மேற்பட்டவர்கள் பயில இருக்கிறார்கள். பெரியார் இருந்தபோது நாடு அப்படி அடிமைப்பட்டு கிடந்ததோ இதை போல ஒரு நிலைமையை ஆளும் அடிமை அதிமுக அரசு உருவாக்கி உள்ளது. அதற்கு மிக சிறந்த உதாரணம் நீட் தேர்வு. இந்த நான்கு வருடங்களில் 13 மாணவர்களை நாம் இழந்திருக்கிறோம். தொடர்ந்து நீட் தேவையில்லை என்று வலியுறுத்தி வருகிறோம். இந்த நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று நாங்கள் கூறினால் எப்படி செய்வீர்கள் என்று எங்களிடமே ஆட்சியாளர்கள் கேட்கிறார்கள். அந்த ரகசியத்தை தற்போது சொல்கிறேன். அதற்கு ஆட்சியாளர்களுக்கு மானம்,ரோஷம், மாணவர்கள் மீது அக்கறை இருக்க வேண்டும். அது எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் அதனை கண்டிப்பாக செய்வோம்" என்றார். 

 

 

 

Next Story

முன்கூட்டியே துண்டு போடும் நிர்வாகிகள்; மேடையிலேயே கலாய்த்த அமைச்சர் உதயநிதி!

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
Minister Udhayanidhi spoke to administrators about   Deputy Chief Minister

திமுக இளைஞரணி 45வது ஆண்டு விழா இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி தலைமையில் தேனாம்பேட்டையில் நடந்தது. இதில் இளைஞரணி முக்கிய நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

அவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் உதயநிதி, “மக்களவை தேர்தலில் தமிழக மக்கள் பாஜகவிற்குப் பதிலடி கொடுத்துள்ளனர். அரசியல் களத்தில் எப்படி மக்களைச் சந்தித்துப் பேசுகிறோமோ அதேபோன்று இன்றைய காலத்தில் சமூக வலைத்தளமும் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் பொய்யையே பேசி, பொய்யையே பரப்பி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனை நாம் அம்பலப்படுத்த வேண்டும். அதனால் அனைவரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருங்கள்.

காலையில் எழுந்தவுடன் முரசொலியைத் தவறாமல் படித்துவிடுங்கள். முதல்வரின் அறிக்கைகள், அரசின் திட்டங்கள் என்னுடைய அறிக்கைகள், என அனைத்தையும் படித்துவிடுங்கள். முரசொலியில் தினமும் ஒரு பக்கத்தை இளைஞர் அணிக்கென்று ஒதுக்கி அதில் கருத்துகளை வெளியிட்டு வருகிறோம். முதல்வர் 234 தொகுதிகளிலும் நூலகம் அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதனையேற்று  முதற்கட்டமாக 50 தொகுதிகளிலும் நூலகத்தைத் திறந்துள்ளோம். மிதமுள்ள தொகுதிகளிலும் விரைவில் நூலகம் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கும், மக்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

தமிழ்நாடு முழுவதும் பேச்சு போட்டி நடத்தி 100 சிறந்த பேச்சாளர்களைத் தேர்ந்தெடுத்து தலைமையிடத்தில் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கட்டளையிட்டிருந்தார். அதன்படி அதற்கான பணிகளையும் தற்போது தொடங்கியிருக்கிறோம். இதற்காக 30 நடுவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை அனைத்து மாவட்டத்திற்கு அனுப்பி வைத்து பேச்சாளர்களைத் தேர்வு செய்யவுள்ளோம்.

இந்த மேடையில் அனைவரும் பேசி நான் துணை முதல்வராக வேண்டும் என்று தீர்மானம் எல்லாம் நிறைவேற்றினீர்கள். பத்திரிகையில் வரும் கிசுகிசுக்கள், வதந்திகள் எல்லாவற்றையும் படித்துவிட்டு வந்து இது நடக்கப்போகிறதோ என்று யூகத்தில் நாமும் ஒரு துண்டு போட்டு வைப்போம் என்ற அடிப்படையில் இங்கே பேசியுள்ளனர். இளைஞரணி செயலாளர் பொறுப்புதான் முதல்வரின் மனதிற்கு நெருக்கமான பொறுப்பு. நான் முன்பே கூறியதுபோல, எல்லா அமைச்சர்களுமே எங்களின்  முதல்வருக்குத் துணையாகத்தான் இருப்போம் என்றேன். அதேபோன்று இங்கே இருக்கக்கூடிய அனைத்து அமைப்பாளர்களுமே முதல்வருக்குத் துணையாகத் தான் இருப்போம்.

எனக்கு எவ்வளவு பெரிய பொறுப்பு வந்தாலும், என் மனதிற்கு நெருக்கமானது இளைஞரணி செயலாளர் பொறுப்புதான். ஆகையால் எந்த பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறந்துவிடமாட்டேன். நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலுக்கு உழைத்ததை போன்று வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் வெற்றிக்காக உழைப்போம். 2026 என்ன நடந்தாலும், எந்தக் கூட்டணி வந்தாலும் ஜெயிக்க போவதும் நம்முடைய கூட்டணிதான். அதைமட்டுமே இளைஞரணி தம்பிமார்கள் இலக்காக வைத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

Next Story

‘மக்களைக் குழப்பும் புதிய கிரிமினல் சட்டங்கள்’ - உயர்நீதிமன்றம் கருத்து!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
New laws that confuse people High Court opinion

இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றிற்கு பதிலாக மத்திய அரசு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த 1 ஆம் தேதி (01.07.2024) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன.

அதே சமயம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்கள் ஏதுமின்றியும் மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்காமலும் அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டங்களின் பல்வேறு பிரிவுகளை எதிர்த்து நாடெங்கும் எதிர்ப்புகளும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.

New laws that confuse people High Court opinion

இதனையடுத்து புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “அமலுக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும்.  இந்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (19.07.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “அமலுக்கு வந்துள்ள புதிய கிரிமினல் சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. இந்த மூன்று சட்டங்களையும் அமல்படுத்தும் முன் சட்ட ஆணையத்தை ஆலோசித்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர். அதன் பின்னர் இது குறித்து மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.