Skip to main content

கவனமாக அடியெடுத்து வைக்கிறாரா  கனிமொழி ?

Published on 08/04/2019 | Edited on 08/04/2019

இந்தியாவே தேர்தல் ஜுரத்தில் இருக்கிறது. தலைவர்களின் பிரச்சார உறுதிமொழிகளையும் கடந்த முறை தந்த வாக்குறுதிகள் நிறைவேறியதையும் ஒப்பிட்டு, எந்தப் பக்கம் ஓட்டுப் போடலாம் என, மக்கள் நாடி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி மக்கள் நாடி பிடிக்கும் கைகளில் ஒன்று சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருதுபெற்ற கனிமொழியுடையது, மற்றது மருத்துவர் தமிழிசையினுடையது.  தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க., பா.ஜ.க., அ.ம.மு.க.வோடு சுயேட்சைக் கட்சிகள் பலவும் போட்டியிட்டாலும் அசல் போட்டி கனிமொழிக்கும் தமிழிசைக்கும்தான்.

 

kanimozhi -tamilisai



தமிழிசை தரப்பு விளாத்திக்குளம் தொகுதியிலுள்ள அ.தி.மு.க. வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் கிடைக்கும் என நினைத்திருக்கையில், விளாத்திக்குளம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்குவது முதல் ஷாக்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முந்தைய நாள் வரை தமிழிசை, அ.தி.மு.க. மா.செ. சண்முகநாதனைக் கண்டுகொள்ளவில்லை என்கிற வருத்தம் அ.தி.மு.க. தரப்பிலிருக்கிறது. தவிரவும் இப்பகுதியில் ஓரளவு வாக்கு வங்கியுள்ள த.மா.கா. மாவட்டச் செயலாளர்களான தெற்கு விஜய சீலனையும் வடக்கு கதிர்வேலனையும் இதேரீதியில்தான் நடத்தியிருக் கிறார்கள். இதனால் வேட்புமனு தாக்கல் தொடங்கி பல்வேறு நிகழ்ச்சி களிலும் இவர்கள் ஆப்சென்ட். பா.ம.க., சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம் போன்ற கட்சி பொறுப் பாளர்களுக்கும் இதே நிலைதானாம். ஆனால் அழைக்காமலே வேட்புமனு தாக்கலுக்கு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் தே.மு.தி.க. மா.செ. ஆறுமுகநயினார்.

 

kanimozhi



அ.தி.மு.க. மா.செ., தொகுதியை நன்கறிந்தவர் என்கிற முறையில் பிரச்சாரத்துக்கு டூர் சார்ட் போட்டால், தமிழிசை தரப்பிலிருந்து வேறொரு சார்ட் போடப்படுகிறது. உள்ளூர் அ.தி.மு.க.வினரும் ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தினரும் சங்கரராமேஸ்வர் கோவிலிலிருந்து பழைய முனிசிபல் அலுவலகம் வந்து, வ.உ.சி. சந்தையிலுள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பதாகத் திட்டம். ஆனால் தமிழிசை தரப்போ அந்த திசையைத் தவிர்த்து அந்தோணியார் கோவில் வழியாக காரியாலயம் நோக்கிச் சென்றது. ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் பிரச்சாரத்துக்கு அ.தி.மு.க. ஏற்பாடு செய்திருந்தது. தமிழிசை அங்குசென்று பிரச்சாரத்தை ஆரம்பிக்க, டி.எஸ்.பி. சகாய ஜோஸ் "அனுமதி பெறாமல் பிரச்சாரம் செய்யக்கூடாது' என அவர்களை அங்கிருந்து அகற்றியது தனிக்கதை.

அதிருப்திகள் இப்படி ஒருபுறம் இருந்த போதும் சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், திருச் செந்தூர் பகுதி கிராமங்களில் கோவில்களில் மாவிளக்கு பூஜை, குத்துவிளக்கு பூஜை ஏற்பாடு செய்து வாக்கு சேகரித்து வருவது நல்ல அடித் தளத்தைத் தந்திருக்கிறது. குறிப்பிட்ட சமுதாய மக்கள் நிறைந்திருக்கும் கோவில் பாடல் கச்சேரி களில், அங்குள்ள பாடகரைக் கொண்டு வாக்கு சேகரிப்பதும் பலன் தருமெனவே தெரிகிறது.
 

kanimozhi



இதுதான், தான் போட்டியிடும் தொகுதி என பல மாதகாலம் முன்பே திட்டமிட்டு, தொகுதி மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைக் குறித்துக்கொண்டு தொகுதி முழுவதும் வலம் வருகிறார் கனிமொழி. அதோடு ஒவ்வொரு சமுதாயத் தலைவரையும் சந்தித்து அவர்கள் கூறும் ஆலோசனைகளையும் கேட்டுக்கொள்கிறார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திலுள்ள விளாத்திக்குளம், கோவில்பட்டி, தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஒட்டப்பிடாரம் பகுதி மக்களின் வாக்குகளை ஈர்ப்பதுதான் கனிமொழிக்கு முன்பிருக்கும் சவாலான வேலை. ஆண்டாண்டு காலமாக அ.தி.மு.க.வின் கோட்டையாகக் கருதப் பட்ட தூத்துக்குடியை பா.ஜ.வுக்கு தாரை வார்த்ததால் அ.தி.மு.க.வினரிடையே ஏற்பட்ட மனக்கசப்பு, மத்திய-மாநில ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தி, ஸ்டெர்லைட் விவகாரத்தில் துப்பாக்கிச் சூட்டால் 13 நபர்கள் பலி, நசியும் கடற்கரையோர மக்களின் வாழ்வாதார நிலை, "ஒக்கி' புயலில் மத்திய-மாநில அரசுகள் காட்டிய அலட்சியம் என பல்வேறு விவகாரங்கள் கனிமொழிக்கு துணைசெய்யக் காத்திருக்கின்றன.

ஆனாலும் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சியினரின் கலாட்டாக்களுக்கும் பஞ்சமில்லாமல் இல்லை. காங்கிரசைச் சேர்ந்த எட்டையபுரம் சீனிவாசன் தலைமையிலான டீம், "எங்களை தி.மு.க. மதிக்கவில்லை'’என கூட்டமே நடத்திக் காட்டியது. இதனை தி.மு.க. எப்படியோ சமாளித்து வந்தாலும் "கனிமொழி வென்றுவிட்டால் நமக்கு வாய்ப் பிருக்காதோ' என உள்ளடி வேலையிலும் இறங்கியிருக்கிறது கட்சியைச் சேர்ந்த சீனியர் தரப்பு. அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், ஜெயதுரை, ஜோயல் என தி.மு.க. அதிகார மையம் நான்காகப் பிரிந்து கிடப்பதும் எதிரணிக்கு சாதகமாக உள்ளது.

வேட்பாளர் கனிமொழியைக் காரணம்காட்டி சொந்தக் கட்சியினரையும் தொழிலதிபர்களையும் காசு கேட்டு அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு மிரட்ட... இதனாலேயே புதுக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவுவரை போனதும் இடைஞ்சல்தான். இப்படி இரு தரப்பிலும் சாதக, பாதகங்கள் இருக்க... கள நிலவரத்தை கணித்து கவனமாக அடியெடுத்து வைக்கிறார் கனிமொழி. தமிழிசை தரப்பு சவாலாக இருக்கிறது. 
 

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைபிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார்.