Advertisment

ட்ரம்ப் - கிம் தங்கப்போகும் ஹோட்டல் எது தெரியுமா... செலவு என்ன தெரியுமா?

trump with kim

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஒரு சந்திப்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின்சந்திப்பு இருக்க போகிறது. நான்கு மாதங்களுக்கு முன்புவரை இந்த இருநாடுகளும் போர் புரியும் என்று உலகளவில் நினைத்துக்கொண்டிருந்தபோது... திடீர் திருப்பமாக, இவர்கள் இருவருக்குள்ளும் சமாதானம் ஏற்பட்டு ஜூன் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்து, நேற்று இவ்விரு தலைவர்களும் சிங்கப்பூர் வந்து சேர்ந்தடைந்தனர். முதலில் வட கொரிய அதிபர் ஏர் சீனா என்ற விமானத்தின் மூலம் சிங்கப்பூர் வர, அவரைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனி விமானம் மூலம் வந்தடைந்தார். சிங்கப்பூர் வந்தவர்கள் ஒரே ஹோட்டலில் தங்கவில்லை, ட்ரம்ப் ஸாங்கிரி லா என்னும் ஹோட்டலிலும் கிம் செயின்ட் ரெஜிஸ் என்னும் ஹோட்டலிலும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தங்கியுள்ளனர்.

Advertisment

capilo hotel

நாளை இந்த இரண்டு நாட்டு அதிபர்களும் சந்தித்து, அணு ஆயுத சோதனைகள், பொருளாதார தடை மற்றும் பல வருடங்களாக இவ்விரு நாடுகளுக்குள் இருக்கும் பகை போன்ற பல தலைப்புகளில் பேச இருப்பதாக சொல்லப்படுகிறது. இது முற்றிலும் இரு நாட்டு மக்களின் அமைதிக்கான பேச்சுவார்தையாக இருக்கக்கூடும் என்று சிலரால் ஆணித்தரமாக நம்பப்படுகிறது. ஏனென்றால் இவ்விரு நாடுகளும்கொள்கையில் உள்ளிட்டபலவற்றில் வேறுபட்டவர்களாகவே கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புவரை இருந்தனர், தற்போது வரை இருக்கின்றனர். வட கொரியா மற்றும் தென் கொரியா இவ்விரு நாடுகளும் ஒரே பகுதிகளில் இருந்தாலும் இவர்களுக்குள் பல பிரச்சனைகள், சச்சரவுகள் இருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக அதுவும் மறைந்திருக்கிறது.

Advertisment

capilo hotel

நாளை காலை இந்திய மணியளவில் காலை 6:30 மணிக்கு அதாவது சிங்கப்பூரின் நேரப்படி காலை 9:00 மணிக்கு சந்திக்க இருக்கின்றனர். அதுவும் சிங்கப்பூர் தீவில் இருந்து பக்கத்து தீவான செண்டோசா தீவில். இது சிங்கப்பூர் கடலோரத்தில் இருந்து கால் மைல் தொலைவு தான். இவ்விரு தீவுகளுக்கும் இணைப்பாக இருப்பது 300 மீட்டர் பாலம்தான். இத்தீவு சுற்றுலா பயணிகளின் தேவைக்கு ஏற்ப பல மடங்கு சொகுசுடையதாக மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ஒரு உயர்தர 5 ஸ்டார் ஹோட்டலான கேபிலோவில்தான் உலகமே எதிர்நோக்கியிருக்கும் இந்த சந்திப்பு நடக்க இருக்கிறது. பிரிட்டிஷ் காலனியின் போது, ஆங்கிலேய அலுவலர்களை தங்குவதற்காகஇந்த கட்டிடம் 1980 களில் கட்டப்பட்டது. இந்த ஹோட்டலை தேர்வு செய்ய காரணமாக சொல்லப்படுவது அதீத சொகுசு, ஹோட்டலின் சேவை மற்றும் இரகசியங்கள் காக்கப்படும் என்பதுதான் என்று பலர்கூறுகின்றனர். ஹோட்டல் நிர்வாகம் இவ்விரு அதிபர்களின் சந்திப்பிற்காகவும், நிகழ்ச்சிகளுக்காகவும் 24,000 சதுரடி இடத்தை ஒதுக்கியுள்ளதாம். இந்த சந்திப்பிற்காக சிங்கப்பூர் அரசாங்கம் இந்திய ரூபாயில் சுமார் நூறு கோடி செலவிடுகிறதாம்....

singapore America North korea Kim Jong un Donad trump
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe