கடந்தவருடம் உலக அழகி போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மனுஷி சில்லர் வெற்றிப்பெற்றதுஇந்தியமக்கள் அனைவருக்கும்ஆச்சரியத்தை ஏற்படுத்தியதுபோல தமிழக மக்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் லயோலா கல்லூரி மாணவி அனுக்ரீத்தி. மனுஷி உலக அழகி பட்டம் வென்றதை போல இவர் இந்த வருட இந்திய அழகி போட்டியை வென்று 2018 ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியில்பங்குபெற இருக்கிறார்.

miss india

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மும்பையில் நடந்த பெமினா இந்திய அழகி போட்டியில் மொத்தமாக முப்பது அழகிகள் பங்குபெற்றனர். இந்த விழாவை பாலிவுட்டின் வெற்றி இயக்குனரான கரன் ஜோகர் மற்றும் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா தொகுத்து வழங்கினார்கள். மேலும் இந்த விழாவின் நடுவர்களாக கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே.எல். ராகுல், பாலிவுட் நடிகர்களானமலைக்கா அரோரா, பாபி தியோல் மற்றும் குணால் கபூர் ஆகியோர் கலந்து கொண்டனர். மாதுரி தீக்ஷித், ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் கரீனா கபூர் போன்ற நடிகைகளின் நடனமும் மேடையில் அரங்கேறியது.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

மகுடம் சூட்டப்பட்ட அனுக்ரீத்தி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். பத்தொன்பது வயதே ஆகும் இவர் சென்னைலயோலா கல்லூரியில் இரண்டாம் வருடம் பி.ஏ பிரென்ச் மொழி படித்து வருகிறார். மாடலிங்கில் ஈடுபட்டு வந்த இவர் நடிப்பிலும் ஆர்வம் மிக்கவராம். ஐஸ்வர்யா ராயை பார்த்து இது போன்று உலக அழகி பட்டம் வாங்கவேண்டும் என்று ஆசைப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஆடல், பாடலில் ஆர்வமிக்கவராக இருந்தாலும் மாநில அளவிலான தடகள வீரரும் கூட. தந்தையில்லாமல் தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர். திருச்சியில் பிறந்து, பின்னர் மேல்படிப்பிற்காக சென்னை வந்துள்ளார். இவர் 2018 க்கானதமிழ்நாடு அழகி போட்டியில் வென்றவர். மேலும் மிஸ் இந்தியா அழகிய சிரிப்பு 2018 மற்றும் தென்னகத்தின் ஐகான் என்று பல மகுடங்களைஅணிந்துள்ளார்.

இப்போட்டியில் இவரிடம் கேட்கப்பட்ட கேள்வி," உங்களுக்கு ஆசான் யார் தோல்வியா ? அல்லது வெற்றியா ?"

தோல்விதான் எனது ஆசான். ஏனென்றால் வெற்றியை மட்டுமேபார்த்துவந்திருந்தால்ஒரு கட்டத்தில் அதுவே போதும் என்று நினைத்துநின்றுவிடுவோம். ஆனால், நீங்கள் ஒரு விஷயத்தில் இறங்கிதோல்வியையே சந்தித்து வந்தால்தான் அது அணையாத நெருப்பாக நம் மனதில் இருக்கும். அப்போதுதான்இலக்கை நோக்கி பயணித்து வெற்றியடைய முடியும் என்கிறார்இந்த தமிழ்நாட்டு அழகி.