style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை, பாண்டிச்சேரி கடற்கரையை கடக்கிறது. சென்னையை பொறுத்தவரை சென்னையில் மேகக்கூட்டங்கள் மிகநெருக்கமாக பெரிய அளவில் குவிந்துள்ளது, இதனால் வேகமான காற்றுடன், மிக கனமழை பெய்யும். காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்யும். இந்த மழை இன்று காலை முதல் நாளை காலை வரை நீடிக்கும். சில நேரங்களில் மிக கனமழை பெய்யும். தென்சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதிகள் மிக,மிக அதிக கனமழையை சந்திக்கும். சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் 50 கி.மீ. வேகத்தில் காற்றுவீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்சென்னை, தாம்பரம், காஞ்சிபுரம், ஒரகடம், ஈ.சி.ஆர்., ஓ.எம்.ஆர். பகுதிகளை கவனத்தில் கொள்ளவேண்டும். அங்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமுள்ளது. இவ்வாறுவெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});