Skip to main content

கண்ணீர் விட்ட சசிகலா..! தடுமாற்றத்தில் அ.ம.மு.க.!

Published on 07/12/2020 | Edited on 08/12/2020
ddd

 

மெல்ல மெல்ல தமிழகம் தேர்தல் மூடுக்கு மாறிக்கொண்டிருக்கும் நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் தேர்தல் பணியில் வேகம்காட்ட ஆரம்பித்துள்ளது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வெற்றிக்குப்பின் தேர்தல் களத்தில் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை ஈட்டாத அ.ம.மு.க., தனது பலத்தை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதேநேரத்தில், தாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என்பதை நிரூபிப்பதுதான் அ.ம.மு.க. தொடங்கப்பட்டதன் நோக்கமாகும். அதனால், சட்டமன்றத் தேர்தல் களத்தில் அ.ம.மு.க.வின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரங்களில் அலசப்படுகிறது.

 

இந்நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தஞ்சையிலும், டிசம்பர் 1 அன்று திருச்சியின் வடக்கு, தெற்கு மாவட்டங்களின் சார்பிலும் அ.ம.மு.க.வின் தேர்தல் பணி ஆய்வு மற்றும் தேர்தல் அறிக்கை குறித்த கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடைபெற்றன.

 

திருச்சியில் தெற்கு மாவட்டம் சார்பில் முசிறி பகுதியில் காலையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட கழகச் செயலாளர் ராஜசேகரன், கழகப் பொருளாளர் முன்னாள் அரசு தலைமை கொறடா திருச்சி மத்திய மண்டல பொறுப்பாளர்கள் திருச்சி வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.மனோகரன், "இதய தெய்வம் அம்மா பேரவை' செயலாளரான எக்ஸ் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

ddd

 

"உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண் டும் என்றும், காலியாக உள்ள கட்சிப் பதவிகளை மாவட்ட வாரியாக நிரப்பி வருகின்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை நாம் பெறவேண்டும் என்பதே இக்கூட்டத்தின் நோக்கம்' என்று கட்சியின் அனைத்து பொறுப்பாளர்களிடமும் பேசினார்கள். மேலும் அந்தந்த பகுதிகளில் உள்ள பிரச்சனைகள் குறித்தும், பகுதிவாரியாக மக்களிடம் கொண்டுசெல்லப்போகும் தேர்தல் அறிக்கை குறித்த கருத்து கேட்புக் கூட்டமும் நடை பெற்றது.

 

அதேபோல் மாலை, திருச்சி வடக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.மனோகரன்பேசியபோது, “""அமைதிப்படை ஓ.பி.எஸ். யார் என்றும், தவழ்ந்து வந்த இ.பி.எஸ். யார் என்றும் நான் பார்த்திருக்கிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி ஸ்ரீரங்கத்தில் அவர்கள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மாபெரும் அடிதடி சண்டை நடந்தது. அதை சிறையிலிருந்து பார்த்த சின்னம்மா, "அ.தி. மு.க.வின் நிலை இவ்வளவு மோசமாக மாறிவிட்டதே' என்று கண்ணீர் விட்டார். அ.தி.மு.க.வின் நிலை விரைவில் மாறும். இன்னும் ஓரிருநாளில் இல்லாவிட்டால்... இந்த மாதத்துக்குள் சின்னம்மா சிறையிலிருந்து வெளியே வந்துவிடுவார். புயல் வெளியே வரும்போது புயலில் சிக்கியவர்களின் நிலையைப் பார்க்கத்தான் போகிறோம்'' என்றும் கூறினார். மேலும் ""அ.தி.மு.க.வில் திருச்சியில் உள்ள நிர்வாகிகள் யாரும் தேர்தல் பொறுப்பாளர் களுக்குத் தகுதியில்லாதவர்கள் என்பதால்தான் சி.வி.சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்களை இங்கே பொறுப்பாளர்களாக நியமித்துள்ளனர். திருச்சியைச் சேர்ந்த ஒருவர்கூடவா பொறுப் பாளராக நியமிக்கத் தகுதியில்லாமல் போய் விட்டார்கள்'' என்று கேள்வியெழுப்பினார்.

 

dd

 

"அ.ம.மு.க.வின் திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை இதுவரை 1100 பேருக்கு கட்சிப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. நாம், டி.டி.வி. தினகரனை முதலமைச்சராக அமர்த்தப் பாடுபட வேண்டும்'’என முழங்கினார்.

 

கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சிப் பொறுப்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள் பலர் தங்களுக்குள் பேசிக்கொள்கையில்... "அமித்ஷா தமிழகம் வந்ததன் நோக்கமே அ.தி.மு.க.வையும், அ.ம.மு.க.வையும் இணைக்க வேண்டும் என்பதுதான். இருவரும் இணைந்து செயல்பட்டால்தான் வெற்றிவாய்ப்பை பெறமுடியும், இல்லையென்றால் வெற்றி வாய்ப்பு தி.மு.க.விற்கு செல்லும்' என்றும் தெரிவித்ததாக கிசுகிசுத்துக்கொண்டதைக் காணமுடிந்தது.

 

""சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் "முதல்கட்டமாக இரு கட்சிகளும் இணைந்து செயல்படும்' என்ற அறிவிப்பு வெளிவரும் என்று கட்சியில் பலரிடமும் எதிர்பார்ப்பிருக்கிறது. சசிகலாவின் நோக்கமும் அதுதான்'' என கட்சி நிர்வாகிகள் தங்களுடைய யூகத்தை வெளிப்படுத்தினர்.

 

"அ.தி.மு.க.வினருக்கு கடிவாளம்போட சின்னம்மாதான் சரியான ஆளுமை' என்று பேசிக்கொண்டிருக்கும் நிலையில்... கடந்த சில தினங்களாக தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் அ.ம.மு.க. சார்பில் போடப்படும் கட்சிக் கூட்டங்களில் "தனித்துப் போட்டி' என்ற பேச்சே முன்வைக்கப்படுவதால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

 

"சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ளப் போகிறோமா அல்லது தனித்துப் போட்டியா?' என்ற கேள்விதான் எல்லாருடைய மனதிலும்.

 

 

 

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.