Skip to main content

கரோனாவில் முதலிடத்திற்கு முந்துகிறதா நெல்லை? காத்திருக்கும் 90 சோதனை முடிவுகள்!

Published on 31/03/2020 | Edited on 31/03/2020

கரோனா தொற்று பாதிப்பில் தமிழ்நாட்டில் இன்று மட்டும் ஒரே நாளில் கண்டறியப்பட்ட 57 பாசிட்டிவ் நோயாளிகளில் 22 பாசிட்டிவ் நோயாளிகளை கொண்ட நெல்லை மாவட்டம், மாவட்டளவில் சென்னைக்கு அடுத்து இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இருப்பினும், நெல்லையில் இன்று இனம் கண்டறியப்பட்ட பாசிட்டிவ் நோயாளிகளுடன் பழகிய 90 நபர்களின் சோதனை முடிவுகள் வரும் பட்சத்தில் தமிழ்நாடளவில் நெல்லை முதலிடம் பிடித்தாலும் ஆச்சரியமில்லை என்கின்றனர் சுகாதாரத்துறையினர்.

 

Tirunelveli has 22 new covid19 positive cases

 



பல்வேறு நாட்டை சேர்ந்த தப்லீக் அமைப்பைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் பலர் ஒன்றிணைந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடந்த நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இதில் பலருக்கு கரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் கலந்து கொண்ட 1,131 பேர் தமிழ்நாடு வந்துள்ளதாகவும், 515 பேர் மட்டும் இனம் காணப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில், இம்மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலோனோர் நெல்லை மாவட்டத்தினை சேர்ந்தவர்களென்றும், குறிப்பாக நெல்லை மேலப்பாளையத்தில் மட்டும் 17 நபர்கள், நெல்லை டவுனில் 4 நபர்கள் மற்றும் பாளையங்கோட்டையில் 1 நபர் என மொத்தம் - 22 நபர்களுக்கு கரோனா பாசிட்டிவ் இருந்ததும் கண்டறியப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று அறிவிக்க, நெல்லை மாநகராட்சியின் நான்கு மண்டலங்களில் ஒன்றான மேலப்பாளையம் மண்டலம் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு, எல்லைகள் சீல் வைக்கப்பட்டு வெளியாட்கள் யாரும் உள்ளே செல்லவும், உள்ளே இருந்து மக்கள் யாரும் வெளியே வரவும் அனுமதி இல்லை என காவல்துறை அறிவிக்கவும் செய்தது. 

 

Tirunelveli has 22 new covid19 positive cases



"குடியிருக்கும் தெருக்களின் முனைகளிலேயே காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் இருப்பதை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும், எவ்வித வாகனங்களிலும் தெருக்களுக்கு வரக் கூடாதெனவும், மருந்து சம்பந்தமாக அத்தியாவசியம் ஏற்பட்டால் மட்டுமே அதற்கான ஆவணத்தை கொண்டு வெளியில் வரவேண்டும். அதுவும் ஒருவரின் வருகை மட்டுமே அனுமதிக்கப்படும்." என மாவட்ட நிர்வாகமும் அறிவிக்கவே, மருத்துவக்குழுக்களுடன் உள்ளூர் போலீசாருடன், சி.ஆர்.பி.எஃப். போலீசாரும் கண்காணித்து வருகின்றனர். இது இப்படியிருக்க, இன்று கண்டறியப்பட்ட கரோனா பாசிட்டிவ் நோயாளிகள் 22 நபர்களுடன் நெருக்கமாக பழகிய 90 நபர்களின் பரிசோதனை விபரங்கள் விரைவில் வெளியாகும் சூழலில், மாநிலம் முழுவதும் மொத்தமுள்ள கரோனா பாசிட்டிவ் நோயாளிகள் எண்ணிக்கையில் நெல்லை மாவட்டம் சென்னையை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடிக்கும் என்கின்றது சுகாதாரத்துறை.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கட்டணம் செலுத்த முடியாததால் தனியார் பள்ளி மாணவர் தற்கொலை

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
Student lost their life due to inability to pay school fees!

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டைக்கு அருகே உள்ளது காவலர் குடியிருப்பு ரேஷன் கடை தெரு. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருக்கு 44 வயது ஆகிறது. இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி மாரியம்மாள். இவருக்கு 40 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு 14 வயதில் நரேன் மற்றும் 10 வயதில் சுர்ஜித் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஆங்கிலப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் நரேனை அழைத்த பள்ளி நிர்வாகம், பள்ளிக்கு செலுத்த வேண்டிய 11 ஆயிரம் ரூபாய் கல்வி கட்டணத்தை உடனே கட்டும்படி அறிவுறுத்தியுள்ளனர். உடனே இது குறித்து தனது பெற்றோரிடம் நரேன் கூறியிருக்கிறார். அப்போது, விரைவில் பணத்தை செலுத்திவிடுவதாக கூறிய பெற்றோரால் பள்ளி கட்டணத்தை குறிப்பிட்ட தேதிக்குள் கட்ட முடியவில்லை. இதனால், நரேனின் வகுப்பு ஆசிரியையிடமும், பள்ளியின் முதல்வரிடமும் கூடிய விரைவில் பள்ளி கட்டணத்தை கட்டி விடுவதாக நேரில் சென்று நாகராஜன் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில், திருநெல்வேலியில் கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறைக்கு பிறகு, கடந்த ஜனவரி 2-ஆம் தேதி பள்ளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அப்போது, பள்ளிக்குச் சென்ற நரேனிடம், பள்ளி கட்டணம் குறித்து பெற்றோரிடம் பேசி, விரைவில் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். ஆசிரியர் சொன்னது போல, நரேன் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவரது பெற்றோரிடம் ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே இருந்துள்ளது. அதனால், ஓரிரு நாட்களில் சேர்த்து கட்டலாம் என இருந்துள்ளனர். இந்நிலையில், மறுபடியும் கடந்த மூன்றாம் தேதி பள்ளியில் தேர்வு நடந்துள்ளது. அப்போது, ஏராளமான பள்ளி மாணவர்களுக்கு முன்பாக, நரேனை அழைத்த வகுப்பு ஆசிரியை ஏன் இன்னும் பள்ளி கட்டணத்தை செலுத்தவில்லை என்று கேட்டுள்ளார். 

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கும் அவமானத்திற்கும் ஆளான மாணவன் நரேன், மீண்டும் தனது பெற்றோரிடம் கூறி, உடனடியாக பள்ளிக் கட்டணத்தை செலுத்தும்படி கூறியுள்ளார். மேலும், இதனால் தனக்கு கூச்சமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பள்ளி நிர்வாகம் காட்டும் கெடுபிடியால், நான்காம் தேதி தனது மகனை பள்ளிக்கு அனுப்பாமல், பள்ளி கட்டணம் தயாரானதும் கட்டணத்தை செலுத்திய பிறகு பள்ளிக்கு செல்லலாம் என்று கூறியுள்ளனர். இதனால் நரேன் பள்ளிக்குச் செல்லாமல் அன்று வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில், அதே பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் நரேனின் தம்பி சுர்ஜித்தை பள்ளியில் இருந்து அழைத்து வர அவரது தாயார் மாலை சுமார் 4 மணியளவில் பள்ளிக்குச் சென்று, மீண்டும் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது, வீட்டின் கதவு உட்புறமாக தாழ்ப்பால் போடப்பட்டிருக்கிறது. இதனைக் கண்ட நரேன் அம்மா, கதவை தட்டிப்பார்த்திருக்கிறார், திறக்கப்படவில்லை. நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காத காரணத்தால், அச்சமடைந்த நரேனின் தாயார், பதற்றத்தோடு அக்கம் பக்கத்தினருக்கும் தனது கணவருக்கும் செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவு திறக்கப்பட்டுள்ளது. பின்னர் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் படுக்கை அறையில் நரேன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சியில் உறைந்த அவரின் பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதுள்ளனர். இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் இது குறித்து பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சிறுவனின் உடலை மீட்டு, நெல்லை அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், மாணவனின் தற்கொலையால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் அந்தப் பகுதியியைச் சேர்ந்தவர்கள், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடனே, அங்கு வந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் பள்ளி தாளாளர் மீதும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வாக்குவாதம் செய்துள்ளனர். ஆனால், இந்தக் கோரிக்கையை போலீசார் உடனே கேட்காத காரணத்தால், நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தச் சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றிருக்கிறது. 

அதன் பின்னர், பாளையங்கோட்டை பொறுப்பு உதவி கமிஷனர் ஆவுடையப்பன், மேலப்பாளையம் உதவி கமிஷனர் சதீஷ்குமார், தலைமையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் உள்ளிட்டோர், சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது, காவலர்கள் சொல்வதை ஏற்காமல் கோஷம் போட்டதால், அவர்களை போலீசார் கட்டுப்படுத்த முயன்றுள்ளனர்.

இதில், போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்கு வாதம் மற்றும் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்தப் பகுதியில் சில மணி நேரம் தொடர்ந்து பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது. அதன் பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்ததாக சொல்லப்படுகிறது. அப்போது, பள்ளி தாளாளர் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் தரப்பில் உறுதியளித்ததாக சொல்லப்படுகிறது. கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால் தனியார் பள்ளி மாணவன், தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருநெல்வேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.