Skip to main content

தமிழ்நாடு மக்களவை தேர்தல்: எந்த எந்த வருடம்? எத்தனை பேர்? எவ்வளவு வாக்குப்பதிவு?

Published on 19/04/2019 | Edited on 19/04/2019

தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87 சதவிகித வாக்குகள்  பதிவாகியுள்ளன.   தர்மபுரியில் அதிகபட்சமாக 80.49 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.  குறைந்தபட்சமாக தென்சென்னையில் 56.41 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
 

election

 

 

மக்களவைக்கு 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில் முதல் கட்டமாக  கடந்த 11ம் தேதி 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.   தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் இருக்கும் 95 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது.  வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இரவு 9 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் சதவீதம் விவரம்:
 

திருவள்ளூர்- 72.02,  வடசென்னை-61.76, தென்சென்னை-56.41, மத்தியசென்னை-57.86, ஸ்ரீபெரும்புதூர்-60.61, காஞ்சீபுரம்-71.94, அரக்கோணம்-75.45, கிருஷ்ணகிரி-73.89, தர்மபுரி-80.49, திருவண்ணாமலை-71.27, ஆரணி-76.44,  விழுப்புரம்-74.96, கள்ளக்குறிச்சி-76.36, சேலம்-74.94, நாமக்கல்-79.75,  ஈரோடு-71.15, திருப்பூர்-64.56,  நீலகிரி-70.79, கோவை-63.67, பொள்ளாச்சி-69.98, திண்டுக்கல்-71.13, கரூர்-78.96, திருச்சி-71.89, பெரம்பலூர்-76.55, கடலூர்-74.42, சிதம்பரம்-78.43, மயிலாடுதுறை-71.13, நாகப்பட்டினம்-77.28, தஞ்சாவூர்-70.68, சிவகங்கை-71.55, மதுரை-62.01, தேனி-75.28, விருதுநகர்-70.27, ராமநாதபுரம்-68.26, தூத்துக்குடி-69.41, தென்காசி-71.60, நெல்லை-68.09, கன்னியாகுமரி-62.32

 
இன்று மாலைதான் அதிகாரப்பூர்வமாக தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன என்று அறிவிப்பார்கள். இந்நிலையில் கடந்த 1951ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரை நடந்த 16 மக்களவை தேர்தல்களில் தமிழ்நாட்டில் எவ்வளவு வாக்குகள் சதவீதம் எவ்வளவு பதிவாகியுள்ளன, அப்போதைய தேர்தல்களில் எவ்வளவு வாக்களர்கள் தமிழ்நாட்டில் இருந்திருந்தார்கள் என்பதையும் பார்ப்போம்...

 

 

 

  1. 1951- 56.33% - 1.99 கோடி (வாக்காளர்கள்)
  2. 1957- 47.75% - 1.09 கோடி
  3. 1962- 68.77% - 1.28 கோடி
  4. 1967- 76.56% - 1.59 கோடி
  5. 1971- 71.82% - 1.65 கோடி
  6. 1977- 67.13% - 1.82 கோடி
  7. 1980- 66.76% - 1.87 கோடி
  8. 1984- 72.98% - 2.25 கோடி
  9. 1989- 66.86% - 2.67 கோடி
  10. 1991- 63.92% - 2.55 கோடி
  11. 1996- 66.93% - 2.84 கோடி
  12. 1998- 57.95% - 2.64 கோடி
  13. 1999- 57.98% - 2.76 கோடி
  14. 2004- 60.81% - 2.87 கோடி
  15. 2009- 72.94% - 3.03 கோடி
  16. 2014- 73.74% - 4.06 கோடி 

 

 

 

 

Next Story

'தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்'-மோடி ஆரூடம்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'The election results of Tamil Nadu will surprise everyone'-Modi Arudam

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போதே தேர்தல் பரப்புரைகளுக்கான தீவிர முயற்சிகளை அரசியல் கட்சிகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று சேலத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பாமக, பாஜக கூட்டணியில் சேர்ந்திருக்கும் நிலையில், இன்று நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ், ஏனைய கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை. கோயம்புத்தூரில் இருந்து மேலும் சில காட்சிகள் இங்கே' என கோயம்புத்தூரில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சி குறித்த காட்சிகளை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

Next Story

தேர்தல் நடத்தை அமலுக்குப் பிறகு எடுத்த முதல் நடவடிக்கை; தேர்தல் ஆணையம் அதிரடி!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
The Election Commission is in action taken after implementation of electoral conduct

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன் தினம் (16-03-24) பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும், ஏழு கட்டங்களாக நடைபெறும், இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, வரும் ஜுன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே வேளையில், தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்தது. இது குறித்த அறிவிப்பில், ‘சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க ஆன்லைன் பரிவர்த்தனையும் கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையர்கள் உள்பட யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால், வதந்தி பரப்பக் கூடாது. மாலை, இரவு நேரங்களில் வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே அறிவிக்கப்படாத தனி விமானப் பயணங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும்.

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 50% வாக்குச் சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு இணைய வழியில் நேரலை செய்யப்படும். தலைமைச் செயலகம், அரசு அலுவலகங்களில் உள்ள தலைவர்கள் படங்கள் உள்ளிட்டவை அகற்றப்பட வேண்டும் என்று தெரிவித்தது. அதே போல், தலைமைத் தேர்தல் ஆணையம் பல விதிமுறைகளை அறிமுகப்படுத்தி தேர்தல் நடத்தைக்கு கீழ் அமலுக்கு கொண்டுவந்தது. 

இந்த நிலையில், தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகு, முதன்முறையாக தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதில், மேற்கு வங்க மாநில டி.ஜி.பியாக பொறுப்பு வகித்து வந்த ராஜீவ் குமாரை இடமாற்றம் செய்ய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதே போல், குஜராத், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநில உள்துறை செயலாளர்களையும் மாற்ற உத்தரவிட்டுள்ளது.