Advertisment

’’செத்துருவேன்...’’- விஷம் குடித்ததாக டிக்டாக் வீடியோ வெளியிட்ட இளம்பெண் என்ன ஆனார்?

t

Advertisment

கொண்டாட்டங்களில் துவங்கும் டிக்டாக் பெரும்பாலும் துயரத்திலேயே முடிகிறது. டிக்டாக்கினால் கொலைகளும், தற்கொலைகளும் அதிகரித்து வருகிறது. எந்நேரமும் டிக்டாக்கில் மூழ்கிக்கிடந்த சகோதரிகள் கடந்த வாரம் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இதனால் அவர்களின் குடும்பத்திற்குள் பிரச்சனை பூதாகரமாக வெடித்ததால் அந்த சகோதரிகள் விஷம் குடித்துவிட்டதாக மீண்டும் ஒரு டிக்டாக் வீடியோ வெளியிட்டு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.

t

‘காதல்’ பற்றி ஒரு இணைய சேனலுக்கு அளித்த பதிலில், ’’இப்பத்தான் லவ் பண்ணி கல்யாணம் கட்டுனேன். என்னைய விட்டுட்டு வேற ஒருத்தியோடு போயிட்டாரு. நான் இப்படியே நின்னுக்கிட்டு இருக்குறேன். என்னை திடீர்னு வேண்டாம்னு சொல்லிட்டாரு... நல்லா இருந்தா சரிதான்.. நான் மனசார லவ் பண்ணிட்டேன்.. அவர் யார்கூட இருந்தாலும் நல்லா இருன்னு சொல்லிட்டு விலகிட்டேன்.’’’’என்று தன்னை காதலித்து கரம் பிடித்த கணவர் தன்னை விட்டு வேறு ஒரு பெண்ணுடன் வாழ்கிறார் என்றும், அவர் கட்டிய தாலியுடன் அவர் நினைவாக வாழ்கிறேன் என்று இளம்பெண் கூறிய வீடியோ கடந்த இரண்டு தினங்களுக்கு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. ’காதலுக்கு மரியாதை’என்று பலரும் அப்பெண்ணுக்கு ஆதரவாக கமெண்ட் செய்து வந்தனர். இதைத்தொடர்ந்து அந்த இளம்பெண்ணும் அவருடைய சகோதரியும் டிக்டாக்கில் ஆடிப்பாடும் பல வீடியோக்கள் வெளிவந்தன. அதற்கு பலரும் அப்பெண்களைப்பற்றி பல விதமாக கமெண்ட் அடித்தனர். இதனால் அந்த இளம்பெண்ணின் வீட்டிற்குள் பிரச்சனை நடந்திருக்கிறது. இந்நிலையில் அந்த இளம்பெண் மிகுந்த வேதனையுடன் மற்றுமொரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

Advertisment

அந்த வீடியோவில், ’’என் தங்கச்சியும் நானும்தான் எல்லா டிக்டாக்கிலும் நடிச்சோம். இப்ப அவளையும் நீங்க அசிங்கப்படுத்திட்டீங்க. அந்த பொண்ணை நான் என்ன பன்னுறது? தங்கச்சி, அக்கா, கடவுள்ன்னு எல்லாம் சொல்லி, எனக்கு ஆறுதல் சொல்லுறது மாதிரி சொல்லிவிட்டு அசிங்கப்படுத்திட்டீங்க. உங்களால எங்களோட மானம் மரியாதை எல்லாம் போச்சு. இனி இந்த உலகத்துல வாழ மாட்டேன். செத்துருவேன்...’’என்று குரல் உடைந்து பேசுகிறார். அந்த இளம்பெண் என்ன ஆனார்? என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது.

tik tok
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe