திமுகவில் கலைஞருக்கு அடுத்து எந்தநேரத்திலும் நகைச்சுவையாக பேசக்கூடியவர் துரைமுருகன், அது சட்டசபையாக இருக்கட்டும், அரசியல் பேச்சுவார்த்தைகளாக இருக்கட்டும். துரைமுருகன் என்றாலே தக் லைஃப் என ஆன காலங்களும் உள்ளன. நேற்றும்அதுபோல் ஒரு நிகழ்வு நடந்தது.

duraimurugan

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

நேற்று நடந்த அரசியல் நடப்புகள் தொடர்ந்து அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசியல் வட்டாரத்தில் தேமுதிக தொடர்பான ஒவ்வொரு நகர்வுகளும் உற்று கவனிக்கப்பட்டன. காலை தேமுதிக அலுவலகத்தில் ஆலோசனை, மாலை நடைபெறவிருந்த அதிமுக கூட்டணி பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் படம், அதன்பின் சென்னை விமானநிலையத்திற்கு அருகேவுள்ள ஒரு ஹோட்டலில் பியுஷ் கோயல், வேலுமணி, தங்கமணி ஆகியோருடன் ஆலோசனை என சென்றுகொண்டிருந்த போதுதான், திடீரென ஒரு அதிர்ச்சி தகவல் வந்தது, தேமுதிக, திமுகவுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருகிறது என்று. இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் துரைமுருகன் பேசினார்.

அப்போது பத்திரிகையாளர்கள் இதுகுறித்து திமுக தலைவரிடம் தெரிவித்தீர்களா என கேட்டனர். அதற்கு அவர் இவ்வாறு கூறினார்,

அவருக்கு ஃபோன் பண்ணேன் லைன் சரியாக கிடைக்கலை. இதற்கு அப்பாற்பட்டு இருக்கிறார் அப்படினு ஒரு பொண்ணு சொல்லிட்டு இருக்கு. அதுக்கப்புறமும் தொடர்பு கொண்டேன், தூங்குகிறார் என்றார்கள். நான் பரவாயில்லை அது ஒன்றும் பெரிய அவசரம் இல்லை எழுப்ப வேண்டாம் எனக் கூறிவிட்டேன். நைட் வருவார் அவரிடம் பேசுவேன்.

இப்படி அவர் கூறியது, உச்சகட்ட டென்ஷனில் இருந்தவர்களையும் ‘இவர் என்ன இந்த நேரத்துலயும் இப்படி ஜோக்கடிக்கிறாரு’ என்று சிரிக்கவைத்தது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">