Advertisment

இதற்கு முன்பு பாகிஸ்தானிடம் சிக்கி, தப்பித்து வந்த வீரர்களின் கதை...

abinanthan

புல்வாமா தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக இந்தியா நேற்று பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது. அதனை தொடர்ந்து நேற்று மலை மற்றும் இரவு நேரங்களில் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் இன்று காலை இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்திய எல்லைக்குள் புகுந்த இரண்டு பாகிஸ்தான் விமானங்கள் உள்ளே நுழைய முயற்சி செய்ததாகவும், பின்னர் இந்திய ராணுவ நடவடிக்கையால் அவை திரும்ப சென்றதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் இந்திய வான்படையை சேர்ந்த எம்.ஐ 17 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குளாகி அதில் இரண்டு இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.

Advertisment

இந்த தாக்குதலில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். அபிநந்தன் திரும்ப வராததை இந்திய அரசும் உறுதிப்படுத்தி, பின்னர் ஆவர் பாகிஸ்தான் இராணுவ பிடியில் இருக்கலாம் என்று சொல்லியது. மேலும் அவர் இருப்பதுபோல வீடியோவும் பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியிடப்பட்டது.

Advertisment

திருவண்ணாமலையை பூர்விகமாக கொண்ட அபிநந்தன் சென்னை சேலையூரை அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். தாம்பரத்தில் தனது பயிற்சியை முடித்த அவர், கடந்த 2004 கமிஷனில் உள்ள அவர் விமான படையில் பைலட்டாக பணிபுரிந்துள்ளார். பாகிஸ்தானில் மாட்டிக்கொண்டதாக கூறப்படும் இவரது நிலை தற்போது வரை தெரியாததால் அவரது குடும்பத்தினர் கவலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரைபோன்று 1971ஆம் ஆண்டு இந்திய விமானப்படை வீரர் ஒருவர் பாகிஸ்தானியர்களிடம் சிக்கிகொண்டு, போர் முகாம் சிறையிலிருந்து தப்பித்திருக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

lieutanants

1971 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும்பாகிஸ்தானுக்கும் போர் நடைபெற்றது. அப்போது, டிசம்பர் 10ஆம் தேதி 1971 ஆம் ஆண்டு லியுடெனன்ட் திலிப் குமார் போர் விமானத்தில் ஜஃபர்வால் என்னும் பகுதியில் வான்நோக்கி பறக்கும்போது பாகிஸ்தான் வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டார். சுட்டு வீழ்த்தியப் பின் பாகிஸ்தான் வீரர்களிடம் திலிப் சிக்கிகொண்டார். ராவல் பிண்டி என்னும் இடத்திலுள்ள போர் முகாம் சிறையில் அடைக்கப்பட்டார் திலிப். சிறைக்கு சென்ற பின் இங்கிருந்து எப்படியாவது தப்பித்தாகவேண்டும் என நினைத்து. சிறையில் தனக்கு கிடைக்கின்ற சிறு சிறு பொருட்களை எல்லாம் வைத்து திலிப், போர் சிறையிலி்ருந்து தப்பிக்க திட்டம் தீட்டினார். திலிப்புடன் அவரது இரண்டு நண்பர்களான லியுடெனண்ட் மல்வீந்தர் சிங், ஹரிஷ் சிஞ்சி சிறையிலிருந்து தப்பிக்க ஒன்று சேர்ந்தனர். திலிப் இவர்களுக்கு தலைமை ஏற்று திட்டம் தீட்டியுள்ளார். பிடிப்பட்ட ஒரு வருடம் கழித்து ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி 1972ஆம் ஆண்டு போர் முகாம் சிறையிலிருந்து இந்த மூன்று வீரர்களும் வெற்றிகரமாக தப்பித்தனர். சிறையிலிருந்து அருகிலுள்ள நெடுஞ்சாலைக்கு வந்த வீரர்கள் கைபர் பகுதி சென்றனர். அங்கிருந்து பேருந்தில் பெஷாவருக்கு சென்றனர். இந்த மூன்று வீரர்களும் பெஷாவரிலிருந்து எப்படியாவது அஃப்கானிஸ்தானுக்கு சென்றுவிட வேண்டும் என்று எண்ணினார்கள். ஆனால், விதி அவர்களை விடவில்லை. அவர்கள் சென்றடைய வேண்டிய இடத்திற்கு சரியாக8 கிமீ முன்பாக ஜம்ருத் என்னும் பகுதியில் மீண்டும் பாகிஸ்தான் வீரர்களால் பிடிபட்டனர். இதன்பின் மீண்டும் எதாவது அந்த வீரர்களிடம் சொல்லி தப்பிக்கலாம் என நினைக்கும்போது அப்பட்டமாக இவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் எதோ நடந்திருக்கிறது என்று தெரிய வந்துள்ளது. இந்திய வீரர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இதனையடுத்து ராவல்பிண்டி முகாமுக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்படு சிறையில் அடைக்கிறார்கள். ஜுல்பிஹார் அலி பூட்டோவின் உத்தரவின் பேரில் சிறிது நாட்கள் கழித்து ஃபைசலாபாத் சிறைக்கு மாற்றப்பட்டு, பின்னர் கௌரவமாக இவர்கள்விடுவிக்கப்பட்டார்கள். டிசம்பர் 1 1972ஆம் ஆண்டு வாகா எல்லையில் வீர வணக்கத்தால் இவர்களை வர்வேற்கப்பட்டார்கள். அம்ரிஸ்டர் வந்த இவர்கள் விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பட்டனர். அங்கு சென்றதும் அவர்களை வரவேற்க கண்ணீருடன் அவர்களது குடும்பத்தார்கள் காத்துகொண்டிருந்தார்கள்.

abinandhan Pakistan surgical strike pulwama attack
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe