Skip to main content

"அது மறக்கவே முடியாத நினைவுகள்"- மனம் திறந்த திவ்யா துரைசாமி

Published on 14/10/2022 | Edited on 14/10/2022

 

"Those are unforgettable memories" - Divya Duraisamy opens her mind!

 

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான திவ்யா துரைசாமியை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். 

 

அப்போது அவர் கூறியதாவது, "எனக்கு பிடித்து தான் சினிமாவுக்கு வந்துருக்கேன். செய்தி வாசிப்பாளராக நிறைய தொலைக்காட்சி சேனல்களில் பணியாற்றியுள்ளேன். செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய போது, படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இது கடினமானது என்றாலும், மகிழ்ச்சியடைகிறேன். சினிமாக்குள் வருபவர்களுக்கு நடிகையாக வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். பாண்டிய ராஜ் சார் படம், சன் பிக்சர்ஸ் புரொடெக்சன்னு சொல்லும் போது, யார் தான் வேண்டாம்னு சொல்லுவாங்க. எனக்கு பிடித்துத் தான் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தேன்.

 

ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு பொலிட்டிகள் ஸ்டாண்ட் இருக்கணும்; எனக்கும் இருக்கிறது. நான் செய்தி வாசிப்பாளராக இருந்த போது, நான் கூறிய ஒரு கருத்துக்காக, என்னுடைய தொலைபேசி எண்ணை எடுத்து போர்ன் இணையதளத்தில் பதிவிட்டு விட்டார்கள். எனினும், நான் இன்னும் தொலைபேசி எண்ணை மாற்றவில்லை. அதே எண்ணை தான் தற்போதும் வைத்திருக்கிறேன். எதற்காக என்னுடைய தொலைபேசி எண்ணை மாற்ற வேண்டும்? நான் ரொம்ப மன உளைச்சலை சந்தித்தேன். தொடர்ச்சியாக, என்னுடைய தொலைபேசிக்கு அழைப்பு வந்துக்கிட்டே இருந்தது; அதை சமாளித்தேன். 

 

எதற்கும் துணிந்தவன் படத்தில் எல்லாரோடயும் எனக்கு தனித்தனி சீன் இருக்கும். இருப்பினும், படத்தின் பாதிக்கு பிறகு வரும் ஷாட்டில் எல்லாருமே இருப்பார்கள். என்னை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பார்கள். நடுவில் நின்று கொண்டு கதை சொல்லிக்கொண்டு இருப்பேன். அது மறக்கவே முடியாத நினைவுகள். கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது, அ.தி.மு.க. நிகழ்ச்சிகளில் பெரும்பாலானவையை நான் தொகுத்து வழங்கியுள்ளேன். ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்கிறார்கள் என்றால், முதல் ஆளாக எனக்கு தகவல் கொடுத்து விடுவார்கள். இந்த தேதியை குறித்து கொள்ளுங்கள்; நான் இல்லை என்று சொன்னால், இந்த நிகழ்ச்சியை நீங்கள் தொகுத்து வழங்க வேண்டும் என்பார்கள். முதலமைச்சரின் விருப்பம் என்பார்கள். 

 

எனக்கு தமிழினால் கிடைத்த அங்கீகாரம் என்று நான் நினைக்கிறேன். சுதந்திர தினம், குடியரசு தினம், புதிய மாவட்டங்கள் உருவாக்கம், புதிய கல்லூரிகள் தொடக்கம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுதி வழங்கியுள்ளேன். எடப்பாடி பழனிசாமி சார் முதலமைச்சராவதற்கு முன்பு வரைக்கும் எவ்வளவு பேருக்கு அவரை தெரியும் என்று நமக்கு தெரியாது. ஆனால், முதலமைச்சரானதில் இருந்து ஒட்டுமொத்த கட்சியையும், பொதுமக்களையும் தன்னை கவனிக்க வைத்து, நான்கரை ஆண்டு கால ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தது வேற லெவல். நான் பார்த்த வரைக்கும் ஓ.பன்னீர்செல்வம் ரொம்ப அமைதியானவர். நிகழ்ச்சிகளில் அமைதியாக இருப்பார்." இவ்வாறு அவர் தெரிவித்தார். 

 

Next Story

"சூர்யா பிறந்தநாள்...செட்டுக்கு வந்த ஜோதிகா..."-  திவ்யா துரைசாமி பகிரும் சுவாரசியங்கள்

Published on 14/10/2022 | Edited on 14/10/2022

 

"Surya's birthday.... Jothika came to the shed..."- Divya Duraisamy lively interview!

 

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான திவ்யா துரைசாமியை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். 

 

அப்போது அவர் கூறியதாவது, "பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்களை அடிக்கடி திறந்து பார்க்க மாட்டேன். கடைசியாக, நடிகை நயன்தாராவின் பாப்பாவைப் பார்ப்பதற்காக, விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் திறந்து பார்த்தேன். பொதுமக்கள் நிறைய பேர், அவங்களுக்கு சம்பந்தமே இல்லாத, மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் கமண்ட் செய்கிறார்கள். அது தேவையே கிடையாது. அவங்களுடைய வாழ்க்கை, அவர்களுக்கு தெரியாதா, அவர்களின் குழந்தையை எப்படி, இந்த உலகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று. கமண்ட் செய்ய நாம யாரு. 

 

சூர்யா சார் பற்றி பேசினால், என்னிடம் நிறைய கன்டென்ட் இருக்கிறது. காலை 06.30 மணிக்கு ஷூட் ஆரம்பிக்கிறது என்றால், சூரியன் மறையும் வரை ஷூட் நடக்கும். நாங்கள் எல்லாரும் ஒரே ஹோட்டலில் தான் தங்கியிருந்தோம். சூர்யா சார் ஷூட் முடிந்து, 10 நிமிடங்களில் ரூமுக்கு சென்று ரெப்ரஷ் ஆகிட்டு, பின்னர் மாடிக்கு சென்று உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்துவிடுவார். சூர்யா பிறந்தநாள் அன்று காலை, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தேன். அப்போது, ஜெய் பீம், சூரரைப் போற்று வரிசையில் எதற்கும் துணிந்தவன் படமும் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்தேன். 

 

இன்னும் போகணும். போவதற்கு நிறைய இருக்கிறது; என்ன பண்ணிட்டோம் என்றார் சூர்யா. அவர் பெரிய நடிகர்,  அவர் சொல்ல வேண்டுமென்றே இல்லை. அப்போது, அவருக்கு உள்ளே எவ்வளவு தேடல் இருக்கிறது. ஏற்கனவே, அவர் பெரிய நடிகர், அவருக்கு இன்னும் முன்னாடி போக வேண்டும் என்ற எண்ணம், மிகவும் உத்வேகப்படுத்தக் கூடிய விஷயம். இது எப்போதும் என் நினைவில் வரும். சூர்யா சார் பிறந்த நாளுக்கு ஜோதிகா வந்திருந்த போது, சூர்யாவைப் பார்த்துக்கிட்ட விதம், காலையில் இருந்து செட்டுக்கு வந்து, கூடவே இருந்து ஷூட்டுக்கு போகும் போது அவர்கள் அங்கேயே இருப்பார்கள். ரொம்ப ஸ்வீட்டாக பேசுவார். 

 

ஜோதிகா எல்லாரோடயும் அக்கறையாகப் பேசுவார். அவர் பெரிய நடிகை. அவர் அதைக் கேட்க வேண்டும் என்று அவசியமில்லை. ஒவ்வொருவரையும் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்று கேட்பார். உணவு அனைவருக்கும் பரிமாறினார். எங்களுக்கும் ஜோதிகா தான் உணவு பரிமாறினார். சூர்யா பிறந்தநாள் கொண்டாட்டத்தை என்னால் மறக்கவே முடியாது. சூர்யா பிறந்தநாள் அன்று காலை முதல் இரவு 12.00 மணி வரை எல்லோரும் ஒன்றாக இருந்தோம். அதை மறக்க முடியாது. 

 

ஜெய் சூப்பரான நடிகர்; நன்றாக டயலாக் பேசிக் கொண்டிருப்பார்; பெஸ்ட் பர்ஃபார்மர். ஹரிஷ் கல்யாண் ரொம்ப  சின்சியரான நபர். ஹரிஷ் கல்யாணுடன் அதிகமாக பழகுவதற்கான வாய்ப்பு எனக்கு இல்லை. நான் பார்த்த வரைக்கும் அவர் அதிகமாக பேச மாட்டார். சத்யராஜ் சார், இளவரசன் சார், இரண்டு பேரும் செட்டில் இருந்தாங்கன்னா எனக்கு செம்ம ஜாலி. இரண்டு பேரும் பேச ஆரம்பித்துவிட்டார்கள் என்றால், நாம் கேட்டுக்கிட்டே இருக்கலாம். அப்படி பேசுவார்கள்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.