Advertisment

பிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா?

தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் கடந்த 2ஆம் தேதி திருச்சி லலிதா ஜூவல்லவரி நகைக்கொள்ளை. கொள்ளையர்களை பிடிக்க உடனே தனிப்படை அமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதில் திருவாரூரில் மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து சுரேஷ் என்பவர் செங்கம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அதனைத் தொடர்ந்து திருவாரூரைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்தான். மேலும் இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குருவித்துறை பகுதியை சேர்ந்த கணேசனையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisment

murugan

கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. நகைகளும் மீட்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியபோது சில தகவல்கள் கசிந்துள்ளன. அதைப்பற்றி போலீஸ்காரர் ஒருவர் கூறும்போது, சேலம் சிறையில் திருவாரூர் முருகனுக்கும், கொள்ளை வழக்கில் கைதான கணேசனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முருகன் வெளியே வந்ததும், கணேசனை ஜாமீனில் வெளியே எடுத்துள்ளான். பின்னர் நகைக்கொள்ளையில் கணேசனை துணைக்கு அழைத்து சென்றுள்ளான். மேலும் கணேசன் நன்றாக கார் ஓட்டுவான் என்று தெரிந்த முருகன் அவனை எங்கு சென்றாலும் அழைத்து செல்வானாம்.

கொள்ளையடித்த பணத்தில் முருகன் தெலுங்கு படம் ஒன்றை தயாரித்துள்ளான். அந்தப் படம் வெளியாகவில்லை. அதனைத் தொடர்ந்து இன்னொரு படம் தயாரிக்கும்போது கொள்ளை வழக்கு ஒன்றில் கைதானதால் அந்தப் படமும் பாதியில் நின்றது. மீண்டும் வெளியே வந்த முருகன், கொள்ளையடித்த பணத்தில் சுகமாக வாழ்ந்துள்ளான்.

Advertisment

போலீசார் விசாரணையில், சில நடிகைகளுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடிகையின் பெயர் அடிபடுவதால் போலீசார் குழப்பதில் உள்ளனர். தமிழ் இளம் நடிகை ஒருவருடன் முருகனுக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. முருகனின் தோற்றத்தை பார்த்த காவல்துறையினருக்கு’அந்த நடிகையுடன் தொடர்பு இருக்குமா? நடிகைகள் அந்த அளவுக்கு இறங்கி பழகுவார்களா’ என்று சந்தேகம்ஏற்பட்டுள்ளது. சினிமா எடுக்க வேண்டும் என்று ஆசை உள்ள முருகன், தான் இப்படி இருந்தால் சினிமா உலகம் தன்னை மதிக்காது என்று எண்ணிபிளாஸ்டிக் சர்ஜரி செய்தார். பின்னர், தான் கொள்ளையடித்த பணம், நகைகளில் டிசைன் டிசைனாக இருப்பதை காட்டி நடிகைகளை மயக்கியிருப்பார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் சம்மந்தப்பட்ட முருகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் தான் பணம் கொள்ளையடித்தது எப்படி, எந்த நடிகையுடன் தொடர்பு வைத்திருந்தார். கொள்ளையடித்த பணத்தை எப்படி பங்கு போட்டார் என்பது குறித்து தெரியவரும் என்கிறார்கள்.

Thiruvarur Actress Bengaluru Robbery Murugan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe