Skip to main content

பிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா?

Published on 16/10/2019 | Edited on 17/10/2019

தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் கடந்த 2ஆம் தேதி திருச்சி லலிதா ஜூவல்லவரி நகைக்கொள்ளை. கொள்ளையர்களை பிடிக்க உடனே தனிப்படை அமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதில் திருவாரூரில் மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து சுரேஷ் என்பவர் செங்கம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அதனைத் தொடர்ந்து திருவாரூரைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்தான். மேலும் இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குருவித்துறை பகுதியை சேர்ந்த கணேசனையும் போலீசார் கைது செய்தனர்.

 

murugan



கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. நகைகளும் மீட்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியபோது சில தகவல்கள் கசிந்துள்ளன. அதைப்பற்றி போலீஸ்காரர் ஒருவர் கூறும்போது, சேலம் சிறையில் திருவாரூர் முருகனுக்கும், கொள்ளை வழக்கில் கைதான கணேசனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முருகன் வெளியே வந்ததும், கணேசனை ஜாமீனில் வெளியே எடுத்துள்ளான். பின்னர் நகைக்கொள்ளையில் கணேசனை துணைக்கு அழைத்து சென்றுள்ளான். மேலும் கணேசன் நன்றாக கார் ஓட்டுவான் என்று தெரிந்த முருகன் அவனை எங்கு சென்றாலும் அழைத்து செல்வானாம். 


 

 

கொள்ளையடித்த பணத்தில் முருகன் தெலுங்கு படம் ஒன்றை தயாரித்துள்ளான். அந்தப் படம் வெளியாகவில்லை. அதனைத் தொடர்ந்து இன்னொரு படம் தயாரிக்கும்போது கொள்ளை வழக்கு ஒன்றில் கைதானதால் அந்தப் படமும் பாதியில் நின்றது. மீண்டும் வெளியே வந்த முருகன், கொள்ளையடித்த பணத்தில் சுகமாக வாழ்ந்துள்ளான். 


 

 

போலீசார் விசாரணையில், சில நடிகைகளுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடிகையின் பெயர் அடிபடுவதால் போலீசார் குழப்பதில் உள்ளனர். தமிழ் இளம் நடிகை ஒருவருடன் முருகனுக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. முருகனின் தோற்றத்தை பார்த்த காவல்துறையினருக்கு ’அந்த நடிகையுடன் தொடர்பு இருக்குமா? நடிகைகள் அந்த அளவுக்கு இறங்கி பழகுவார்களா’ என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சினிமா எடுக்க வேண்டும் என்று ஆசை உள்ள முருகன், தான் இப்படி இருந்தால் சினிமா உலகம் தன்னை மதிக்காது என்று எண்ணி பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார். பின்னர், தான் கொள்ளையடித்த பணம், நகைகளில் டிசைன் டிசைனாக இருப்பதை காட்டி நடிகைகளை மயக்கியிருப்பார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் சம்மந்தப்பட்ட முருகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் தான் பணம் கொள்ளையடித்தது எப்படி, எந்த நடிகையுடன் தொடர்பு வைத்திருந்தார். கொள்ளையடித்த பணத்தை எப்படி பங்கு போட்டார் என்பது குறித்து தெரியவரும் என்கிறார்கள். 
 

 

Next Story

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்; முக்கிய தகவலை வெளியிட்ட என்.ஐ.ஏ.!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
new information released about bengaluru hotel incident by nia

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

new information released about bengaluru hotel incident by nia

இந்தச் சம்பவம் பெங்களூர் நகரத்தையே பரபரப்பில் ஆழ்த்திய நிலையில், ராமேஸ்வரம் கஃபே சுற்று வட்டாரப் பகுதிகளில் பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலுக்கு மர்ம நபர் ஒருவர் வருவதும், பையை வைத்துவிட்டு வெளியே செல்வது தொடர்பான சி.சி.டி.வி. காட்சி வெளியாகி இருந்தன. மேலும் சந்தேகப்படும் நபரின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சிகள் ஆகியவையும் வெளியிடப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதே சமயம் உணவகத்தில் வெடிகுண்டு வைத்தவர் குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ. 10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் எனத் தேசியப் புலனாய்வு முகமை அறிவித்திருந்தது.

இந்நிலையில், ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) மூன்று மாநிலங்களில் பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது. இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) நேற்று (27.03.2024) மூன்று மாநிலங்களில் பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். கர்நாடகாவில் 12, தமிழ்நாட்டில் 5 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் ஒன்று உட்பட மொத்தம் 18 இடங்களில் என்.ஐ.ஏ. குழுக்கள் சோதனை செய்த பின்னர் முஸம்மில் ஷரீப் கைது செய்யப்பட்டு துணை குற்றவாளியாக காவலில் வைக்கப்பட்டார்.

new information released about bengaluru hotel incident by nia

கடந்த மார்ச் 3 ஆம் தேதி இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. முக்கிய குற்றவாளியான முசாவிர் முன்னதாகவே என்.ஐ.ஏ.வால் அடையாளம் காட்டப்பட்டார். குண்டுவெடிப்பை நடத்தியவர் ஷசீப் உசேன். மற்றொரு சதிகாரரான அப்துல் என்பவரையும் என்.ஐ.ஏ. அடையாளம் கண்டுள்ளது. மற்ற வழக்குகளில் என்.ஐ.ஏ. ஏஜென்சியால் தேடப்பட்டவர் மதின் தாஹா. இவர்கள் இரண்டு பேரும் தலைமறைவாக இருக்கிறார்கள். மார்ச் 1 ஆம் தேதி பெங்களூரு புரூக்ஃபீல்டில் உள்ள ஐடிபிஎல் சாலையில் உள்ள கபேயில் ஐ.இ.டி. வெடிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவருக்கு முஸம்மில் ஷரீப் தளவாட ஆதரவை வழங்கியதாக என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் பல வாடிக்கையாளர்கள் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள் காயமடைந்தனர். அவர்களில் சிலர் கடுமையாக, வெடிவிபத்தில் சிக்கினர். மேலும் ஹோட்டல் சொத்துக்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

new information released about bengaluru hotel incident by nia

இந்த மூன்று குற்றவாளிகளின் வீடுகளிலும், மற்ற சந்தேக நபர்களின் வீடுகளிலும், கடைகளிலும் இன்று (28.03.2024) சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது பணம் மற்றும் பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. தலைமறைவான குற்றவாளிகளைப் பிடிக்கவும், குண்டுவெடிப்புக்குப் பின் உள்ள பெரிய சதியைக் கண்டறியவும் முயற்சிகள் நடந்து வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

‘டிஜிட்டல் இந்தியா’ - அதிர்ச்சி அனுபவத்தைப் பகிர்ந்த நடிகை

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
hina khan beggar incident

பாலிவுட்டில் தொலைக்காட்சி தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் மற்றும் ஆல்பம் வீடியோக்களிலும் நடித்து வருகிறவர் நடிகை ஹினா கான். மேலும் டேமேஜ்டு 2 வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் யாசகர் ஒருவரின் செயல் குறித்து பதிவிட்டிருந்தார். அது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் பதிவில், “நான் சிக்னலில் கிரீன் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நபர் என் கார் கதவை தட்டினார். கொஞ்சம் பணம் கொடுத்து உதவ முடியுமா என்று கேட்டார். என்னிடம் பணம் இல்லை என்றேன். வீட்டில் தம்பி, தங்கைகள் இருக்கிறார்கள். தயவு செய்து ஏதாவது உதவுங்கள் என்றார். நான் மீண்டும் என்னிடம் பணம் இல்லை. ஸாரி என்றேன். கூகுள் பே இருக்கு மேடம். அந்த நம்பர் தருகிறேன் என்றார். அது எனக்கு அதிர்ச்சியளித்தது. 

பின்பு அவருக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்ப முயற்சிக்கும் போது, ஒரு வாரத்துக்கான ரேஷன் பொருட்கள் வாங்க பணம் அனுப்புங்க மேடம் என்றார். இது என்னை மேலும் அதிர்ச்சியாக்கியது. டிஜிட்டல் இந்தியா தற்போது சிறந்ததாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.