Advertisment

'இந்த அரசாங்கம் யாருக்கானது... ' 97 சதவீத மக்களுக்கா அல்லது மூன்று சதவீத மக்களுக்கா..? - திருமுருகன் காந்தி சீற்றம்!

ர

மனுநீதி தொடர்பாக சர்ச்சைஎழுந்த நிலையில், பாஜகவினர் திருமாவளவனுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார்கள். இதனை எதிர்த்தும் மனுநீதியைத் தடைசெய்யவலியுறுத்தியும் சென்னையில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திருமுருகன் காந்தி பாஜகவினரை கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

Advertisment

அவரின் பேச்சு வருமாறு, "ஊரடங்குக்குப் பிறகு இந்த மாதிரி கூட்டங்களில் கலந்துகொள்ள வழி ஏற்படுத்திக் கொடுத்த தோழர்களுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாதிரியான உரையாடல்கள் இல்லை என்றால் நம்மால் இருக்க முடியாது. எவ்வளவு காலம்தான் இணையத்தில் மட்டுமே பேசிக்கொண்டு இருப்பது. மிகக் குறைவான கூட்டம் என்று சிலர் கூறினார்கள், ஆனால் அது முக்கியம் இல்லை. கருத்தை எடுத்துச் செல்பவர்களின் மன தைரியம் தான் மிக முக்கியம். இத்தகைய தடை செய்ய வேண்டிய புத்தகத்தை பற்றி நான் வேலூர் சிறையில் இருந்து வெளியே வந்த போது அதைப்பற்றிதான் பேசினேன்.

Advertisment

மனு தர்மத்தில் என்வெல்லாம் சொல்லி இருக்கிறார்கள் என்பதைப் பற்றி எடுத்துக் கூறியதற்காக என் மீது ஒரு வழக்குப் பதியப்பட்டிருக்கிறது. எதற்காக வழக்குப் போட்டுள்ளார்கள் என்பது நீதிமன்ற விசாரணையில் தான் முறையாகத் தெரியவரும். அதற்காகக் காத்துக்கொண்டு இருக்கிறேன். நாம் அவர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்க வேண்டியுள்ளது. இந்த நாடு யாருடையது என்று. இதுதான் அவர்களிடம் கேட்க வேண்டிய அடிப்படை கேள்வியாக இருக்கிறது.

இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில்இருந்து இருக்கக் கூடிய மையக்கேள்வி இந்த நாடு உன்னுடையதா அல்லது என்னுடையதா என்பதுதான். இந்த அரசாங்கம் உன்னுடையதா அல்லது என்னுடையதா? இந்த பண்பாடு யாருடையது போன்ற கேள்விகளுக்கு முதலில் விடை கிடைக்க வேண்டும். இந்த நிலத்தின் விடுதலைக்காகப் போராடியது இந்த மூன்று சதவீத கூட்டமா அல்லது இந்த 97 சதவீதகூட்டமாக என்று முதலில் பார்க்க வேண்டும். இந்த தமிழ்நாடு உனக்கில்லை எனக்கு என்பதை திருமா நிரூபித்துள்ளார். அதுதான் இன்றைக்குத் தொடர் விவாதமாக தமிழகத்தில் தொடர்ந்து இருந்து வருகின்றது.

இந்த நிலம் யாருடையது, உரிமை யாருடையது என்பதை உலகத்துக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய ஒரு தலைமை தமிழகத்துக்கு இன்றைக்குத் தேவைப்படுகின்றது. சிறைக்கு அஞ்சுபவன் இந்தக் களத்தில் நிற்கக் கூடாது. இங்கு இருப்பவர்கள் யாரும் அதற்குப் பயப்படுபவர்கள் இல்லை என்பதை மன மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். வழக்குக்கு அஞ்சுபவர்கள் இங்கே வரவும் கூடாது.

cnc

'மனு' என்பது என்ன என்பதை முதலில் தெளிவாகப் பார்க்க வேண்டும். துக்ளக் ஆசிரியர் எழுகிறார், பல ஆட்சியாளர்கள் இந்த நிலத்தை ஆட்சி செய்திருந்தாலும் உண்மையாக இந்த நிலத்தை ஆட்சி செய்தது மனு தான் என்று எழுதுகிறார். அவர் சொல்வது உண்மைதான். இத்தனை ஆண்டுகாலம் இந்த நிலத்தை ஆட்சி செய்தது, மனுதான் என்பதை ஒப்புக்கொள்ள தான் வேண்டும். இந்த நிலத்தை குப்தர் முதல் இன்றைக்கு வரை யார் வேண்டுமானாலும் ஆண்டிருக்கலாம். ஆனால் எழுதப்படாத சட்டமாக மனுதான் இருந்துள்ளது. அதன் ஆட்சிதான் இத்தனை ஆண்டுகாலம் நடைபெற்று வருகிறது. அதைத்தான் குருமூர்த்தி இன்றைக்குக் கூறி இருக்கிறார்.

அதனை அப்புறப்படும் பணியைத்தான் நாம் இன்றைக்கு மேற்கொள்ள வேண்டும். அதற்காகத்தான் நாம் இன்றைக்கு ஒன்று கூடி போராடிக் கொண்டிருக்கிறோம். மனு ஆட்சி செய்தபோது யாருக்காவது போதுமான கல்வி கிடைத்ததா? அடிப்படை உரிமை கிடைத்ததா என்றால் அப்படி எந்த உரிமையும்கிடைக்கவில்லை. அதற்காகப் போராட வந்துள்ளோம். இந்தப் போராட்டத்தில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம்" என்றார்.

thiruma valavan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe