சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

Advertisment

கத

இதன் உச்சகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு அமலில் இருந்தும் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகின்றது. இதனை குறைக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே மத்திய, மாநில அரசுகள் உணப்பொருள்கள் வழங்கப்படும் என்றும், மாநில அரசுகள் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இந்நிலையில் இதுதொடர்பாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியிடம் பல்வேறு கேள்விகளை நாம் முன் வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில்கள் வருமாறு,

Advertisment

கரோனா தொற்று காரணமாக பிரதமர் 21 நாள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார். இரண்டு நாட்கள் நிறைவடைந்துள்ளது. இன்னும் நீண்ட நாட்கள் நாம் அதனை கடக்க வேண்டியுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக தொடர்ந்து வெளியே செல்கிறார்கள். காவலர்களும் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களை அடிக்கும் காட்சிகளை பார்திருப்பீர்கள். கைக்கூப்பி சொல்லியும் கேட்காததால் இந்த மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டி இருப்பதாக காவலர்கள் அதற்கு காரணமாக கூறுகிறார்கள். இந்த நோயின் தாக்கம் பற்றியும் முன்னெச்சரிக்கை பற்றியும் உங்கள் கருத்து?

ரொம்ப தீவிரமாக இந்த நோயின் தாக்கம் இருக்கின்றது. இதற்காக நாம் வீடுகளில் தனிமைபட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பொது இடங்களுக்கு செல்வதையோ, உறவினர்களை சந்திப்பது என்பதோ சாத்தியமில்லை. அதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக இளைஞர்களை விட முதியவர்களை தீவிரமாக இது பாதிக்கின்றது. அதற்காக சில கடினமான முடிவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அரசுகள் தெரிவித்து வருகின்றன. இதற்காக இந்த 21 நாள் லாக் டவுனை கொண்டு வந்துள்ளார்கள். ஆனால் இதில் பாதிக்கப்படும் ஏழை எளியவர்களுக்கு, அன்றாடம் காட்சிகளுக்கும் அரசாங்கம் என்ன செய்ய இருக்கின்றது என்பது மிக முக்கியமான ஒன்று. இந்த இடைப்பட்ட நாட்களுக்கு 5 கிலோ அரிசியும், 1 கிலோ பருப்பும் தருவதாக சொல்கிறார்கள். அவர்கள் தரும் உணவுப்பொருட்கள் இந்த 21 நாட்களுக்கு போதுமா? பெரும்பாலான மக்கள் ஏழைகளாக இருக்கும் இந்த நாட்டில் இது எப்படி போதுமானதாக இருக்கும்.

Advertisment

இந்த நோய் ஒன்றும் திடீர் என்று வரவில்லை. மூன்று மாதங்களாக எல்லா நாடுகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியதை நாமே நேரில் பார்த்தோம். அப்படி இருக்கையில் இது திடீரென்று வந்ததாக நினைக்க தேவையில்லை. பாதுகாப்பு நடவடிக்கைகளை முடிந்த அளவு முன்னரே எடுத்திருக்கலாம். இந்த பாதிப்புக்கள் கூட ஏற்படாமல் தடுத்திருக்கலாம். கரோனா வந்தால் 21 நாட்களில் சாகறீங்க... பசி வந்தால் 4 நாட்களில் செத்துவிடுவார்களே, குழந்தைகள் தாங்குவார்களா? இதையெல்லாம் அரசுகள் உணர வேண்டாமா? இந்த நிகழ்வு தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.