Skip to main content

காட்டுமிராண்டிகளா இவர்கள்? தொடைநடுங்கிகள்! - விளாசும் திருமுருகன் காந்தி

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

 Thirumurugan Gandhi Interview

 

சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பகிர்ந்து கொள்கிறார்.

 

அரசியலில் கோபம் இருக்கலாம். ஆனால் கண்ணியக் குறைவு எப்போதும் இருக்கக்கூடாது. தலைக்கு விலை வைக்கும் வேலையை இவர்கள் செய்து வருகிறார்கள். இவர்கள் என்ன காட்டுமிராண்டிங்களா? யாராவது விமர்சனம் செய்தால் அவர்களை சிறையில் அடைக்கும் தொடை நடுங்கிகள் தான் இவர்கள். பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பலரை இதுபோன்று சிறையில் அடைத்துள்ளன உத்தரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிர மாநில பாஜக அரசுகள். இவர்கள் கருத்தியல் ரீதியாக உரையாடுவதாக இருந்தால் தமிழ்நாட்டில் இருக்கலாம். தலைக்கு விலை வைப்பதாக இருந்தால் வடமாநிலம் சென்றுவிடலாம். 

 

தமிழ்நாட்டு மக்கள் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டார்கள். சனாதன எதிர்ப்பு பற்றி உதயநிதி ஸ்டாலின் மட்டும் பேசவில்லை. அவருக்கு முன்பு பலரும் அதைப் பேசியுள்ளனர். சனாதனம் பின்பற்றப்பட்டிருந்தால், இன்று உதயநிதிக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசும் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் மேடையேறி இருக்கவே முடியாது. உத்தரப்பிரதேச சாமியாரின் பேச்சை எதிர்க்கும் அண்ணாமலை, ஜனநாயகவாதி போல் நடிக்கிறார். அவருடைய கட்சியின் நிலைப்பாடு அதுவல்ல. 

 

வட மாநிலத்தில் செய்யும் அரசியலை பாஜக இங்கு செய்தால் அது எடுபடாது. தமிழர்கள் படித்தவர்கள். உமா ஆனந்தனை இன்னும் ஏன் இந்த அரசு கைது செய்யவில்லை? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரானவர் உதயநிதி. அவருடைய தலையை வெட்ட வேண்டும் என்கிற கருத்தை ஆதரித்து பேசுகிறார் உமா ஆனந்தன். இப்படி வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது இவர்கள் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். சனாதனம் என்பது மக்களைக் குறிக்கும் சொல் அல்ல. சனாதனம் என்கிற வார்த்தையை இந்துக்கள் பயன்படுத்துவதில்லை. 

 

இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவது போல, இந்து மதத்தின் பெயரை சனாதனம் என்று இவர்களால் மாற்ற முடியுமா? தலையை வெட்டுவேன், நாக்கைப் பிடுங்குவேன், கண்ணை நோண்டுவேன் என்று பேசி வரும் இவர்கள் காட்டுமிராண்டிகள் தான். உலகின் எந்த நாட்டிலும் இவ்வாறு அரசியல் தலைவர்கள் பேசுவதில்லை. இவை அனைத்தையும் திமுக அனுமதித்துக் கொண்டிருக்கிறது. இப்படி கீழ்த்தரமாக பேசும் நபர்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டின் அரசியல் நிலை மோசமாகும்.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் உதயநிதி பிறந்தநாள்; எம்எல்ஏ தலைமையில் ரத்த தானம்!

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Blood donation lead by MLA or Minister Udhayanidhi  birthday in Cuddalore

 

கடலூரில் திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுக சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். 

 

முன்னாள் மாவட்ட பொருளாளர் வி.எஸ்.எல். குணசேகரன், அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முகாமில் இளைஞர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர். இதில் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதி பெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா குணசேகரன், கர்ணன், சரத் தினகரன், மகேஸ்வரி, விஜயகுமார், பாருக் அலி, கீர்த்தனா, ஆறுமுகம், ராதிகா, பிரேம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மருத்துவர் பிரவீன் ஐயப்பன் செய்திருந்தார்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

''எனக்கு விருப்பம் இல்லை'' - மறுத்த அமைச்சர் உதயநிதி

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

 "I have no choice" - Minister Udayanidhi refused

 

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் 46 வது பிறந்தநாள் திமுகவினர் மத்தியில் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ‘குடியரசுத் தலைவர், ஆளுநர் அதிகாரங்கள்’ என்ற புத்தகத்தை முதல்வருக்கு வழங்கினார்.

 

தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, சி.வி.சண்முகம், தா.மோ. அன்பரசன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர். இதனையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தார்.

 

இந்நிலையில் காரில் ஏறிய உதயநிதியை சூழ்ந்துகொண்ட செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 'முதலில் நடிகர், பின்னர் எம்.எல்.ஏ இப்போது அமைச்சராக இருக்கீங்க இந்த பிறந்தநாளை எப்படி பாக்குறீங்க?' என்ற கேள்விக்கு, ''எல்லா பிறந்தநாளை போன்றுதான் இந்த பிறந்தநாளும். இந்த பிறந்த நாளில் கொஞ்சம் கூடுதல் பொறுப்பு. காலையில் இருந்து தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சமூகநீதி காவலர் வி.பி.சிங் சிலையை முதல்வர் திறந்து வைத்துள்ளார்'' என்றார்.

 

'உங்கள் பிறந்த நாளில் தொண்டர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, ''டிசம்பர் 17 சேலத்தில் நடக்கும் மாநாட்டை வெற்றியடைய செய்ய வேண்டும். அந்த பொறுப்பை முதல்வர் இளைஞரணிக்கு கொடுத்துள்ளார்'' என்றார்.

 

'சார் உங்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என தொண்டர்கள் சிலர் சொல்கிறார்களே' என்ற கேள்விக்கு, 'எந்த தொண்டர் சொன்னாங்க' என்றார். போஸ்டர் எல்லாம் ஒட்டியிருக்காங்க, என செய்தியாளர் சொல்ல ''எங்க ஒட்டியிருக்காங்க'' என உதயநிதி கேட்க, அண்ணா அறிவாலயம் முன்பே ஒட்டியிருக்காங்க என செய்தியாளர் சொன்னார். அதற்கு ''நான் பார்க்கவில்லை பார்த்துவிட்டு சொல்கிறேன். எனக்கு விருப்பம் இல்லை'' என்றார்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்